இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் குறித்த அனுபவங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் குறித்த அனுபவங்கள்!
Permalink  
 


ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு தேவனுடய பிள்ளைகள்ஆகி கிறிஸ்த்தவர்கள் பெயருடன் வாழும் நமக்கு தேவனால் அருளப்பட்ட ஈவு என்று நான் கருதுவது, "உன்னதத்தில் இருந்து இரங்கி வந்து  நம்முள் தங்கி நம்மை வழி நடத்தும் பரிசுத்த ஆவியானவரே!"
 
உலகத்தில் உள்ள மற்ற மக்களோ அவரை காணாதும் அறியாதும் இருப்பதால் அவரை பெற்றுக் கொள்ளவில்லை.
 
யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது
 
ஆனால் நாமோ அவரை அறிந்திருக்கிறோம்! அவர் நமக்குள் வாசம் பண்ணி நமக்குள்ளே இருப்பதால் நாம் அவரை அறிந்து பெற்றுக் கொண்டுள்ளோம்
 
யோவான் 14:17  ;
அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
 
இவ்வாறு நமக்குள் வந்து தங்கியிருக்கும் ஆவியானவரின் முக்கிய வேலை "பாவத்தை கண்டித்து உணர்த்துவதே"
 
யோவான் 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
 
எனவே ஒருவருக்கு பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தும் ஆவி இல்லை என்றால் அங்கு பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் வேறு ஏதோ ஒரு ஆவி கிரியை செய்கிறது  என்றே நாம் நிதானிக்க முடியும்.  ஏனெனில் அவர் ஒருவரே நம்மை தேவனுக்கு ஏற்ற பரிசுத்த நிலைக்கு நடத்த முடியும் எனவே செம்மையான ஆவியை பெற்றவர்கள் அன்றாடம்  அவரின்  வழி நடத்துதலில் மகிமைமேல் மகிமை அடைந்து பரிசுத்தம் ஆவார்கள் என்பது நான் அறிந்த உண்மை. 
 
இந்நிலையில், அவ்வாறு ஆவியானவரின் கடிந்துகொள்ளுதல் அல்லது வழி நடத்துதலை  அனுபவபூர்வமாக அறிந்தவர்கள் இங்கு தங்கள் அனுபவங்களை பதிவிடலாம், அது பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சமீபத்தில் அண்ணன் தம்பிக்கிடையே ஏற்ப்பட்ட ஒரு சொத்து தகராறில் தம்பியின் சொத்தை ஆக்கிரமிக்க நினைத்த அண்ணனிடம், தம்பிக்கு சாதகமாக நின்று ரொம்ப அதிகமாக பேசிவிட்டேன். 
 
நான் பேசியது நியாயமானதுதான் என்றாலும் நான் பேசிய விதத்தில் தவறு  இருந்ததால் ