ஆண்டவர் சொன்ன இந்த முக்கியமான வசனத்தை பலர் சரியாக புரிந்துகொள்ளாமல் ஏனோ தானோஎன்று யோசித்து பொருள் கொண்டு விடுவதால், அந்த வசனத்தின் முக்கிய கருத்துக்களை அறியமுடியாமல் போக வாய்ப்புண்டு எனவே அதன் சரியான விளக்கம் என்னவன்பதையும் நாம் அறிவது அவசியம்.
இவ்வசனத்தின் மைய கருத்து என்னவெனில்!
மனுஷர்கள் உங்களை "சார்" என்று அழைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் எல்லோரையும் "சார்" என்று அழையுங்கள்
மனுஷர்கள் உங்கள்மீது கோபபடகூடாது திட்டக் கூடாது என்று எதிர்பார்த்தல் நீங்கள் யார் மீதும் கோபபடாதீர்கள் யாரையம் திட்டாதீர்கள்.
மனுஷர்கள் உங்களுக்கு தரவேண்டிய பணத்தை சரியான நேரத்தில் தரவேண்டும் என்று எதிர்பார்த்தால் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை சரியான நேரத்தில் திருப்பி கொடுங்கள்.
மனுஷர்கள் உங்களுடன் உண்மையை பேசவேண்டும் என்று எதிர்பார்த்தால் நீங்கள் மற்றவர்களோடு உண்மையை பேசுங்கள்
மனுஷர்கள் யாரும் உங்களை ஏமாற்றிவ்டகூடாது என்று எதிர்பார்த்தால் நீங்கள் யாரையும் ஏமாற்றாதீர்கள்.
மனுஷர்கள் உங்களுக்கு தாராளமாக கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நீங்கள் மற்றவர்களுக்கு தேவையானதை அள்ளி கொடுங்கள் (நீங்கள் அளக்கிற அளவின்படியே உங்களுக்கு அளக்கப்படும்)
மன்ஷர்கள் உங்களுடைய வார்த்தைகளை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கவனியுங்கள்.
மனுஷர்கள் உங்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தால் நீங்கள் அவர்களுக்கு பணிவிடை செய்யுங்கள்.
மனுஷர்கள் உங்களை வாழ்ந்த வேண்டும் போற்ற வேண்டும் மதிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நீங்கள் மற்றவரை வாழ்த்துங்கள் போன்றுங்கள் மதியுங்கள்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.................
ஆஹா! இப்படி எல்லோரும் செய்ய ஆரம்பித்தால் இந்த உலகமே சொர்க்கமாகிவிடுமே! பிறகு கற்பனைகள்/ கட்டளைகள் எதற்கு? எல்லோருமே தேவ மனுஷர்களாகிவிடுவார்களே!
-- Edited by SUNDAR on Thursday 12th of April 2012 09:00:30 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆஹா! இப்படி எல்லோரும் செய்ய ஆரம்பித்தால் இந்த உலகமே சொர்க்கமாகிவிடுமே! பிறகு கற்பனைகள்/ கட்டளைகள் எதற்கு? எல்லோருமே தேவ மனுஷர்களாகிவிடுவார்களே!
இதுபோன்ற நல்ல விளக்கங்களை இங்கு படிப்பதற்கு கூட ஆட்கள் கிடையாதுங்கோ.
காரணம் இந்த உலகத்தில் மட்டுமல்ல, ஆவிக்குரிய மனுஷர்களிடமும் கூட இதெல்லாம் தலைகீழாக நடப்பது போலவே தெரிகிறது.
தனக்கு எல்லோரும் காணிக்கை கொடுக்கவேண்டும் தசமபாகம் கொடுக்கவேண்ட்ம் என்று எதிர்பார்க்கும் ஒரு ஊழியர் பிறருக்கு கொஞ்சமும் கொடுக்க முன்வருவதில்லை. (ஊழியர்களின் பாலிசி "வாங்க மட்டும்தான் தெரியும் கொடுக்க தெரியவே தெரியாது)
தன்னை எல்லோரும் மதிக்கவேண்டும் என்று என்னும் ஒரு பாஸ்டர் தன் கீழ் இருக்கும் சிரிய பாஸ்டர்களை நடத்தும் விதம் இருக்கிறதே அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. (தன்னை கண்டாலே நடுங்கும் அளவுக்கு பயம்காட்டி வைத்திருக்கிறார்கள்)
எல்லோரும் தனக்கு பணிவிடை செய்யவேண்டும் எதிர்பார்க்கும் எந்த பாஸ்டரும் பிறருக்கு பணிவிடைகள் செய்ய முன்வருவது இல்லை. (தனக்கு தலையிளுக்க கண்ணாடியை பிடித்து காட்டவும், சிலர் தங்கள் மனைவிக்கு பணிவிடை செய்யவும்கூட பயன்படுத்துகிறார்கள்)
இப்படி இன்னும் அதிகம் சொல்லலாம்.
இயேசுவின் வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான் ஆனால் அதை எத்தனை பேர்கள் கைகொண்டு நடக்கிறார்கள என்பதுதான் எனக்கு இயேசுவுக்கு வெளிச்சம். அனால் இவர்கள்தான் உண்மையான உபதேசத்தில் இருப்பதாக தம்பட்டம் அடிப்பதில் மட்டும் எந்த குறையும் வைப்பதில்லை