கடந்த வெள்ளிக்கிழமை பெண்கள் ஜெபத்துக்கு சென்று வந்த என் மனைவி மறுநாள் காலையில் உறங்கி கண்விழித்தபோது முதல்முதலில் ஆண்டவர் வார்த்தையை கேட்டுள்ளார். ஆண்டவர் சொன்னது "வருகைக்கு ஆயத்தமாகு" என்பதுதான் அந்த முதல் வார்த்தை! எப்படி ஆயத்தமாவது ஆண்டவரே? என்று மனதிலேயே கேட்டபோது "உண்மையும் உத்தமுமாயிறு" என்று சொல்லியிருக்கிறார்.
ஆதியாகமம் 17:1ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
மத்தேயு 25:21அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
இந்த காரியத்தை என்னிடம் சொன்ன என் மனைவி "நான் எல்லா காரியத்திலும் உத்தமமாயிருப்பதுபோல் தான் தெரிகிறது ஆகினும் ஆண்டவர் என்னை மீண்டும் மீண்டும் "உண்மையும் உத்தமுமாயிறு" என்று சொல்ல காரணம் என்ன? என்று கேட்டாள்.
நான் அவளிடம் "நீ செய்யும் செய்கையில் எல்லாம் உண்மையாக உத்தமமாக இருக்கிறாயா?"
மறைத்து மறைத்து ஒழித்து, எனக்கோ அல்லது பிறருக்கோ மறைவாக செய்யும் எல்லா காரியமுமே ஏறக்குறைய பாவமாகவே அமையும்.
எனவே, உன்னை நீயே அராய்ந்து பார் என்பதுபோல் சொன்னேன்.
சிறிது நேரத்தில் எனக்கு மறைவாக அவள் செய்த பல காரியங்களை ஆண்டவர் அவளுக்கு நினைவில் கொண்டு வந்தார்.
அதிகம் பணம் கொடுத்து மட்டன் வாங்கிவிட்டு என்னிடம் மறைத்து, குறைவான பணத்துக்குதான் வாங்கினேன் என்று சொன்னது.
நான் வீட்டில் இல்லாத சமயத்தில் ஏழாம் அறிவு திருட்டு வீசீடி வாங்கி போட்டு பார்த்தது
ஷாப்பிங் செய்த சாமான்களின் விலையை குறைத்து என்னிடம் சொன்னது
நான் வைத்திருந்த பணத்தை எனக்கு தெரியாமல் என் பாக்கெட்டில்
இருந்து எடுத்தது, போன்ற பல காரியங்கள்!
கூவத்தில் மூழ்கி குளிப்பதுபோல் பாவத்தில் மூழ்கி குளித்த நமக்கு இந்த காரியங்கள் எல்லாம் பார்வைக்கு ஒன்றுமில்லாததுபோல் தோன்றலாம், அனாலும் இவைகளும் தேவனின் பார்வைக்கு அருவருப்பானவைகளே!
ஆங்கிலத்தில் "TRANSPARENT" என்று சொல்வார்கள். அதாவது "ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக இருத்தல்" என்ற ஒரு நிலை. இந்த நிலையால் அனேக பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு ஆனால் தேவன் விரும்புவது அதுபோன்றதொரு நிலையே!
தொடர்ந்து ஆண்டவர் எதிர்பார்க்கும் "உண்மையும் உத்தமுமாயிருத்தல்"என்பது குறித்த விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடலாம்.
-- Edited by SUNDAR on Monday 27th of February 2012 09:33:58 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்னுடைய வாழ்வில் நான் அநேகரை பார்த்திருக்கிறேன் சிறு சிறு காரியத்துக்கு எல்லாம் தேவையில்லாமல் போய் சொல்வதும் மறைப்பதும் மாற்றி மாற்றி பேசுவது போன்ற காரியங்களை சகஜமாக செய்வார்கள். உதாரணமாக வீட்டில் இருந்து கொண்டு நான் வெளியில் இந்த இடத்தில் இருக்கிறேன் என்று சொல்வார்கள், தங்களை பெரியவர்களாக காட்டிக்கொள்ள இல்லாத காரியங்களை எல்லாம் கூட்டி சொல்வார்கள்.
ஏன் இப்படி செய்கிறீர்கள்? உள்ளதை உள்ளது என்று சொல்லுங்களேன் தேவையில்லாத பொய் எதற்கு? என்று சொன்னால், இது சின்ன விஷயம் தானே இதனால் எந்த பாதிப்பும் வராது என்பதுபோல் பேசுவார்கள்.
ஆனால் ஆண்டவர் சொல்வதை பாருங்கள்:
மத்தேயு 25:23கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்;
கொஞ்சமாகிய சிறிய காரியத்தில் நாம் உண்மையும் உத்தமமாகவும் இருந்தால் மட்டுமே பெரிய காரியங்கள் தேவன் நமக்கு வெளிப்படுத்தவும் ஒப்படைக்கவும் முடியும்.
புதிதாக வேலைக்கு வரும் ஊழியர்களை உண்மையானவர்களா என்று சோதிக்க, தவரவிட்ட்துபோல் சில முதலாளிகள் ரூபாய் நோட்டுகளை அவர்கள் முன்னர் போட்டு பார்த்து சோதிப்பது உண்டு. அதுபோல் இந்த உலகமும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை சோதிக்கும் ஒரு சோதனை களமே! நம்முடைய ஒவ்வொரு செய்கையும் ஒவ்வொரு சிந்தனயும்கூட சோதிக்கபடுகிறது. முதலில் சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் சோதனைகள் பிறகு பெரிய ஒரு நிலையை அடைகிறது. சிறிய காரியங்களிலேயே நாம் தோற்று போனால் பெரிய காரியங்களை யாரும் நம்மிடம் ஒப்படைக்க மாட்டார்கள்.
லூக்கா 16:11அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
சோதனையில் தோற்றாலும் ஜெயித்தாலும் தேவ பிள்ளைகளை ஆணடவர் மீட்டேடுத்துவிடலாம், ஆனால் பெரிய உண்மைகளை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் சிறு சிறு காரியங்களில் உண்மையும் உத்தமாமுயிருக்க கடவோம்!
II தீமோத்தேயு 2:15உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)