ஒரு மனுஷர் நன்றாக ஜெபித்து ஆவியில் அனலாய் இருப்பதோடு மிக தெளிவான சுத்த மனதோடு இருக்கும்போது நமக்கு எதிரே இருந்து பேசும் அல்லது நம்மோடு தொடர்புடைய எந்த ஒரு மனுஷரின் இருதய நிலையையும் நம்முடய இருதயத்தில் அறிந்துகோண்டுவிட முடியும்.
தேவனுக்கு மனுஷர்களின் இருதயங்கள் குறித்து அறிந்துகொள்ள யாருடைய உதவியுமோ அல்லது எந்த சாட்சியுமோ தேவையில்லை.
யோ 2:25மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.
எவருடைய உதவியும் இல்லாமல் ஒரு மனுஷனின் உள்ளிந்திரியங் களையும் அவனது நினைவுகள் தோன்றும் போதே
ஆராய்ந்துஅறிந்துவிட கூடியவர் நமது தேவன்
வெளி 2:23அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்
இப்படிபட்ட தேவ ஆவியானவர் நமக்குள் வந்து தங்கியிருப்பதால் பல நேரங்களில் பிறரின் இருதய நிலைகள் நமக்கு கண்ணாடிபோல் தெரியவருவதுண்டு.
நான் அறிந்த ஒருநபரிடம் நீண்ட நாட்களாக பக்கத்தில்சென்று பேசவோ அல்லது அமரவோகூட முடியாத ஒரு வெறுப்பான நிலை என்னுடய மனதில் இருந்தது. அவர் இருக்கும் இடத்தில் என்னால் இருக்கவே முடியாது அப்படியொருநிலை. இவ்வளவுக்கும் அவர்ஒரு அமைதியான நல்ல மனுஷர்தான்.
இந்நிலையில் ஆண்டவரிடம் அது குறித்து "என்ன ஆண்டவரே? நான் அடிக்கடி கட்டாயம் பார்க்கவேண்டிய இந்த மனுஷர் நிற்கும் இடத்தில் கூட என்னால் நிர்க்கமுடியவில்லே!ஒரே அருவருப்பாக இருக்கிறதே! நான் எல்லோரிடமும் மிகுந்த அன்புகூறவேண்டும் என்றுதான் வாஞ்சிக்கிறேன், ஆனால் இவரிடம் நின்று பேசகூட எனக்கு வெறுப்பாக இருக்கிறதே" என்று சொல்லி விசாரித்து பார்த்தபோது போது. நான் அறிந்துகொண்ட உண்மை என்னவெனில் "அந்த மனுஷர் மைதியான நல்ல மனுஷர்தான்! ஆனால் எந்த ஒரு காரியங்களையும் வெளிப்படையாக பேசாமல் எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு மறைத்து ஒளித்துக்கொண்டு இருப்பதால் அவர் மனது தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைபோல துர்நாற்றம் வீசி, அவர் நிக்கும் இடத்தில்கூட நிற்கமுடியாத படிக்கு வெறுப்பு உண்டாகிறது என்ற உண்மையை ஆண்டவர் தெரிவித்தார்.
ஏசாயா 58:7உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
பிறருக்கு தன்னை ஒளிக்க நினைப்பதுவும் தேவனின் பார்வையில் ஒரு அருவருப்பான செயல்தான்.
ஒரு சாதாரண மனுஷனாகிய நமக்கே ஒரு மனுஷனின் இருதயம் சரியில்லாமல் இருந்தால் அவருடன் சென்று பேசக்கூட முடியாத ஒரு அருவருப்பு ஏற்ப்ப்படும்போது பரிசுத்தரான தேவனால் எப்படி அசுத்தமான மனுஷர்களிடம் வந்து பேச முடியும்?
