இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரலோக ராஜ்ஜியம் என்பது ஒன்றே ஒன்றுதானா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
பரலோக ராஜ்ஜியம் என்பது ஒன்றே ஒன்றுதானா?
Permalink  
 


விவிலியத்தில் மேலுலக ராஜ்யங்கள்  குறித்து பல செய்திகள் வருவதை பார்க்க முடிகிறது. 
.
நமது இயேசு பரலோக ராஜ்யத்தை குறித்தும் அதில் பிரவேசிப்பது குறித்தும் அதில் பிரவேசிப்பது குறித்தும்  அங்கு யார் பெரியவராக இருப்பார் என்பது குறித்தும் அதிகமான  வசனங்களில் சொல்லியிருக்கிறார்:
.
மத்தேயு 3:2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.
மத்தேயு 5:3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யமஅவர்களுடையது.
மத்தேயு 18:4 ஆகையால் இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
.
அத்தோடு அவர் தேவனுடய ராஜ்ஜியம் குறித்தும் சில இடங்களில் பேசியிருக்கிறார்:
.
யோவான் 3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற்கு 10:25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
லூக்கா 9:27 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
.
வசனப்படி வரும்  பரலோக ராஜ்ஜியம் மற்றும்   தேவனுடய  எல்லாமே  ஒன்றுதானா அல்லது விண்ணுலகில் வெவேறு ராஜ்யங்கள் இருக்கிறதா?  
 
இயேசு கிறிஸ்த்து இவ்வாறு கூறியிருக்கிறார்:
 
யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
.
தாவீது இவ்வாறு வாசஸ்தலங்கள் என்று பண்மையில் கூறுகிறார்
 
சங்கீதம் 84:1 சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்
.  
பவுல் எடுத்து கொள்ளபட்டது குறித்து கூறும்போது மூன்றாம் வானம் என்று குறிப்பிடுகிறார். 
 
II கொரிந்தியர் 12:2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்;
வசனம் சொல்வது எல்லாமே ஒரே ராஜ்யத்தை குறித்த செய்திதானா? 


-- Edited by Nesan on Saturday 25th of February 2012 04:58:00 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard