தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்ட ஜனங்களிடமும் மட்டுமல்ல, புறஜாதி மனுஷர்களிடமும் பேசுவார் என்பதற்கும் அவர்கள் மூலமும் தன் திட்டத்தை நிறைவேற்றுவார் என்பதற்கும் வேதத்தில் அனேக ஆதாரங்கள உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்!
1. தேவனின் திட்டத்தை நிறைவேற்ற சென்ற பார்வோன்!
தேவனிடம் நற்ப்பெயர் பெற்ற யோசியா என்னும் ராஜா, நீண்ட நாட்களுக்கும் பிறகு தேவனின் பஸ்கா பண்டிகையை விமர்சினையாக ஆசாரித்து பேறுபெற்றவன்
19. யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
இவ்வளவு பேறுபெற்ற இந்த ராஜாவானவன் தேவன் புறஜாதியாரால் கூட கிரியை செய்ய முடியும் அவர்கள் மூலம் கூட நம்மோடு பேச முடியும் என்ற என்ற உண்மையை அறியாமல் இருந்ததல ஒரு சமயம் தேவனின் செயலுக்கு எதிராக புறப்பட்டுபோய் இடறி இறந்து போக நேர்ந்தது.
அதாவது எகித்தின் ராஜாவாகிய பார்வோன் நோகோ தேவனின் கட்டளைக்கு கீழ்படிந்து ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டத்தின் மேல் யுத்தம்பண்ண புறப்பட்டுப்போனபொது, யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ் செய்யப் புறப்பட்டான். அப்பொழுது எகிப்த்தின் ராஜா ஸ்தனாதிபதிகள் மூலம் சொல்லியனுப்பிய தூது இதோ!
நாளாகமம் 35:21அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்;நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
ஆனால் இந்த யோசியா ராஜா பார்வோனின் வார்த்தைக்கு செவி கொடுக்கவில்லை
II இராஜாக்கள் 23:29அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்று போட்டான்.
இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவெனில், தேவன் கிறிஸ்தவர்களோடு மட்டும்தான் பேசுவார் மற்றவர்களோடு பேசமாடார் என்று எண்ணி பிறரை இளக்காரமாக எண்ணக்கூடாது.
ஒரு மனுஷனுக்கு புத்திபடிப்பிக்க வேண்டும் என்றால் ஒரு கழுதையை வைத்தோ அல்லது கல்லை வைத்தோகூட தேவன் அவனிடம் பேசமுடியும் என்ற உண்மையை அறிவது அவசியம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இதன் மூலம் நாம் அறியவேண்டியது என்னவெனில் யாரையும் அற்பமாக என்ன கூடாது. அந்நிய ஜாதியாரோடும் இடைபட்டு அவர்களை அபிஷேகித்து அவர்கள் மூலமும் தேவன் தன் செயல் பாடுகளை நிறைவேற்ற வல்லவர் என்பதை அறியவேண்டும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)