இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனும் ஒரேவிதமாக சம்பவிக்குமா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனும் ஒரேவிதமாக சம்பவிக்குமா?
Permalink  
 


திரு விவிலியத்தில் பிரசங்கி புத்தகம் சொல்லும் கீழ்கண்ட வசனம் நல்லவன்  கெட்டவன்   எல்லோருக்கும் ஒரே விதமாக சம்பவிக்கும் என்று சொல்கிறது.  
 
பிரசங்கி 9:2 எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், ........ ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே;
 
இதற்க்கு ஏற்றார்ல்போல் கர்த்தரும் இவ்வாறு சொல்கிறார்:
 
எசே 21:3  கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணுவேன்.

ஆனால் வேறு ஒரு இடத்தில் தீர்க்கதரிசியாகிய ஏசாயா நீதிமானுக்கு நன்மையுண்டாகும்  சொல்கிறார்:
 
ஏசாயா 3:10 உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

இன்னும் சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் 
புத்தகத்தில்
நீதிமான்களுக்கு அனேக ஆசீர்வாதங்கள எழுதபட்டிருக்கிறது:  
 
சங் 34:17 நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
 
சங் 92:12 நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
 
நீதி 10:30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை 
 
ஆகினும் இந்த பூமியிலோ பிரசங்கி சொல்வதுபோல் ஏறக்குறைய எல்லோருக்கும் ஒரேவிதமாக சம்பவிப்பது போலத்தான் தெரிகிறது. யேசுவை  ஏற்றுக்கொண்டவன் ஏற்றுக்கொள்ளதவன்  எல்லோருக்கும் நோய் வருகிறது, எல்லோருக்கும் சாவு வருகிறது, எல்லோருக்கும்  இழப்புகள்  வேதனகள் வரத்தான் செய்கிறது. இதோ எனக்கு எந்த துன்பமும் வரவில்லை என்று சொல்லும் யாரும் பூமியில் இல்லை.
 
அவ்வாரு எல்லோருக்கும் ஒரேவிதமாக சம்பவிக்கும்  வேளையில்  "நீதிமானுக்கு நன்மையுண்டாகும்" என்பதும்  "நீதிமான்  அசைக்கபடுவதில்லை" என்பதும் எவ்விதத்தில் சாத்தியமாகும்?
   
நீதிமான் உபத்திரவத்தில்  இருந்து  விடுவிக்க படுவானா?  அல்லது துன்மார்க்கனுக்கு நடப்பது போல்தான்  நீதிமானுக்கும் நடக்குமா?   
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Nesan wrote:
 
நீதிமான் உபத்திரவத்தில்  இருந்து  விடுவிக்க படுவானா?  அல்லது துன்மார்க்கனுக்கு நடப்பது போல்தான்  நீதிமானுக்கும் நடக்குமா?   
 

 முதலில் வேதம் குறிப்பிடும்  "சன்மார்க்கன்"  என்பவன் வேறு "நீதிமான்" என்பவன் வேறு என்ற உண்மையை அறிவது அவசியம்.

சன்மார்க்கன் எனப்படுபவன் யாரென்றால் தன் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடப்பவனை  குறிக்கலாம். இந்த உலகத்தில் அவனை "நல்ல மனஷன்" என்று சொல்வார்கள். உலகத்தின்  பார்வைக்கு நல்ல மனுஷனாக சன்மார்க்கனாக இருக்கும் அவர்கள் தேவனின் பார்வையில் எப்படி இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. இந்த சன்மாக்கன் என்ற குழுவிற்குள் கடவுளை நம்பாதவன் கூட இருக்க முடியும். 

அனால் நீதிமான் என்றால் அதன் பொருள் வேறு, "தேவ நீதிபடி நடப்பவன்" அல்லது "நீதியாய் நடப்பவன்" என்று பொருள்படும். நீதிமான் யார் என்பதற்கான விளக்கம் எசேக்கியேல் 18 ஆம் அதிகாரத்தில் இருக்கிறது.  இவர்கள் கடவுளை நம்புவதோடு அவருக்கு பயந்து அவருடைய கற்பனைகள்படிவாழ்ந்து  நீதியாய் நடக்க விளைபவர்கள்.   

 
இவ்வாறு இருக்கையில், 
 
"சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணுவேன்"
"நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே;
.
இவ்வசனத்தில் உள்ள  சன்மார்க்கன்/நல்லவன் என்கிற வார்த்தைகள் நீதிமான்களை குறிப்பதாக அமையாது. எனவே சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனும்  ஒன்றுபோல் நடந்தாலும், தேவனுக்கு பயந்து கீழ்படியும் நீதிமான்களுக்கு அனேக ஆசீர்வாதங்களை தேவன் வாக்குபண்ணியிருக்கிறார்.     
 
எனவே  "சன்மார்க்கன்"  Vs "நீதிமான்" இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சரியாக அறிந்தால்தான்  வசனம்  சொல்வதில் உள்ள உண்மையை நாம் அறிய முடியும் .
 


-- Edited by SUNDAR on Tuesday 3rd of April 2012 09:24:33 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard