இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புதிய உடன்படிக்கை பற்றி பழையஏற்பாடு என்ன சொல்கிறது?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
புதிய உடன்படிக்கை பற்றி பழையஏற்பாடு என்ன சொல்கிறது?
Permalink  
 


புதிய உடன்படிக்கை என்றால் என்னவென்பதை பற்றி பழைய ஏற்ப்பட்டிலேயே தீக்கதரிசகள் மூலம் தேவன் நமக்கு மிக தெளிவாக சொல்லிவைத்திருக்கிறார்.
 
எரேமியா 31:31 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.
 
எரேமியா 31:33 அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
 
எசேக்கியேல் 36:26 உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

எசேக்கியேல் 36:27 உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
 
மேலேயுள்ள  இரண்டு தீர்க்கதரிசிகள் மூலமும் கர்த்தர்  சொல்லியிருப்பதை பார்த்தால் புது உடன்படிக்கை என்பதன் 
பொருள்,      
 
1. நியாயப்பிரமாணம் நம் உள்ளத்திலே எழுதப்படுதல்
2. தேவன் தமது ஆவியை நமது உள்ளத்திலே வைத்தல்.   
3. அவரின் கட்டளைகள் மற்றும் நியாயங்களில் நடக்க பண்ணுதல்.
 
என்பதை அறிய முடிகிறது.
 
ஆனால் இன்று புது உடன்படிக்கை என்றால் "இயேசுவை ஏற்றுக் கொண்டால் போதும்  தேவனின் கற்பனைகள்   மட்டுமல்ல இயேசுவின் வார்த்தைகளைகூட  கைகொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை" என்பதுபோல் போதிக்கப்பட்டு  வருகிறது. இயேசுவின் வார்த்தைகள்  கைக்கொள்ளபட வேண்டும் என்று எழுதினால்கூட  அனேக வேத பரிசுத்தர்களிடம் இருந்து எதிர்ப்பு உண்டாகிறது.  
     
தேவன் தம்முடய ஆவியை நம்முடைய உள்ளத்தில்  வைப்பதன்  நோக்கமே அவரது கற்பனைகளின்படி மனுஷன்  நடக்கவேண்டும்  என்பதற்காகத்தான் என்று வசனம் சொல்லும் பட்சத்தில், இதுபோன்ற பலருடைய  போதனைகள்  சரியானதா என்பதை வாசிக்கிறவர்களும் கேட்பவர்களும் சிந்திக்க கடவர்கள்!     
 
நியாயப்பிரமாணத்தால் யாரும் நீதிமான் ஆகிறதில்லை என்பது உண்மை ஆகினும் தேவனின் நீதி நியாயங்கள் என்றும் மாறாத நித்தியமானவைகள்  என்பதை அறியவேண்டும்
 
சங்கீதம் 119:160உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
 
 


-- Edited by SUNDAR on Saturday 24th of March 2012 03:57:24 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard