நமது தளத்தில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து விவாதிக்கவும், வேத வசனங்கள் குறித்து ஆழமாக தியானிக்கவும், பதில் தெரியாத பல்வேறு கேள்விகளுக்கு பதிலை கண்டறியும் நோக்குடனும் சில சகோதரர்களாக நாங்கள் கூடி, சமயம் வாய்க்கும்போதெல்லாம் ஆவியானவரின் அபிஷேகத்துக்காக ஜெபித்தும் வேதத்தை தியானித்தும் வருகிறோம்.
சரியான உண்மையை அறியும் வாஞ்சை உள்ள சகோதரர்கள் வந்து கலந்துகொண்டு தங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை முன்வைக்கலாம். வசன ஆதாரத்துடன் சொல்லப்படும் எல்லா கருத்துகளால் குறித்து ஆலோசித்து உண்மை கண்டறிய ஜெபம் எரேடுக்கபட்டும்.
எங்களுடன் சேர்ந்து விவாதிப்பவர்களுக்கு வேதம் குறித்த பதில் தெரியாத கேள்விகள் எதுவும் இல்லாமல் ஆன்மிகம் பற்றிய எல்லா விதமான சந்தேகங்களும் தீர்த்து வைக்க விளக்கம் கொடுக்கப்படும். எந்த மதத்தவர் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லும் அளவுக்கு வேத வசனங்கள் விளக்கப்படும்.
"கிறிஸ்த்தவத்தில் இந்த கேள்விக்கும் பதில் இல்லை அதனால் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள முடிய வில்லை" என்று தீர்மானித்திருக்கும் யாராக இருந்தாலும், சரி தங்கள் சந்தேகங்கள் தீர எங்களை தயக்கமின்றி எங்களை அணுகலாம். தேவ வழிநடத்துதல்படி ஆதியில் இருந்த நடந்த காரியங்கள் குறித்த விளக்கங்களுடன்முதல் இன்று நடக்கும் காரியங்கள்வரை தேவையான அனைத்து விளக்களும் கொடுக்கப்படும், தங்களுக்காகவும் தாங்கள் குடும்பங்களுக்காகவும் தனித்தனியே ஜெபங்கள் ஏறெடுக்கப்படும்.
எங்களின் விளக்கங்கள் எந்த மனுஷனிடம் கேட்டு அறிந்ததோ அல்லது வெறும் மூளை அறிவினால் உண்டானதோ அல்ல. அது தேவனால் போதிக்கப்பட்டு வேத வசனங்கள் மூலம் விளக்கபட்டு அனுபவபூர்வமாக பார்த்து அறிந்து உணரப்பட்டது, அடையாளங்களால் உறுதி செய்யப்பட்டது.
நான் நேரில் பார்த்து அனுபவித்து அறிந்த உண்மை சம்பவங்களை அறிய இங்கு சொடுக்கவும் என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள்! தேவன் தாமே எங்கள் பிரயாசங்களை வாய்க்கப்பண்ணும்படி வேண்டுகிறோம்.
தேவ நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக!
அன்புடன் சுந்தர் இடம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இதர விளக்கம் வேண்டுகிறவர்கள் தனி மெயிலில் தொடர்பு கொள்ளவும் sundararaj.p@gmail.com
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நேற்று (17/04/2012) செவ்வாய் கிழமை இரவு சுமார் 7.30 மணிக்கு சகோதரர்களின் ஜெப கூடுகை ஆரம்பமாகி சுமார் 9.30௦ மணி வரை நடைபெற்றது.
முதலில், ஆதியில் இருந்து ஆண்டவரின் செயல்பாடுகள் குறித்து தியானிக்கபட்டது. அதில் எவ்வளவோ பெரிய தவறுகள் மற்றும் ஆண்டவருக்கு பிடிக்காத காரியங்களைசெய்த பல வேதாகம மனிதர்கள், ஒருநிலையில் தங்களை தாழ்த்தி தேவனிடம் மன்னிப்பு கேட்டபோது, உடனே மனமிரங்கி அவர்கள் செய்த பெரிய மீறுதல்களை எல்லாம் மன்னித்து அவர்களுக்கு நல்வாக்கு அருளிய ஆண்டவரின் இரக்க குணம் குறித்து அதிகமாக தியாநிக்கப்படது.
அடுத்து உலகில் நடக்கும் விபத்துக்கள், துன்பங்கள், நோய்கள் கொடூரங்களுக்கான காரணங்கள் அதை தேவன் அனுமதிக்கும் நோக்கம் அதில் இருந்து தப்பிக்க, நாம் ஆண்டவரை சார்ந்து வாழவேண்டிய வழி முறைகள் குறித்து தியாநிக்கபட்டது.
இறுதியாக தேவனின் சித்தம் இந்த் பூமியில் நிறைவேறவும் ஆண்டவரின் ராஜ்ஜியம் சீக்கிரம் வரவும், உலகில் நடக்கும் கொடூரங்களில் இருந்து ஜனங்களை காக்கவும், ஆண்டவர் சகோதரர்களோடு இடைபடவும் வேண்டி கதறலுடன் கூடிய ஜெபம் எறேடுக்கபட்டது.
ஆவியானவரின் வல்லமை அசைவாடியத்தை எல்லோரும் அதிகமாக உணந்தோம்.
இன்று 20/04/2012 இரவு சுமார் 7.30 முதல் 9.30 வரை ஜெபகூடுகை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
விண்ணப்பங்களை அனுப்ப விரும்புவோர் அதற்கான பகுதியில் தங்கள் ஜெப தேவைகளை பதிவிடும்படி வேண்டுகிறோம்.
இன்று முக்கியமாக இரண்டு காரியங்களுக்காக ஜெபிக்கப்படும்.
1. ஜெப குறைவும் ஒருநிலையற்ற மனதுமே தேவனின் மெல்லிய குரலை கேட்கமுடியாதபடிக்க்கு நம்மை தடை செய்கிறது. எனவே தேவனின் சத்தத்தை கேட்கும்படி ஒருமனப்பாட்டு ஜெபம் முதலில் எறேடுகப்படும்.
அடுத்து 2. தேவையுள்ள அனைவருக்ககவும் ஜெபிக்கப்படும் மிக முக்கிய தேவையுள்ளவர்களுக்கு தனித்தனியேயும் ஜெபம் எறேடுக்கபடும்.
இறுதியில் ஆண்டவரின் ராஜ்ஜியம் சீக்கிரம் வருவதற்காக ஜெபித்து முடிக்க கர்த்தருக்குள் திட்டமிட்டுள்ளோம்.
எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)