வெளிப்படையான பேச்சு! சுத்தமான மனம்! உத்தமமான நடத்தை, தாழ்மையான குணம் இவைகளே ஒரு மனுஷனை தேவனிடம் கிட்டி சேர்க்கும். அனேக காரியங்களை உள்ளுக்குள் மறைத்து வைக்கும் மனுஷனின் மனம், தேங்கிப்போன குட்டயை போலவே துர்நாற்றம் வீசும்!
ஒருவேளை பிறரிடம் வெளிப்படையாக சொல்லி ஆற்றமுடியாத சில காரியங்களால்கூட உங்கள் மனது நிறைந்திருக்கலாம். அதற்காக நீங்கள் சற்றும் கலங்கவேண்டாம், அதை மனதின் உள்ளேயே போட்டு அமுக்கவும் வேண்டாம்.நம்தேவன் நம்மேல் மிகுந்த கரிசனை யுள்ளவர் எனவே அன்று அன்னாள் செய்ததுபோல தேவனிடம் வாயை திறந்து உங்கள் காரியங்களை எல்லாம் சொல்லி விடுங்கள் மற்றதை அவர் பார்த்துகொள்வார்
I சாமுவேல் 1:15அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
-- Edited by SUNDAR on Monday 23rd of April 2012 10:36:57 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நமக்கு மாம்சமானவர்கள் யார்? யார்? என்பதையும் சகோதரர் வேதத்தின் அடிப்படையில் விளக்குவாரானால் பிரயோஜனமாய் இருக்கும்..
சகோதரர் அவர்களே தங்கள் கேள்விகள் மிக ஆழமாக இருக்கிறது. நான் தியானித்து அறிந்தவைகளை சுருக்கமாக இங்கு தருகிறேன். மேலதிக விளக்கங்கள் இருந்தால் தரவும்.
என்னுடய கட்டுரையில் நான் "பிறன்" என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தை வேத வசனத்தின் படி "உன் மாம்சமானவனுக்கு" என்ற வார்த்தையே குறிக்கும் எனவே இரண்டுக்கும் ஒரே விளக்கத்தையே தருகிறேன்.
கீழ்கண்ட வசனங்களில் "மாமசமான யாவருக்கும்" என்ற வார்த்தை யாரை குறிக்கிறதோ அவர்களையே மாம்சமனவர்கள் என்று நான் கருதுகிறேன்.
அந்தப்படியே, ஆதாம்/ஏவாள் பரம்பரையில் உருவான எல்லா மனுஷர்களுமே நம் மாம்சத்தில் மாம்சமானவர்கள்தான் என்பது என்னுடய புரிதல். அதன் அடிப்படையில் நாம் பேசும் எந்த ஒரு மாம்சமான நபரிடமும் உலக காரியங்களையும் ஒளித்துவைத்து
பேசுவது ஏற்றதல்ல அதற்காக நம்மை பற்றிய எல்லா காரியங்களையும் எல்லோரிடமும் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஆனால் யாரிடம் எதைகுறித்து பேசுகிறோமோ அதைக்குறித்த நமது காரியங்களை நமக்குள்ளவைகளை/ நமது எண்ணங்களை ஒளிக்காமல் பேசுவது நல்லது. குறிப்பாக உள்ளொன்றும் வெளியொன்று பேசுவது தேவனுக்கு அருவருப்பாயிருக்கும் என்பது எனது கருத்து
-- Edited by SUNDAR on Tuesday 24th of April 2012 04:11:17 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆதியாகமம் 2:24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரேமாம்சமாயிருப்பார்கள்.
மத்தேயு 19:5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும்ஒரேமாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
மத்தேயு 19:6 இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரேமாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
மாற்கு 10:8 அவர்கள் இருவரும் ஒரேமாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரேமாம்சமாயிருக்கிறார்கள்.
எபேசியர் 5:31 இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரேமாம்சமாயிருப்பார்கள்.
'ஒரே மாம்சம்' என்ற வேறொரு உறவு பாவமாய் என்னபடுகிறது..அது வேசித்தனம்..
I கொரிந்தியர் 6:16 வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரேமாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
இப்போது இதை குறித்து பேசுவது தேவையட்ட்றது!!
'உன் மாம்சமானவன்'என நாம் யாரை சொல்லமுடியும் என்றால்..
மணவாட்டி சபையாகிய நாம் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாகாவும்,அவரது சரீரத்தின் தனி தனி அவயமாகவும் இருக்கிறோம்..
I கொரிந்தியர் 12:27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
ஆக நம் சகோதர அன்பிற்கு உட்பட்ட கிறிஸ்துவின் சரீரமாகிய மற்ற சகோதர சகோதரிகள் தான் 'உன் மாம்சமானவன்' என தேவன் குறிபிடுகிறவர்கள்..
பிறன்'என வேதம் நமக்கு காட்டுகிரவர்களும் சபைக்குள் அடக்கமான லேவியரும்,ஆசாரியரும்,எருசலேம் மனிதரும்,சமாரியருமே தவிர பெலிஸ்தியரும்,மீதியானியரும் ,பாபிலோனியரும்,அல்ல!!
பின் வரும் வசனங்களை பாருங்கள்..
லூக்கா
10 அதிகாரம்
29. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
32. அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
33. பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
கிறிஸ்துவுக்குள் முன் குறிக்கபடாத புறஜாதியாரை நம் மாம்சமானவர்கள்/கிறிஸ்துவின் மாம்சமானவர்கள் என கருததேவை இல்லை சகோதரரே...
GLORY TO GOD..
-- Edited by JOHN12 on Wednesday 25th of April 2012 02:54:53 PM
ஆக நம் சகோதர அன்பிற்கு உட்பட்ட கிறிஸ்துவின் சரீரமாகிய மற்ற சகோதர சகோதரிகள் தான் 'உன் மாம்சமானவன்' என தேவன் குறிபிடுகிறவர்கள்..
-- Edited by JOHN12 on Wednesday 25th of April 2012 02:54:53 PM
தங்கள் பதிலுக்கு நன்றி சகோதரரே "உன் மாம்சமானவன்" என்ற பதத்தை பொறுத்தவரை வசனத்தின் அடிப்படையில் தங்கள் விளக்கம்
சரியானதாகவே இருக்கிறது மறுப்பதற்கில்லை. ஆனால் "ஆதாம்" என்னும் முதல் மாம்சமான மனுஷனில் இருந்து நம்போன்ற எல்லா மாம்சமும் தோன்றியிருப்பதால் அந்த பதம் எல்லா மாம்சமான வர்களையும் குறிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது எனது கருத்து.
தாங்கள் கிறிஸ்த்தவர்களையும் மற்றவர்களையும் பிரித்தே பார்க்கிறீர்கள் ஆனால் நான் இறுதி முடிவு வரும்வரை யாரையும் பிரித்து பார்ப்பது இல்லை. காலம் வரும்வரை யாரை குறித்தும் முடிவு எடுக்க நான் விரும்பவில்லை. எல்லோரும் மீட்கப்படவேனும் என்ற தேவனின் சித்தத்தின் படியே நான் நோக்குகிறேன்.
தங்கள் கருத்தில் எனக்கு ஒரு சந்தேகம் என்னவெனில் "ஓன்று
ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசினால் எல்லோரிடமும்
அப்படியே பேசும் பழக்கம் நமக்கு உண்டாகும். தாங்கள் சொல்வதுபோல் ஒருசாராருக்கு ஒளிக்காமல் பேசுவதும், மற்றவர்களிடம் சிலவற்றை ஒளித்துவைத்து பேசுவதும் எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை. பாகுபாடு பார்க்க ஆரம்பித்தாலே அங்கு கள்ளத்தனம் தானாக வந்து விடும் என்றே நான் கருதுகிறேன்.
JOHN12 wrote
////பிறன்' என வேதம் நமக்கு காட்டுகிரவர்களும் சபைக்குள் அடக்கமான லேவியரும், ஆசாரியரும், எருசலேம் மனிதரும்,சமாரியருமே தவிர பெலிஸ்தியரும்,மீதியானியரும் ,பாபிலோனியரும்,அல்ல!! ///
"நமக்கு பிறன் யார்?" என்ற கருத்தில் ஆண்டவராகிய இயேசு சொல்லவந்த அடிப்படை கருத்து "யாரென்று ஆராயாமல் தன்னலம் பாராமல் உதவி செய்பவனே நமக்கு பிறன்" என்ற கருத்தேயன்றி அங்கு எந்த ஒரு குறிபிட்ட ஜாதியையும் குறிப்பதற்காக ஆண்டவர் சொல்லவில்லை என்றே நான் கருதுகிறேன்.
சமாரியர்கள் என்பவர்கள் ஆண்டவருக்கு பிடிக்காதவர்கள் என்பதை ஆண்டவர் "பிள்ளைகளின் அப்பத்தை நாய்க்குட்டிக்கு போடுவது
சரியல்ல" என்ற வார்த்தையின் மூலம் நமக்கு தெரிவித்திருக்கிறார். அதாவது இஸ்ரவேலரை பிள்ளைகளாகவும் சமாரியராகிய நாய்களாகவும் அங்கு சித்தரித்திருக்கிறார்.
II இராஜாக்கள் 17:24அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்யாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச்சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.
மேலேயுள்ள வசனங்கள் சமாரியர்கள் என்பவர்கள் யூதரோடு சம்பந்தம் கலவாத அன்னியர்கள என்பதை உணர்த்துகிறது.
இந்நிலையில் இங்கு அடிபட்டவனுக்கு மனதிரங்கி உதவி செய்ய எந்த ஒரு யூதனும் முன்வராதிருக்க ஒரு அந்நியனாகிய சமாரியன் "எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பாகுபாடு பார்க்காமல் உதவி செய்கிறான் "அவனே அவனே உனக்கு பிறன்" அதுபோல் நீயும் எந்த பாகுபாடும் பாக்காமல் எல்லோருக்கும் உதவிசெய் என்பது போலவே இயேசு
சொல்லியிருப்பதாகவே நான் அறிகிறேன்.
லுக்: 10 36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித்தோன்றுகிறது என்றார். 37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான்.
இங்கு அடிபட்டவனுக்கு மனதுருகி இரக்கம் செய்த யூதரல்லாத அன்னியனே அவனுக்கு பிறன் என்று பொருளாகிறது. அதன்படி யாரையும் பாகுபாடில்லாமல் பார்க்கவே நான் விரும்புகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அனைவரையும் தம் மாம்சமாக கருதும் நற்பழக்கம் மிக நல்லது தான்.
கர்த்தரும் அவ்வாறாகவே சற்குனறாய் இருந்து அனைவரையும் தம் சரீரமாகிய சபையில் சேர்க்க வேண்டி தம் ஒரே பேரானவரை மீட்கும் பொருளாய் தந்தார்.
ஆனால் அனைவரும் கிறிஸ்துவின் சரீரத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர்..
கிறிஸ்துவை புறக்கணிக்கும் தேவ வழியை அறியா வேசிபிள்ளைகள் கிறிஸ்துவின் சரீரத்திற்கு உட்பட்டவர்கள் அல்லரே..
Bro//தாங்கள் கிறிஸ்த்தவர்களையும் மற்றவர்களையும் பிரித்தே பார்க்கிறீர்கள் ஆனால் நான் இறுதி முடிவு வரும்வரை யாரையும் பிரித்து பார்ப்பது இல்லை. காலம் வரும்வரை யாரை குறித்தும் முடிவு எடுக்க நான் விரும்பவில்லை. எல்லோரும் மீட்கப்படவேனும் என்ற தேவனின் சித்தத்தின் படியே நான் நோக்குகிறேன். ///
தேவன் இருளையும்,ஒளியையும் வெவ்வேறாக பிரித்தார் ஆகவே உண்மை கிருஸ்துவர்களையும்,மற்றவர்களையும் நான் பிரித்தே பார்க்கிறேன்.முடிவு வந்த பின் இவ்வேறுபாடுகளை அறிவதால் என்ன பயன் சகோதரரே..முடிவின் பின் நமக்கு உலகத்தில் என்ன கிரியை உண்டு!!
நாம் கபடற்றவர்களாக இருக்கவேண்டுமே தவிர, ஏமாளிகளாய் அல்ல!!!
நிச்சயம்.,ஒருவர் கர்த்தருக்குள் இருப்பவரா இல்லையா என்பதை தேவ உணர்த்துதலின் படியும்,அவர்களின் கனியையும் பார்த்து அறியலாம்..
சரியானதாகவே இருக்கிறது மறுப்பதற்கில்லை. ஆனால் "ஆதாம்" என்னும் முதல் மாம்சமான மனுஷனில் இருந்து நம்போன்ற எல்லா மாம்சமும் தோன்றியிருப்பதால் அந்த பதம் எல்லா மாம்சமான வர்களையும் குறிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது எனது கருத்து. ///
ஆதாமில் ஒருந்து பிறந்த நாம் தற்போது பிந்தின ஆதாமாகிய உயர்பிக்கிற ஆவியானவருக்கு பிள்ளைகளாய் இருக்கிறோம் என்பதை சகோதரர் கவனத்தில் கொள்வாராக!!
அனைவரும் ஒரு தகப்பணனின் பிள்ளைகள் என்றால் பின் வரும் வசனத்தில் உள்ள "அந்நிய மாம்சம்" யார்!! விருத்தசேதனமற்ற இருதயமுள்ள வேசித்தனத்தின் பிள்ளைகள் அல்லவே!!
எசேக்கியேல் 44:7 நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டு வந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.
எசேக்கியேல் 44:9 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ளஅந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.
சரியல்ல" என்ற வார்த்தையின் மூலம் நமக்கு தெரிவித்திருக்கிறார். அதாவது இஸ்ரவேலரை பிள்ளைகளாகவும் சமாரியராகிய நாய்களாகவும் அங்கு சித்தரித்திருக்கிறார். ///
சகோதரரே நீங்கள் கூறும் பெண் கிரேக்க பெண் .சமாரிய பெண் அல்ல.(கிரிக் கத்தோலிக்கர்கள் அநேகர் கிரீசில் தற்போது உள்ளார்கள் அது தனி கதை..பின் வரும் வசங்களை பாருங்கள்..
மாற்கு 7:26. அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.27. இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். மத்தேயு 15:22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
சமாரியர்கள் தேவனுடையவர்களாய் இருந்தார்கள் என்பதக்கு பின் வரும் வசனங்களை ஆதாரமாய் தருகிறேன்..
சமாரியாவில் ஆவியில் நிறைந்த சபை உண்டு!
அப்போஸ்தலர் 9:31 அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
தண்ணீர் மொள்ளவந்த ஸ்திரி மேசியாவையும் அறிந்தவலாகவே இருக்கிறாள்.
சமாரியர்கள் மலையில் பிதாவை தொளுகிரவர்கலாக ஏசு காண்பிகிறார் பாருங்கள்!!
