ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு தேவனுடய பிள்ளைகள்ஆகி கிறிஸ்த்தவர்கள் பெயருடன் வாழும் நமக்கு தேவனால் அருளப்பட்ட ஈவு என்று நான் கருதுவது, "உன்னதத்தில் இருந்து இரங்கி வந்து நம்முள் தங்கி நம்மை வழி நடத்தும் பரிசுத்த ஆவியானவரே!"
உலகத்தில் உள்ள மற்ற மக்களோ அவரை காணாதும் அறியாதும் இருப்பதால் அவரை பெற்றுக் கொள்ளவில்லை.
யோவான் 14:17உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது
ஆனால் நாமோ அவரை அறிந்திருக்கிறோம்! அவர் நமக்குள் வாசம் பண்ணி நமக்குள்ளே இருப்பதால் நாம் அவரை அறிந்து பெற்றுக் கொண்டுள்ளோம்
யோவான் 14:17;
அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
இவ்வாறு நமக்குள் வந்து தங்கியிருக்கும் ஆவியானவரின் முக்கிய வேலை "பாவத்தை கண்டித்து உணர்த்துவதே"
யோவான் 16:8அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
எனவே ஒருவருக்கு பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தும் ஆவி இல்லை என்றால் அங்கு பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் வேறு ஏதோ ஒரு ஆவி கிரியை செய்கிறது என்றே நாம் நிதானிக்க முடியும். ஏனெனில் அவர் ஒருவரே நம்மை தேவனுக்கு ஏற்ற பரிசுத்த நிலைக்கு நடத்த முடியும் எனவே செம்மையான ஆவியை பெற்றவர்கள் அன்றாடம் அவரின் வழி நடத்துதலில் மகிமைமேல் மகிமை அடைந்து பரிசுத்தம் ஆவார்கள் என்பது நான் அறிந்த உண்மை.
இந்நிலையில், அவ்வாறு ஆவியானவரின் கடிந்துகொள்ளுதல் அல்லது வழி நடத்துதலை அனுபவபூர்வமாக அறிந்தவர்கள் இங்கு தங்கள் அனுபவங்களை பதிவிடலாம், அது பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சமீபத்தில் அண்ணன் தம்பிக்கிடையே ஏற்ப்பட்ட ஒரு சொத்து தகராறில் தம்பியின் சொத்தை ஆக்கிரமிக்க நினைத்த அண்ணனிடம், தம்பிக்கு சாதகமாக நின்று ரொம்ப அதிகமாக பேசிவிட்டேன்.
நான் பேசியது நியாயமானதுதான் என்றாலும் நான் பேசிய விதத்தில் தவறு இருந்ததால் ஆவியானவர் துக்கபட்டார்.
நல்லவன் கெட்டவன் என்று யாரிடம் வாக்குவாதம் பண்ணினாலும் ஆவியானவர் துக்கப்படுகிறார் என்பதை என்னால் அறியமுடிகிறது.
அத்தோடு நமது நியாயமான கோரிக்கையை அல்லது நமக்கு நியாயமாக சேரவேண்டிய பொருளையோ பணத்தையோ வாங்குவதற்கு போராடினாலும் கூட பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுகிறார் என்ற காரியமே விசேஷமான பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலாக நான் சமீபத்தில் அறிந்தது.
அதற்க்கு ஒப்பாக விவிலிய வசனத்தை தேடியபோது:
உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு மத் 5:40