ஒரே கூட்டத்தில் உள்ளுக்குள்ளேயே பிரிவினைகள் இருக்ககூடாது என்பதை வலியுருத்தும்படிக்கு நம் இரட்சகராகிய இயேசு இவ்வாறு கூறுகிறார்:
மாற் 3:24ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.
ஆனால் இன்று "ஆவிக்குரியவர்கள்" என்றும் "கிறிஸ்த்துவின் சரீரம்" என்றும் தங்களை சொல்லிகொள்ளும் கிறிஸ்த்தவ சகோதரர்களின் சபைக்குள் ஏகப்பட்ட பிரிவினைகள் மாறுபாடான உபதேசங்கள், மார்க்க பேதங்கள் தனிப்பட்ட தாக்குதல்கள் பொறாமைகள் போன்றவைகள் நிறைந்து காணப்படுகிறதே.
இவ்வாறு வெளியில் இருக்கும் ஆட்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு தங்களை தாங்களே தாக்கி கொண்டு தனக்குள்ளேயே இத்தனை பிரிவுகளை கொண்டுள்ள ராஜ்யம் எவ்வாறு நிலைநிற்க்கும்?
I கொரிந்தியர் 6:15உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா?
I கொரிந்தியர் 12:27நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
இவ்விதமான பலவித பணிகளை விசுவாசிகளாகிய அவயங்களுக்கு கிறிஸ்து தலையாக இருக்கிறார்.
எபேசியர் 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை (இயேசுவை) எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
இப்பொழுது நமது உடம்பை நாம் கற்ப்பனை பண்ணி பார்க்கலாம்!
நமது உடம்புக்கு தலை பிரதானமாக இருக்கிறது தலையில் இருக்கும்
மூளை சொல்லும் செயலை கேட்கும் அவயங்கள் அப்படியே கீழ்படிந்து செய்வதால்தான் நாம் ஒரு சுய அறிவுள்ள மனுஷர்களாக இருக்க முடிகிறது. இல்லையெனில் ஒரு கால் ஒருபக்கம் இழுக்கும் இன்னொரு கால் இன்னொரு பக்கம் இழுக்கும், நான் எங்குமே போக முடியாமல் எதுவுமே செய்யமுடியாத ஒரு நிலைக்கு போவோம்
சுருக்கமாக சொன்னால் "நமது அவயனானது எந்தவித பக்கவாதமும்
இல்லாமல் சரியாக உடம்போடும் தலையோடும் இணைந்திருக்கு மானால், அது தலை சொல்லும் பணியை நிச்சயம் சரியாக செய்யும்" அப்படி அது செய்யவில்லை என்றால் அது தலையின் தொடர்பு நிலையில் இருந்து துண்டிக்கபட்டு விட்டது என்றே பொருள்படும்.
நமது தலையில் உள்ள மூளையானது நார்மலாக இருந்தால் ஒரு கையை வைத்து இன்னொரு கையை வெட்டவோ அல்லது காலை வெட்டவோ அடிக்கவோ செய்ய சொல்லாது. அதுபோல் சபையின் தலையாக இருக்கும் கிறிஸ்த்துவும் அவரது அவயங்களாக இருக்கும் யாரையும் ஒருவரை ஒருவர் தாக்கி பிரிவினையோடு இருக்க அனுமதிக்க மாட்டார்.
ஆகினும் இங்கு அனேக குழப்பங்கள் சண்டைகள் உருவாகிறது என்றால் இங்கு பலர் கிறிஸ்த்துவின் அவயங்களாக அவரது ராஜ்யத்துக்குள் இல்லை" என்றுதான் பொருள்கொள்ளமுடியுமே அன்றி "தனக்கு தானே
பிரிந்திருப்பதாக" பொருள்கொள்ள முடியாது என்பதே என்னுடய கருத்து.
எனவே கிறிஸ்துவின் ராஜ்ஜியம் ஒருபோதும் தனக்கு தானே பிரிந்திருக்காது! மாறாக கலகம் பண்ணுகிறவர்களும் தலையாகிய கிறிஸ்த்துவின் கட்டளைக்கும் கற்பனைக்கும் கீழ்படியாத வர்களும் கிறிஸ்த்துவின் அங்கமாக அவருடய ராஜ்யத்துக்குள் இல்லை என்பதே உண்மை!
எனவே கிறிஸ்த்துவின் ராஜ்ஜியம் என்றென்றும் நிலை நிற்கும்
தானி 2:44அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின்தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்;
-- Edited by SUNDAR on Tuesday 13th of March 2012 09:53:31 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)