யோவான் 4 :21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
22. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
யோவான் 4:39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
Bro//தங்கள் கருத்தில் எனக்கு ஒரு சந்தேகம் என்னவெனில் "ஓன்று ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசினால் எல்லோரிடமும்
அப்படியே பேசும் பழக்கம் நமக்கு உண்டாகும். தாங்கள் சொல்வதுபோல் ஒருசாராருக்கு ஒளிக்காமல் பேசுவதும், மற்றவர்களிடம் சிலவற்றை ஒளித்து வைத்து பேசுவதும் எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை. பாகுபாடு பார்க்க ஆரம்பித்தாலே அங்கு கள்ளத்தனம் தானாக வந்து விடும் என்றே நான் கருதுகிறேன். ///
சரி தான் சகோதரரே..
யோனத்தான் தன தகப்பனுக்கு,தாவீது எங்குள்ளான் என்ற உண்மையை ஒளிதிருந்ததனால் தான் தாவீது அரியணை ஏற முடிந்தது..
தாவீதின் மேல் பொறாமை கொண்டிருந்த சவுலை அவன் மகன் அறிந்திருந்த காரணத்தினால் தகப்பனுக்கு காரியத்தை ஒளித்தான்.
பினவரும் வசனத்தில் எசேக்கியா என்ற ராஜா ,தன்னை நோயின் வேளையில் விசாரிக்க வந்த பாபிலோநியருக்கு தன் பொக்கிஷம் முழுவதையும் ஒளிக்காமல் காண்பித்தார்..
II இராஜாக்கள் 20:13 எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.
ஆனால் இக்காரியம் தேவன் முன் பொல்லாப்பாய் இருந்தது. பலன் பார்த்த பொக்கிஷங்கள் அனைத்தும் ராஜ இரத பின் பாபிலோன் கொண்டுசெல்லப்படும் என்று ஏசாயா தீர்கதரிசனம் சொன்னார்..
ரகசியங்களை கட்டளை இன்றி வெளிபடுதுதல் கண்ணியை வரவழைக்கும் என நாம் அறியவேண்டியது..
ஆகவே,அந்நிய மாம்சமானவர்களுக்கு ஒளிக்காமல் இருப்பது கண்ணியை வரவழைக்கும். அது பிசாசுக்கு விளையாட வளாகம் அமைப்பதை போன்றது.
ஆகவே வேதம் காட்டும் படி அந்நிய மாசதாரோடு சம்பந்தம் கலவாமல்,நம் மாம்சமானவர்களுக்கு நம்மை ஒளிக்காதிருப்போம்.அது தேவனுக்கு சித்தம்..
JOHN12 wrote:சகோதரரே நீங்கள் கூறும் பெண் கிரேக்க பெண் .சமாரிய பெண் அல்ல.(கிரிக் கத்தோலிக்கர்கள் அநேகர் கிரீசில் தற்போது உள்ளார்கள் அது தனி கதை..பின் வரும் வசங்களை பாருங்கள்..
மாற்கு 7:26. அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்;
கிரேக்க ஸ்திரி என்றும் கானானிய ஸ்திரி என்றும் அடையாளம் காட்டபட்டு இயேசுவால் "உன் விசுவாசம் பெரிது" என்று பாராட்டபட்ட அந்த ஸ்திரி ஒரு சமாரிய ஸ்திரி அல்ல என்பதை சகோ JOHN12 அவர்களின் விளக்கங்கள் மூலம் அறிய முடிகிறது.
கானானிய ஸ்திரியை "சமாரிய ஸ்திரி" என்று தவறாக கணித்து விட்டேன் மன்னிக்கவும்.
"பிறருக்கு நம்மை ஒழிக்காமல் இருப்பது' என்பது குறித்து நான் அறிந்தது என்னவெனில்
இந்த உலகத்தில் அநேகர் தங்கள் உண்மை நிலைமையை அப்படியே பிறருக்கு காட்டுவது இல்லை. ஒரு சாரார் தங்களிடம் என்னதான் பொருளும் பணமும் இருந்தாலும் எப்பொழுதுமே "என்னிடம் எதுவும் இல்லை ரொம்ப கஷ்டப்படுகிறோம்" என்று சொல்வார்கள். தங்களுக்கு இருப்பதை பிறருக்கு தெரியாமல் ஒளித்து, அதன் மூலம் ஆதாயம் தேட விரும்புவார்கள். இப்படி அநேகரை நாம் பார்க்க முடியும். அவர்களிடம் எதுவும் இருக்கிறது என்று சொல்லிவிட்டால் யாராவது கேட்டு விடுவார்களோ என்ற பயமே இதற்க்கு காரணம். தேவன் அனுமதிக்காத எந்த பொருளும் பணமும் நம்மிடம் நிச்சயம் தங்காது எனவே இவ்வாறு ஒழித்து மறைத்து வைக்காமல் "உள்ளதை உள்ளது" என்று சொல்வது அவசியம்.
இன்னொரு சாரார் தங்களிடம் ஒன்றும் இல்லாது இருந்தும் தங்களை ஏதோ பெரியவர்கள் போல காட்டிக்கொள்ள முயல்வார்கள். வீட்டுக்குள் சாப்பாட்டுக்கு கூட வழி இருக்காது ஆனால் அவர்கள் "நாங்கள் எல்லாம் ரேஷன் அரிசியில் செய்த எந்த பண்டமும் சாப்பிடுவது இல்லை" என்பது போல் மிக உயர்ந்தவர்கள் போல் தங்களை காட்டிக்கொள்ள நினைப்பார்கள். அதுபோல் அலுவலகங்களிலும் பலர் தங்கள் உண்மை நிலையை பிறருக்கு சொன்னால் அங்கு மதிப்பும் மரியாதையும் இருக்காது என்று எண்ணி இல்லாததை எல்லாம் இருபதுபோல் காட்டி கொள்வார்கள் அதுவும் தன்னை ஒழிப்பதுதான்! "இல்லாததை இல்லை" என்று சொல்வது அவசியம்.
இந்த இரண்டு நிலையிலும் இல்லாமல் நமது உண்மை நிலையை பிறர் தெரிந்துகொள்ளும் அளவுக்கு வெளிப்படையாக நடப்பதுதான் "பிறருக்கு தன்னை ஒளிக்காமல்" இருப்பது என்பது என்னுடய கருத்து.
இந்த காரியங்களை செய்வதற்கு "சகோதரன்" "அந்நியன்" "உறவினன்" என்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.
மற்றபடி சகோதரர் செல்வம் சொல்வதுபோல் வசனம் போதிப்பதுபோல் "பொய் சொல்ல கூடாது" ஆனால் எல்லோரிடமும் எல்லா உண்மை யையும் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை
அதேபோல் சகோ. JOHN12 அவர்கள் சொல்வதுபோல் ஆவிக்குரிய காரியங்களில் யாருக்கு எதை சொல்லவேண்டுமோ அதை மட்டுமே சொல்வது அவசியம், மற்றவற்றை தேவன் அனுமதிக்கும் வரை பிறருக்கு சொல்லாமல் ஒளிப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்னையும் தங்கள் சகோதரனாக ஏற்று கொண்டதற்க்காக தாங்களுக்கு மிக்க நன்றி
இங்கு நான் ஏற்றுக்கொள்வதற்கு என்று ஒன்றுமே இல்லை அன்பு சகோதரரே! சபைக்கு தலையாக இருக்கும் நாம் ஆண்டவராகிய இயேசு நமது ஆவிக்குரிய தகப்பனாகவும் இருக்கிறார். அவர் குடும்பத்தின் அங்கத்தினராக இருக்கும் ஒவ்வொருவரும் நமக்கு சகோதரர்களே.
மத்தேயு 23:8கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப்போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
தங்களை "சகோதரர்" என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன். இயேசுவின் குடும்பம் பெருக பெருக சத்துருவின் செயல்பாடு வலுவிழந்து போகும்தானே!
(தமிழில் மிக அழகாக எழுத பழகியிருக்கிறீர்கள்)
ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப்பாராக
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)