"தேவன் பட்சபாதம் இல்லாமல் எல்லோரையுமே சமமாகவே பார்க்கிறார்" என்று வசனத்தின் அடிப்படையிலேயே கருத்து சொன்னாலும் அந்த கருத்தை பல கிரிஸ்த்த்தவர்கள் ஏற்றுக் கொள்ள
மனதில்லாமல் இருப்பதோடு அது அவர்களுக்கு வேதனையை தருவதாகவும் இருக்கிறது என்பது நான் பல கிறிஸ்த்தவர்களிடம் விவாதித்ததில் அறிந்துகொண்டு உண்மை. "எல்லோரும் மீட்கப்பட வேண்டும்" என்ற தேவனின் விருப்பத்தையும் சித்தத்தையுமே
தன்னுடயை சித்தமாக கொண்டிராதவர்கள் தேவனை எப்படி சரியாக
அறிய முடியும். அல்லது தேவன் அவர்களுக்கு தம்மைப்பற்றி எப்படி முழுமையாக வெளிப்படுத்து முடியும் என்பது புரியவில்லை.
அதுபோன்ற ஒரு எண்ணம் பல கிறிஸ்த்தவர்களுக்கு உருவாக கீழ்கண்ட முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
1. "தேவனுடய ஈவாலேயே நாம் ரட்சிக்கபட்டோம்" என்ற தாழ்மை இல்லாமல் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் தான் ஏதோ மேலானவன் என்ற என்று தன்னை தானே மேலாக உயர்த்தும் ஒரு பெருமையான எண்ணம்.
2." உன்னை நீ நேசிப்பதுபோல் பிறரையும் நேசி" என்ற வார்த்தை அடிப்படையில் நம்மைபோலவே மற்றவர்களும் எப்படியாவது தேவனை அறிந்துவிட வேண்டும் என்ற பரந்த மனதில்லாத குறுகிய மனப்பான்மை.
3. "தேவனுடையதை அவர் யாருக்கு எப்படி வேண்டுமானாலும்
கொடுக்க அதிகாரம் இருக்கிறது" என்பதை ஏற்க்க விரும்பாமல் நான் சுவிசேஷத்துக்கு கீழ்படிந்து இயேசுவை ஏற்றுக்கொண்டு தப்பித்து விட்டேன் எனவேஅவரை ஏற்றுக் கொள்ளாதவன் கண்டிப்பாக தண்டனை அடைய வேண்டும் என்ற வஞ்சக எண்ணம்.
4. "மற்றவர்களை குற்றவாழியாக தீக்காதிருங்கள்" என்று வசனம் சொல்லியும்வேத வசனத்தை கையில் எடுத்து பிறரை நியாயம் தீர்க்க துணியும் மனப்பாங்கு.
அவர்களின் இந்த நிலை ஆண்டவராகிய இயேசு சொல்லிய "மனம் திரும்பிய மைந்தன்" என்ற உவமையில் வரும், தந்தையோடு சேர்ந்து இருந்த மூத்த குமாரனையே நமக்கு நினைப்பூட்டுகிறது.
தந்தயைவிடடு பிரிந்து சென்று துன்மாக்கமாக ஜீவித்து ஆஸ்தியை அழித்துபோட்டு மீண்டும் திரும்பிவந்த கெட்ட குமாரனை அந்த தந்தை அன்போடு வரவேற்ப்பு மதிப்பு கொடுத்து அவனுக்காக வீட்டில் விருந்தும் வைக்கிறார். அந்த செய்கை மூத்த மாரனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. வெளியில் இருந்து வந்த மூத்த மகன் அங்கிருந்த வேலைக்காரனிடம் அது குரித்து விசாரிக்கிறான்.
27. அதற்கு அவன்(வேலைக்காரன்): உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
28. அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
இவ்வளவுநாள் தந்தையோடு சேர்ந்து இருந்தும் தந்தைக்கு கீழ்படிந்து நடந்திருந்தும் தந்தையின் மன விருப்பங்களை புரியத் தெரியாத அந்த மூத்தமகன் போலவே இன்று அனேக கிறிஸ்த்தவர்கள் இருக்கிறார்கள். தந்தைக்கு மூத்த மகனையும் பிடிக்காமல் இல்லை அதே நேரத்தில் மனம்திரும்பி வந்த அந்த இளைய குமாரன்மீதுதான் அதிக பட்சமாக இருந்தார் என்பதை நாம் அறிய முடியும்.
ஒருவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்து அதில் ஒருபிள்ளை கிணற்றில் விழுந்துவிட்டால் "நமக்குத்தான் இன்னும் நான்கு பிள்ளைகள் இருக்கிறதே அது போனால் போகட்டும்" என்று எந்த தகப்பனும் விடுவதில்லை
இந்த கருத்து இயேசுவால் சொல்லபட்ட இன்னொரு உவமையாகிய காணாமல் போன ஆடு குறித்த உவமையிலும் தேவன், வழிதப்பி திரியும் ஆடுகளுக்காக எவ்வளவு பரிதபிக்கிறார் என்பதை அறிய முடியும்.
4. உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
5. கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,
6. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?
எனவே நீங்கள் காணாமல் போகாத ஆடுகளாகவோ அல்லது தகப்பனுக்கு கீழ்படிந்து அவரோடு கூடவே இருந்த மூத்த குமாரன் போலவோ மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைபோலவோ இருப்பீர்களானால் உங்களைபற்றி தேவனுக்கு கவலையில்லை. நீங்கள் அவரோடு கூடவே இருக்கிறீர்கள் அவருக்குள்ளதெல்லாம் உன்களுடையதாயிருக்கிறது. அதற்காக தேவனின் சித்தமாகிய "எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும்" என்ற சித்தத்தை சரியாக அறியும் உணர்வில்லாமல் தேவனை அறியாத மற்றவர்களை "நரகத்துக்குதான் போவாய்" என்று என்று தீர்க்க வேண்டாம்.
வசனம் சொல்வதையும் தேவனின் நியாய தீர்ப்பையும் எடுத்துசொல்லி ஜனங்களை எச்சரிப்பதில் தவறில்லை, ஆனால் நாம் மனதார பிறரை அவ்வாறு தீர்க்க கூடாது. இதுபோன்ற எண்ணமும் நீங்கள் சொல்லும் இதுபோன்ற வார்த்தைகளும் தேவனை நிச்சயம் வேதனைபடுத்தும்.
நம்மில் யாரும் நமது சுய பெலத்தாலோ அல்லது அவரவர் நன்நடத்தை யிநிமித்தமோ இரட்சிப்பை பெறவில்லை. தேவனின் ஈவுதான் நம்மை இரட்சிப்புக்குள் கொண்டு வந்தது:
எபேசியர் 2:8கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
நாமும்கூட தேவனை அறியாத காலத்தில் தவறான நிலையில்தான் இருந்தோம், ஆனால் தேவன் எல்லோரையும் சமமாக பாவித்து நம்மையும் தெரிந்துகொண்டு இரட்சிப்பின் வழியை அறியும் அளவுக்கு இருதயத்தை திறந்தத்தால், ஏதோ தேவ கிருபையினால் இப்பொழுது தேவனை அறிந்து கொண்டு விட்டோம். இந்நிலையில் இன்னும் உணர்வடைத்து தேவனை அறியாமலிருகும் மற்றவர்களை தேவன் வெறுக்கிறார் என்றோ "அவர்களை அழிவுக்கு பாத்திரர்" என்றோ "அவர்களை அழிவுக்கென்றே நிர்ணயித்துள்ளார்" என்றோ பார்க்காமல் அவர்களையும் அன்போடு பார்ப்போமாக.
தேவன் யாரை எதற்கு நியமித்திருக்கிறார் என்பது நாம் தற் காலங்களில் அறியமுடியாத ஒரு காரியமும், அது இறுதி நாளில் மாத்திரமே தெரியும் காரியமுமாக இருக்கும் பட்சத்தில் நாம் எந்த மனுஷர்களையும் "இவர்கள் நரகத்துக்கு பாத்திரமானவர்கள்" என்று விட்டேத்தியாக சொல்லி ஒதுக்காமல் ஒவ்வொருவருக்காகவும் தேவனை நோக்கி கெஞ்சுவோம் ஏனெனில் அவர்களுக்காகவும் கிறிஸ்த்து மரித்திருக்கிறார்.
தேவன்
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தீமோத்தேயு 2:4
எனவே
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; தீமோ 2:1
"தேவனிடம பட்சபாதம் இல்லை" என்று வேதம் சொல்வதால் அழிந்துபோகும் ஆத்துமாக்களை மீட்டெடுக்க அவர்களுக்காக மன்றாடி ஜெபிப்பைதோடு அவர்களையும் மீட்க நம்மால் முடிந்த பிரயாசங்களை நாம் எடுப்போம் அதற்க்கு மேல் நடப்பது தேவ சித்தமாக இருக்கட்டும் என்று விட்டுவிடுவோம்.
மற்றபடி, மற்றவர்களை குற்றவாழியாகவும் நரகத்துக்கு பத்திரவானாகவும் தீர்க்க விரும்பும் நீங்கள் யாரானாலும் சரி போக்கு சொல்ல இடமில்லை
லூக்கா 18:10இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். லூக்கா 18:13ஆயக்காரன்தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். 14.அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
இன்றும் இதேபோலவே:
"அவன் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை தேவனே நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்" "அவன் பாவி தேவனே நான் பாவியில்லை நல்லவன்"
"அவன் கண்டிப்பாக நரகம் போவான் தேவனே நானோ பரலோகம்தான் போவேன்" "அவன் அழிவுக்கென்றே நியமிக்கபட்டவன் தேவனே நான் நித்திய வாழ்க்கைகென்றே நியமிக்கபட்டவன்" என்பதுபோல் தாங்கள் இருதயத்தில் தேவனுக்கே பாடம் எடுக்கும் எண்ணம் கொண்டுள்ள அனேக கிறிஸ்த்தவர்கள் நமக்குள் உண்டு.
இப்படிபட்டவர்கள் இயேசு சொல்லியிருக்கும் இந்த உவமையை கவனித்து காலம் வரும்வரை எதை குறித்தும் நியாயதீர்ப்பு செய்யாதீர்கள் என்று வேதம் சொல்வதை பின்பற்றுவது அவசியம்.
I கொரி 4:5 கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்
தேவன் ஒருவரே நியாயாதிபதி! பிறரை நியாயம்தீர்க்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை!
சங் 50:6தேவனேநியாயாதிபதி.
-- Edited by SUNDAR on Saturday 24th of March 2012 04:43:11 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இயேசுவை ஏட்றுக்கொணுட்டு பாவங்கள் கழூவப்படாடாதவர்கள் நரகத்துக்கு பாத்திரவாஙல் என்ட்ரு வேத வசனம் தெளிவாக சொல்லும் போது அப்படி பட்டவர்களை " நரகத்துக்கு பாத்திரவாஙல்" என்று நாம் சொல்வதில் என்ன தவறு?
வேத வார்த்தையை ஆப்படியே சொல்லுவோமேயானால், அது நாம் மற்றவரை நியாயம் தீர்க்கிறோம் என ஆகாது.
அப்படியானால் தீர்க்கதரிசிகள் ராஜாக்களுக்கும்,ஜனங்களுக்கும் தீர்க்கதரிசினங்கள் உரைத்ததும் தேவ ஊழியர்களான தீர்கதரிசிகள் சுயத்திலிருந்து நியாயந்தீர்ப்பதாகிவிடும். தேவ வார்த்தையை சுயலாபம் அல்லாமலும், தேவ எச்சரிப்பை தேவ மகிமையின் முன்னிட்டும் சொல்லப்படும் எந்த வார்த்தையும் தேவனால் உண்டான நியாத்தின்படியானது. அது மனுஷ இச்சையின்படியானது அல்ல. இதற்க்கு பின்வரும் வேதபகுதியை உதாரணமாக கூற இயலும்.,
(லூக்கா9 :54-56)அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
தேவனால் நேரடி படிப்பினை பெற்றும் சுயத்தின்படி நியாயந்தீர்க்க பிரவேசிகிரவர்கள் அப்போஸ்தலர்கள் /சீடர்களே ஆயினும் கர்த்தருக்கு அவைகளில் சித்தம் இருப்பதில்லை. இவ்வாறு ஏற்படும் நியாயதீர்ர்ப்பே சுயத்தின்படியான நியாயத்தீர்ப்பு. இது பரிசுத்தஆவியினால் ஏற்படாமல், பிசாசின் ஆவிகளாலேயே ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
மேலும் சுபாவதிற்கேற்றவாறு அல்லது நேரத்திற்கேற்றவாறு அல்லது ஆதாயதிற்காவது,சுய புகழ்ச்சிக்காவது தேவவார்த்தையை இச்சையின்படி வளைத்து,'இது தேவனால் உண்டான நியாயதீர்ப்பு' என்று அடுத்தவர்களை என்கிறவர்கள் பக்கவாயிலில் நுழைந்தவர்களே அல்லாமல் வேறல்லர்!!!இப்படி அநேகர் இன்றைய சபைகளில் இருக்கிறபடியினால் தான் இயேசு இங்கேவருகிறார் அங்கே வருகிறார்,இறுதி நாள் சமீபமாய் இருக்கிறது,ஆகவே கலங்கி புலம்புங்கள் என்பார்களாயின் அஞ்சாமல் இருங்கள் என வேதமும் சொல்லுகிறது!!
மத்தேயு 24:23 அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
(II தெசலோனிக்கேயர்2:2-3) ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
இப்படி பயமுறுத்தி,நியாயதீர்ப்பை காட்டி சுயத்திற்கு,மனித போதகத்திற்கு அடிமைகளாக்கும் பக்தியறியாப் போதகர்களுக்கும் நியாயதீர்ப்பு பின்வருமாறு எழுதபட்டே உள்ளது!!
யூதா 1:4 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடையகர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
தேவனுக்கே மகிமை உண்டாகுக!!!
-- Edited by JOHN12 on Monday 29th of October 2012 06:56:14 PM