நமது தளத்தில் இந்த மாதத்தில் புதிதாக இணைந்திருக்கும் சகோதரர்/சகோதரிகள்
"sar"
MEENUDAVID"
"Erriic
அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தங்கள் பதிவுகள் மற்றும் சாட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
பிதாவாகிய தேவன் / குமாரனாகிய கிறிஸ்து / பரிசுத்த ஆவி என்னும் தேவனின் ஆள்த்துவங்கள் பேரிலும் விசுவாசமுடையவர்களாக நாங்கள் இருக்கின்ற போதிலும் மனுஷனை நல்வழிப்படுத்தும் இறைவனை பற்றிய எந்த கருத்துக்களும் எழுத இங்கு அனுமதியுண்டு.
நீதிமொழிகள் 29:18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள்சீர்கெட்டுப்போவார்கள்;
அதிக வேலைப்பளுவிநிமித்தம் தளத்துக்கு வந்து பதிவுகளை தருவது அபூர்வமாகி போனது
சகோ. JOHN12 அவர்களை தவிர நம்முடன் சேர்ந்து பதிவுகளை தந்த சகோதரர்களில் அநேகரை காணவில்லை. காணாமல் போனவர்களை பற்றிய அறிவிப்புதான் போடவேண்டும் போல் இருக்கிறது.
இந்நிலையில் தளத்துக்கு வருகை தரும் அன்பு சகோதர சகோதரிகள் ஓரிரு வரிகளிலாவது தங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் தளம் ஆக்டிவாக இருக்கும்.
தளத்தில் புதிதாக இணைந்துள்ள சோதர சகோதரிகளை அன்புடன் வரவேற்கிறோம்.
தளத்தில் ஓரிருவரை தவிர மற்றவர்கள் பதிவுகளை தருவதில்லை காரணம் என்னவென்று நமக்கு புரியவில்லை.
முக்கியமாக நான் இங்கு தெரிவிப்பது என்னவெனில் இந்த தளம் இறைவனை பற்றிய ஆவிக்குரிய நல்ல கருத்துக்கள் எழுதுவதற்காக நடத்தப்படுகிறது. இது எந்த பக்கமும் சார்புடைய தளம் அல்ல எனவே எல்லோருமே தாங்கள் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை இங்கு முன்வைக்கலாம்.
இந்த தளத்தில் அநேகம் புதிய சாட்சிகள் மற்றும் இறைவனை பற்றிய பயனுள்ள கருத்துக்கள் அதிகம் எழுதப்படுவதற்கு பிராத்திப்போமாக.