எங்கள் அலுவலகத்தில் இரண்டு டைரக்டர்கள் உண்டு. அதில் ஒருவரின் நடவடிக்கைகள் கம்பனிக்கு வோரோதமாக சற்று தவறாக இருப்பதால் அதைபற்றி இன்னொரு டைரக்டரிடம் அடிக்கடி நான் சொல்வதுண்டு. நான் பலமுறை அவ்வாறு சொல்லியும் அந்த இன்னொரு டைரக்டர் அதை குறித்து எந்த ரீஆக்சனும் காட்டவில்லை.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன ஆண்டவரே நான் இந்த டைரக்டர் நன்மைக்குத்தானே சொல்கிறேன் என்னிடம் "அப்படியா? அப்படியா?" என்று கேட்கும் இவர் அதை கண்டுகொள்ளவே இல்லையே என்று புலம்பினேன்.
இந்நிலையில் கடந்த நாளில் என்னைநான் ஆண்டவருக்கும் ஆராய்ந்து பார்த்துகொண்டு இருந்தபோது ஆண்டவர் இவ்வாறு உணர்த்தினார்.
"ஒரு சாத்தான் செய்யும் தவறை இன்னொரு சாத்தானிடம் சொல்லி யாராவது அனுதாபமோ அல்லது நன்மையோ பெற்றுவிட முடியுமா? நீ அந்த தவறைத்தான் செய்துகொண்டு இருக்கிறாய்" என்றுதெரிவித்தார்.
I கொரிந்தியர் 6:1உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
ஒரு மனுஷன் ஒரு விஷயத்தில் தவறு செய்கிறான் என்றால் இன்னொரு மனுஷன் இன்னொரு விஷயத்தில் தவறுகிறான். இருவருமே தவறானவர்கள்தான். இந்நிலையில் ஒருவர் செய்யும் தவறை இன்னொருவரிடம் நான் சொல்கிறேன். ஆனால் அந்த இன்னொருவரோ அதைவிட பெரிய தவறை செய்துகொண்டு இருக்கும்து, நாம் புகார் அளிக்கும் மனுஷனால் நமக்கு எந்த பயனும் விளையாது மாறாக இருவரும் சேர்ந்துகொண்டால் நம்மை வேலையை விட்டே நீக்கிவிட வாய்ப்புண்டு.
அதை குறித்து நான் தொடர்ந்து தியானித்தபோது, சில படங்களில் நாம் இப்படிபட்ட சம்பவங்களை பார்ப்பது ஞாபகத்துக்கு வந்தது:
கொடுமை இழைக்கபட்ட ஒருவர் அதற்க்குண்டான ஆதாரங்களை எல்லாம் எடுத்துகொண்டு ஓடோடி வந்து போலீஸ் ஸ்டேசனில் வந்து புகார் மனு கொடுப்பார். அந்த புகாரையும் அதற்க்குண்டான ஆதாரங்களையும் வாங்கிக்கொண்ட போலிஸ் காரார்கள் அந்த குற்றத்தை செய்தவனுக்கே போன் பண்ணி புகார் கொடுத்தவனை
பிடித்து அவன கையில் கொடுத்துவிடுவார்கள்.
இதற்க்கு ஒத்த நிலைதான் ஒருவரை பற்றி ஒருவரிடம் குறைகூறும் இன்றைய நிலையும் என்றால் மிகையாகாது.
யாரோ ஒருவரின் சரியில்லாத நடத்தையால் அல்லது ஒருவரின் கடுமையான குணத்தால் பாதிக்கப்படும் நாம், அதை நம்மேல் அனுதாபம் கொண்ட யாரிடமாவது எடுத்து சொல்லி அதன்மூலம் மன சமாதானமும் அனுதாபமும் பெறவும், யாரோ ஒரு மனுஷனால் நாம் படும் சங்கடத்தையும் துன்பத்தையும் இன்னொரு மனுஷனிடம் சொல்லி ஆறுதல் அடையவே நாம் விரும்புகிறோம். ஆனால் அந்த காரியம் தேவனின் பார்வையில் தவறான ஓன்று.
ஒரு மனுஷன் செய்யும் தவறையும் குற்றத்தையும் இன்னொரு உலக மனுஷனிடம் சொல்லி எந்த பயனும் இல்லை. பரத்தில் இருந்து அவனுக்கு அருளாவிட்டல் அவனால் நமக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஒரு சாத்தான் நமக்கு செய்த தீமையை இன்னொரு சாத்தானிடம் சொல்கிறோம் என்ற நோக்கில் நாம் கற்ப்பனை செய்து பார்த்தால் இந்த குறை கூறுதலையும் புறம்கூறுதலையும் நாம் செய்யவே மாட்டோம்.
எனவே அன்பானவர்களே உலக மனுஷர்களிடம் எந்த ஒரு காரியத்துக்கும் உலக மனுஷனிடம் அனுதாம் தேடாமல் தேவனிடம் சொல்லி அழுங்கள் அனுதாபம் தேடுங்கள். அதனால் நிச்சயம் பலன்
உண்டு!
அசரீரிய ராஜா எழுதி அனுப்பியே மோசமான நிருபத்தை எந்த மனுஷ நிடமும் காண்பிக்க விரும்பாத எசேக்கியா ராஜா தேவ சந்நிதியில் கொண்டு காண்பித்து
என்று சொல்லி புலம்பியபோது அந்த புலம்பலுக்கு அவனுக்கு கைமேல்
பலன் கிடைத்தது.
7. அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
வேறு எந்த மனுஷனிடம் அந்த நிருபத்தை காட்டி அனுதாபம் தேடியிருந்தாலும் அவன் தப்பித்திருப்பது கடினமே
எனவே அன்பானவர்களை ஒருவருடைய தாகாத காரியங்களினிமித்தம் அவரை பற்றி மன கசப்பு மற்றும் குறைகள் தங்களிடம் இருக்குமானால், அதை கண்ட சாத்தானின் ஆட்களிடமும் சொல்லிக் கொண்டு திரியாமல், தேவனிடம் முறையிடுங்கள் அவர் சீக்கிரமே சரியான நியாயம் செய்வார்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)