இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குட்டையை குழப்பி மீன்பிடித்தல்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
குட்டையை குழப்பி மீன்பிடித்தல்!
Permalink  
 


"குட்டையை குழப்புகிறான்" என்ற வார்த்தையை நாம் பலமுறை  கேள்வி பட்டிருக்கலாம் அதன் உண்மையான் பொருள் என்னவென்பதை எனக்கு தெரிந்த விதத்தில் சற்று விளக்குகிறேன்.
 
எங்கள் கிராமத்தில் வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் மழை காலங்களில் அதிக நீர் வரத்து இருக்கும். நாள் ஆகஆக  மார்ச்/  ஏப்ரல் மாதங்களில்  தண்ணீர் வற்றி ஒருசில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கும். அவ்வாறு தேங்கி நிற்கும் தெளிவான  நீர்நிலைகளில்  அனேக சிறிய மற்றும் பெரிய மீன்கள்  சேர்ந்து கிடக்கும்.  அந்த மீன்களை பிடிக்க நினைப்பவர்கள் அதிகம் கஷ்டப்பட வேண்டிய தேவை இல்லை. அந்த நீர் குட்டைக்குள்  ஓரிருவர் இரங்கி தண்ணீரை அதி வேகமாக காலால் கலக்க வேண்டும் அப்பொழுது சிறிது நேரத்தில் அந்த தண்ணீர் முழுவதும் கலங்கிவிடும். தண்ணீர் கலங்கி துருதுரு என்று ஆகிவிடுவதால் உள்ளிருக்கும் மீன்கள் சுவாசிக்க முடியாமல்  நீருக்கு மேலே வந்து சுவாசிக்க ஆரம்பிக்கும், அப்பொழுது பெரிய மீன்களை மாத்திரம் சுலபமாக பிடித்துவிடலாம். இதற்குதான் குட்டையை குழப்பி மீன் பிடித்தல் என்று பெயர்.       
 
அதாவது, எதாவது ஒரு நோக்கத்தில் அல்லது முடிவில் தெளிவாக இருக்கும் ஒருவரின் மனதில்  பல்வேறு கேள்விகளை கேடடு அல்லது சந்தேகங்களை எழுப்பி  குழப்பி, அவர்களை தன்வசம் திருப்ப நினைப்பது குட்டையை குழப்பி  மீன் பிடித்தலுக்கு ஒப்பான ஓன்று.
 
இவ்வாறு குழப்பி மனுஷனை பிடிப்பது சாத்தானின் ஆதி  தந்திரம் ஆகும்!
 
ஆதியில் தேவன் படைத்த முதல் மனுஷர்களாகிய ஆதாம்/ஏவாள் தேவனின் கட்டளை குறித்து மிக தெளிவாக விலக்கபட்ட கனியை புசியாமலேயே இருந்தார்கள். இடையில் வந்த சர்ப்பம் அவர்களை கேள்விகள் கேடடு குழப்ப ஆரம்பித்தது.
 
ஆதியாகமம் 3:1  அது (சர்ப்பம்) ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது
 
சாதாரணமாக தோன்றும் இந்த முதல் கேள்விக்கு ஏவாள் சுலபமாகவும்
தெளிவாகவும் பதில் சொல்லிவிட்டாள்.  
 
ஆதி 3:2 ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;
ஆதி 3:3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.
இந்த் பதிலை கேட்ட சாத்தான் தேவனின் வார்த்தைகள் பொய்ய்யானவைகள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்ப்படுத்துகிறது.   
 
ஆதி 3:4அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
 
அதை தொடர்ந்து விலக்கபட்ட கனியை புசிப்பதால் கிடைக்கும் அற்ப சந்தோசங்களை எடுத்து சொல்லி  ஏவாளுக்கு ஆசையை தூண்டி அவளை குழப்பத்தில் ஆழ்த்துகிறது
 
ஆதி 3:5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மைதீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

இப்படி  சாத்தானால் குழப்பப்பட்ட ஏவாள் தேவனின் கட்டளையை நிராகரித்து விலக்கபட்ட கனியை பறித்து புசித்து பாவம் செய்து விடுகிறாள்.
 
அன்று நடந்ததுபோலவே  இன்றும் தெளிவாக இருக்கும் மனுஷர்களை  பல்வேறு கேள்விகள் மூலம் குழப்பி அவர்களை, கலங்கடித்து தன்னுடய வலையில் பிடிக்கும் வேலையை சாத்தான் வெற்றிகரமாக தொடர்ந்து செய்து வருகிறது. அதில் வீழ்ந்து போகிறவர்கள் அநேகர்.
 
அதற்காக நாம் மனதில் எந்த கேள்வியும் எழக்கூடாது என்பதோ அல்லது யார் என்ன கேள்வியை கேட்டாலும் அதை கண்டுகொள்ளது விட்டுவிட வேண்டும் என்பதோ  எனது கருத்து அல்ல. கேள்விகள் எழுந்தால்தான்  பதிலை பெற முடியும். அதன் மூலம் ஒருவர் சரியான உண்மையை கண்டறிய முடியும்  எனவே  கேள்விகள் எழுவதும் எழுப்புவதும் அவசியமே!    
 
எனவே "குட்டையை குழப்புதல்" என்பது ஒருபுறம் சாத்தானின் தந்திரமாக இருந்தாலும் இன்னொருபுறம் குழப்பினால்தான் மீனை பிடிக்க முடியும். அதாவது ஏதுஉண்மை எனபதை அறியவேண்டும் என்று
மனதில் குழப்பம் ஏற்ப்பட்டால் மட்டுமே சரியான உண்மையை பிடிக்க முடியும். 
 
இந்த் உலகில் அநேகர் நாம் என்தற்கு இந்த பூமியில் பிறந்தோம் நாம் மீதான தேவனின் திட்டம் என்ன போன்ற பல உண்மைகள் என்னவென்று அறியாமல் இருந்தாலும், அவர்கள் தங்களின் தவாறன வழிகளில் மிக தெளிவாக இருப்பதை நாம் பார்க்க முடியும்
 
ஒரு நாத்திகர் கடவுள் இல்லை எனபதில் மிக தெளிவாக இருக்கிறார்.
ஒரு பணக்காரர்  பணத்தினால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும்
என்பதில் தெளிவாக இருக்கிறார்.
ஒரு அரசியல்வாதி தன் அதிகாரத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.  
ஒரு அறிவியல்வாதி உலகம் பரிணாம வளர்ச்சியால் உண்டானது என்ற 
கருத்தில் தெளிவாக இருக்கிறார். 
ஒரு இந்து, தங்கள தெய்வங்கள் உண்மையானது என்பதில் தெளிவாக இருக்கிறார் 
ஒரு இஸ்லாமியர் அவர் வேதம் உண்மையானது எனபதில் உறுதியாக தெளிவாக இருக்கிறார்  
அதுபோல் ஒரு கிறிஸ்த்தவர் அவரது கருத்துக்கள எல்லாம் சரியானது என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்.
 
மேலேயுள்ள தெளிவான நிலையில் இருப்பவர்களில், பலருடைய நிலை  தவறானது  என்றாலும் அவரவர் அவரவர் கருத்துக்களில் தெளிவான நிலையில் இருக்கின்றனர்.
 
இப்படி "நான் சரியாகத்தான் இருக்கிறேன்" என்று எண்ணிக்கொண்டு, தவறான ஒரு கருத்தில் உறுதியாக தெளிவாக இருப்பவரை ஏதாவது ஒரு கேள்வி பாதித்தால் அல்லது குழப்பினால் மட்டுமே அவர் உண்மையை அறியும் வாய்ப்பு உண்டாகும்.  எனவே குட்டையை குழப்புதல் என்பது சில நேரங்களில் மேன்மையான பலன்களை கூட தருவது உண்டு!  
 
ஆகினும் ஒரு மனுஷனின் மனம் என்னும் குட்டை, ஏதாவது ஒரு கருத்தை  குறித்து குழப்பம் அடையும் போது, அவர் உண்மையைஅறிய
யாரிடம் சென்று விசாரிக்கிறார் என்பதை பொறுத்து அவர் தவறான பாதைக்கு சென்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது சரியான உண்மையை அறிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. 
 
குருடன் ஒரு குருடனிடம் சென்று வழியை கேட்டால் இருவரும் சேர்ந்து குழியில் விழும் நிலைதான் ஏற்ப்படும்!
 
மத்தேயு 15:14  ; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே .
.
எனவே உண்மை என்னவென்பதை அறியாமல் குழம்பி இருப்பவர்கள் அவர்களை போலவே பதில் தெரியாத அனேக கேள்வியை கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் குழப்பத்தை தீர்க்க முயன்றால் இருவரும் சேர்ந்து குழியில் விழ வேண்டியதுதான்.
 
சில வருடங்களுக்கு முன்னால் என்னுடன் வேலைக்கு வந்து சேர்ந்த ஒரு
இந்து சகோதரர், திருக்குர்ஆன் முறைப்படி தொழுகை எல்லாம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் நான் "நீங்கள் இந்துதானே? பிறகு என்ன 
முகமதியர்போல நடந்து கொள்கிறீர்கள்" என்று கேட்டபோது. அவர் சொன்ன பதில் எனக்கு சற்று  ஆச்சர்யத்தை தந்தது. அவருக்கு இளம் வயதிலேயே ஆன்மீகத்தின் மீது அதிகம் ஈடுபாடு இருந்ததாம். ஒருநாள்  அவர் மனதில் சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் குழப்பம் உண்டானதாம் அந்த குழப்பத்தை இந்து மதத்தை  சேர்ந்த எந்த ஒருவராலும் தீர்க்க முடியவில்லையாம் பின்னர்  ஒரு RC கிறிஸ்த்தவ பாதிரியாரை சந்தித்தராம் அவரும் இவரின் கேள்விக்கு எந்த சரியான பதிலையும் தரவில்லையாம். இறுதியில் ஒரு இஸ்லாம் இமாம் ஒருவர் அவரின் சந்தேகங்களை சரியாக தீர்த்துவிட்டாரம் உடனே  அவர் இஸ்லாமுக்கு மாறிவிட்டதாக கூறினார்.
 
(இவர் என்ன கேள்விகளை கேட்டார் அவர் என்ன பதிலை சொன்னார் என்பது என்னுடய நினைவுக்கு வரவில்லை. கர்த்தருக்கு சித்தமானால் யோசித்து அறிந்து பின்னர் எழுதுகிறேன்)
 
அதுபோல் யாரோ ஒருவர் குட்டையை குழப்ப, குழம்பிய குட்டையில் மீன்களை பிடிக்க  தெரியவில்லை என்றால் வேறு ஒருவர் மீனை பிடித்துகொண்டு போகும்  சம்பவங்களும் உலகில் நடக்கத்தான் செய்கின்றன. எனவே குட்டையாகிய மனுஷனின் மனசு குழம்பபடுவதில் நன்மை தீமை இரண்டுமே சம்பவிக்க வாய்ப்புண்டு.    
 
ஒருவேளை அந்த குட்டை குழம்பாமல் இருந்தாலும் சில நாட்களில் வெயில் ஏறஏற அதில் உள்ள நீர் வற்றி அங்குள்ள மீன்கள் எல்லாமே கொக்குகளுக்கு இறையாகிபோகும் அல்லது நீற்றின்றி மடித்து போகும். இதற்க்குஒப்பாக மனுஷனின் வாழ்வும் நிரந்தரம் அற்றது இந்தஉலகமும்
நிரந்தரமானது அல்ல! இதற்க்கு நிச்சயம் ஒரு முடிவு உண்டு! அதுபோல் மனுஷனும் ஓர்நாள் மரணத்தை சந்திக்கும் நிலையில் இருக்கிறான் அதற்கிடையில் மனுஷர்களின் மனம் குழப்பபட்டு சரியான உண்மையை அறிந்துகொண்டு தேவ ஜனங்களுக்குள் சேர வேண்டியது அவசியம் ஆகிறது.  



-- Edited by SUNDAR on Thursday 5th of April 2012 11:08:46 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

இறைவன் கூட ஒரு காரியத்தில் குழம்பியதாக விவிலியம் சொல்கிறது
 
ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.

ஆனால் இந்த குழப்பமானது எதை செய்வது என்று புரியாமல் குழம்பும் குழப்பமாக இராமல் சர்வவல்ல இறைவன் பாவம்செய்யும்  ஒரு மனுஷனை கைவிட முடியாமல் ஏக்கத்தோடு குழம்பி தவிக்கும் தவிப்பான
வார்த்தைகளாக இங்கு பதிவிடப்பட்டுள்ளது.  
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard