ஸ்திரிகள் சபைகளில் போதிப்பது மற்றும் செய்திகள் கொடுப்பது பற்றி பவுல் சில திட்டவட்டமான கட்டளைகளை தன்னுடய நிரூபங்கள் எழுதி வைத்திருக்கிறார்.
I தீமோ 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
I கொரி 14:34சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. I கொரி 14:35அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
ஆனால் இன்றைய சபைகளில் பாஸ்டர் மார்களின் மனைவிகள் செய்தி கொடுப்பது என்பது மிக சாதாரணமாக நடக்கும் காரியமாகிபோனது. அதை சபை ஜனங்கள் எல்லோரும் அங்கீகரிப்பதையும் நாம் பார்க்கிறோம். மேலும் சில இடங்களில் ஸ்திரிகள் மிகப்பெரிய கூட்டகளில் செய்தி கொடுப்பதும் தொலைகாட்சிகளில் தோன்றி போதனை செய்வதும் நாடோரம் நடக்கும் காரியங்கள்.
இவர்களில் யாரையும் குறைசொல்ல நான் இங்கு இதை எழுதவில்லை. இவர்கள் மூலம் தேவனின் நாமம் மகிமைப்படுகிறது என்றும் இவர்களில் சிலர் மிக வல்லமையாக தேவனால் பயனபடுத்த்படுகிரார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை.
இவ்வாறு இருக்கையில் நாம் ஏதாவதுஒரு முடிவுக்கு வருவது அவசியம் அல்லவா? அதாவது வேத வார்த்தை என்று நாம் உறுதியாக நம்பும் வார்த்தைகள் மிக சாதாரணமாக மீறப்படுவது ஒரு சரியான செயலா?
ஒருவேளை பவுல் ஒரு ஆலோசனைக்காக அவ்வார்த்தைகளை சொன்னாரா? அல்லது பவுல் சொன்ன அந்த வார்த்தை பயனற்றதா? அதை மீறுவதால் எந்த தீங்கும் நேராது என்று கருதுகிறோமா? அல்லது உறுதியாக சொல்லபட்ட தேவ வார்த்தைகளை மீறி நடந்து தேவ நாமத்தை மகிமைப்படுத்துகிறோமா? இதை தேவன அங்கீகரிப்பாரா?
சரியான விளக்கம் இருந்தால் தெரிவிக்கவும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இது பொதுவானது. கிறிஸ்து என்ற சரீரத்தில் அனைவர்க்கும் ஒரே பணி கிடையாது. பேதமற்ற இயேசுவின் சரீரமாகிய சபையில் ஸ்திரியானவளுக்கு பேச அனுமதி இல்லை.. (வேதம் சொல்லுகிறதை தான் கூறுகிறேன்.)
இதை பற்றி விரிவாய் பேசினால் பொதுவாக பெண்கள் மனமடிவடைவது சகஜமே!! வேதம் பெண்ணுரிமைகளை மதிக்கிறதில்லை என்றும் சொல்லுவார்கள்.. அப்படி பட்டவர்கள் கிறிஸ்துவின் சபை முழுவதும் பெண்ணாகவே வேதமெங்கும் உருவகபடுத்தபடுவதை அறிவார்களாக!!
சரி,பின் வரும் வசனம் பெண்கள் சபையில் பேசுவதை குறித்து நாம் விளங்கிக்கொள்ள கூடிய வேத தீர்மானத்தை தெளிவாய் விளக்குகிறது.
I கொரிந்தியர் 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்துதலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன்தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
கவனிக்க!!!
மேற்கண்ட வசனத்தில் பெண்ணானவள் யாருக்கும் தலையாக கொடுக்கப்படவில்லை!!
தலையில் தானே வாய் இருக்கும்.வாய் தானே போதிக்கும்.
SIMPLE!!!!
வேதம் காட்டும் சபை ஒழுங்கில் பெண்கள் பேச,போதிக்க,உபதேசிக்க அனுமதி இல்லை என்பதைவ மேற்கண்ட வசனத்தின்படி குழப்பமில்லாமல் அறியலாம்.
I கொரிந்தியர் 14:35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள்சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
சபையில் ஸ்திரி பேசுகிறதை வேதம் அயோக்கியம் என்றால்,நாம் ஏற்று கொள்ளத்தானே வேண்டும்!!! அவ்வாறு இவ்வோழுங்கை ஏற்று
கொள்ள மனதில்லாது இருப்போமானால் தேவ நியமனங்களை மீறினவர்களாவோம்!!
தேவ நியமனங்களில் ஒன்றை மீறினாலும் அனைதையையும் மீறினதாகவே பொருள் என்று இவர்கள் அறியார்களா என்ன??
(இன்றைக்கு அப்போஸ்தல ஊழியம் செய்வதாக கூறிகொள்ளும் போதிப்பவர்கள் தங்கள் மனைவிமாரை போதிக்க அனுமதிகிரார்கள் -அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவை முன்னிட்டு உலகத்தை பகைத்தவர்கள் என இவர்கள் எப்போது அறிவார்கள்!!).
நான் அறிந்தவரையில்,.
ஆசாரியர்களுக்குரிய ஆசாரிய சுதந்தரத்தில் கூட இம்மாதிரியான காரியத்தை வேதம் அனுமதிக்கிறதில்லை..
உண்மைதான் சகோதரரே. சபையில் பெண்கள் அமைதலாயிருப்பதே வேதம் போதிக்கும் சத்தியம். ஆயினும் முழுக்க முழுக்க பெண்களே பங்கு பற்றும் கூட்டங்களில் அவர்கள் தலைமை தாங்குவது ஆட்சேபத்திற்குரிய ஒன்றல்ல.
விரைவில் இது தொடர்பான கட்டுரையொன்றை பதிவிடுகிறேன்.
I கொரிந்தியர் 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்துதலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன்தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
கவனிக்க!!!
மேற்கண்ட வசனத்தில் பெண்ணானவள் யாருக்கும் தலையாக கொடுக்கப்படவில்லை!!
தலையில் தானே வாய் இருக்கும்.வாய் தானே போதிக்கும்.
SIMPLE!!!!
வேதம் காட்டும் சபை ஒழுங்கில் பெண்கள் பேச,போதிக்க,உபதேசிக்க அனுமதி இல்லை என்பதைவ மேற்கண்ட வசனத்தின்படி குழப்பமில்லாமல் அறியலாம்.
சுருக்கமான மிக தெளிவான விளக்கங்கள்.
.
புரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
.
விவிலியம் தெளிவாக சொல்லும் ஒரு காரியத்தை மீறி நடந்து அதன் மூலம் இறைவனுக்கும் இந்த உலகுக்கும் நன்மை செய்துவிடலாம் என்று எண்ணுவது சரியான ஒரு செயல் அல்ல
.
மீறி நடப்பவர்கள் உண்மையை அறியும்படிக்கு கண்கள் திறக்கப்பட பிரார்த்திப்போம்.
சுவிசேஷ ஊழியத்திற்கும், போதக ஊழியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தாங்கள் அறிந்திருப்பதர்க்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். வித்தியாசத்தை அறிந்திருக்கிற நீங்கள் பதிலையும் அறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
தீர்க்கதரிசிகள் தேவ ஊழியகள் என வேதம் அனேக வசனகளில் தெளிவாய் கூறுகிறது....
I இராஜாக்கள் 14:18கர்த்தர்தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.
I இராஜாக்கள் 18:36 அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
பெண்கள் தீர்க்க தரிசனம் உரைத்த சம்பவங்கள் வேதத்தில் உள்ளன..
மிரியம் பற்றி வேதத்தில் உள்ளதே!!
யாத்திராகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
பெண் நியாதிபதியாக எழும்பி நியாயம் விசாரித்த தேபோராளையும் வேதம் தீர்கதரிசி என கூறுகிறதை கருத்தில் கொள்ளலாம்..
நியாயாதிபதிகள் 5:7தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின.
யோவேல்2 :29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். என்ற வசனத்திற்கு விளக்கம் கேட்டுள்ளீர்கள்..
போதிக்கிற காரியத்தில் வேதம் அனுமதிக்காத ஸ்திரிகள் 'ஊழியக்காரி' என்கிற பதத்திற்குள் வரமட்டாகள். யோவேல்2 :29 பெந்தகொஸ்தே நாளில் நிறைவேறிற்று. அப்போது பேதுரு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள்..
அப்போஸ்தலர் 2:18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
ஆக,வசனத்தில் குறிபிடப்பட்டுள்ள 'ஊழியகாரி' என்ற பதம் தேவசித்தம் செய்ய அறிந்த தீர்க்கதரிசன ஊழியத்தை பற்றியதாக இருக்ககூடுமே அல்லாது ஆசாரிய ஊழியத்தை அல்ல.பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஆசாரியர்களே போதிக்கும் பணியை செய்பவர்கள் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.
ஆசாரிய ஊழியம் செய்த பெண் ஆசாரியர்கள் வேதத்தில் இல்லை.பெண் அப்போஸ்தலர்களும் வேதத்தில் இல்லை..ஆனால் பெண் சீடர்கள் உண்டு..
தேவன் பெண்களை போதிக்கும் ஊழியத்திற்கு அழைத்ததாக வேதத்தில் இல்லை. சபை ஒழுங்கை பற்றி பரி.பவுலும் போதிக்க பெண்களை ஏற்படுத்தவில்லை.
I தீமோ 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
I கொரி 14:34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
I கொரி 14:35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.