இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறஜாதியினரிடமும் பேசி கிரியை நடப்பிக்கும் தேவன்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
புறஜாதியினரிடமும் பேசி கிரியை நடப்பிக்கும் தேவன்!
Permalink  
 


தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்ட ஜனங்களிடமும் மட்டுமல்ல, புறஜாதி மனுஷர்களிடமும் பேசுவார்  என்பதற்கும்  அவர்கள் மூலமும் தன் திட்டத்தை நிறைவேற்றுவார் என்பதற்கும்  வேதத்தில் அனேக ஆதாரங்கள உள்ளன. அவற்றுள்  சிலவற்றை இங்கு பார்க்கலாம்!
 
1. தேவனின் திட்டத்தை நிறைவேற்ற சென்ற பார்வோன்!
     
தேவனிடம் நற்ப்பெயர் பெற்ற யோசியா என்னும் ராஜா, நீண்ட நாட்களுக்கும் பிறகு தேவனின் பஸ்கா பண்டிகையை  விமர்சினையாக ஆசாரித்து பேறுபெற்றவன்   
 
18. தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.

19. யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
 
இவ்வளவு பேறுபெற்ற இந்த ராஜாவானவன் தேவன் புறஜாதியாரால் கூட கிரியை செய்ய முடியும் அவர்கள் மூலம் கூட நம்மோடு பேச முடியும் என்ற என்ற  உண்மையை அறியாமல் இருந்ததல ஒரு சமயம் தேவனின் செயலுக்கு எதிராக புறப்பட்டுபோய் இடறி இறந்து போக நேர்ந்தது.   
 
அதாவது  எகித்தின் ராஜாவாகிய பார்வோன் நோகோ தேவனின் கட்டளைக்கு கீழ்படிந்து ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டத்தின் மேல் யுத்தம்பண்ண புறப்பட்டுப்போனபொது, யோசியா  அவனுக்கு  விரோதமாய் யுத்தஞ் செய்யப் புறப்பட்டான். அப்பொழுது எகிப்த்தின் ராஜா ஸ்தனாதிபதிகள் மூலம் சொல்லியனுப்பிய தூது இதோ!  
 
நாளாகமம் 35:21 அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்;நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
 
ஆனால் இந்த யோசியா ராஜா  பார்வோனின்  வார்த்தைக்கு செவி கொடுக்கவில்லை 
 
II இராஜாக்கள் 23:29 அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்று போட்டான்.

இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவெனில், தேவன் கிறிஸ்தவர்களோடு மட்டும்தான் பேசுவார் மற்றவர்களோடு பேசமாடார் என்று எண்ணி பிறரை இளக்காரமாக  எண்ணக்கூடாது. 
 
ஒரு மனுஷனுக்கு புத்திபடிப்பிக்க வேண்டும் என்றால் ஒரு  கழுதையை வைத்தோ அல்லது கல்லை வைத்தோகூட தேவன்  அவனிடம்  பேசமுடியும் என்ற உண்மையை அறிவது அவசியம்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
RE: புறஜாதியினரிடமும் பேசி கிரியை நடப்பிக்கும் தேவன்!
Permalink  
 


ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு பதிவை எழுதி உள்ளிர்கள் சகோதரரே......

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

"என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை" என்று சொல்லும் அதே தேவன்  எகிப்த்தியர்களையும்  "என் ஜனம்" என்று சொல்லியிருக்கிறார்!
 
ஏசாயா 19:25 அவர்களைக் குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும்,
 
புறஜாதியாராகிய அசீரியர்களை தேவன் "என் கரத்தின் கிரியை" என்று தேவன் சொல்கிறார்.
 
ஏசாயா 19:25  என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும்,
 
அந்நிய தேசமாகிய பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத் நேச்சாரை "என் உளியக்காரன்" என்று தேவன் சொல்கிறார்.
 
எரேமியா 43:10 அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி
 
புறஜாதியாராகிய பெர்சிய ராஜாவாகிய கோரேசுவை நான் அபிஷேகம் பண்ணினேன் என்று கர்த்தர் சொல்கிறார் 
 
ஏசாயா 45:1 கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி 
 
பேயோரின் குமாரனாகிய பிலேயாமுடன் தேவன் பேசி தன்னுடைய பிரியத்தை தெரிவித்து அவன் மூலம் இஸ்ரவேலை ஆசீர்வதித்தார்
 
எண்ணாகமம் 22:9 தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்
எண்ணாகமம் 22:12 அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்
 
வம்ச அட்டவணையிலேயே வராத மெல்கிசேதேக்கு உன்னதமான  தேவனின் ஆசாரியனாக இருந்தான்   
 
ஆதியாகமம் 14:18  உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
 
இதன் மூலம் நாம் அறியவேண்டியது என்னவெனில் யாரையும்  அற்பமாக என்ன கூடாது.  அந்நிய ஜாதியாரோடும் இடைபட்டு அவர்களை அபிஷேகித்து அவர்கள் மூலமும் தேவன் தன் செயல் பாடுகளை  நிறைவேற்ற வல்லவர் என்பதை அறியவேண்டும்
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard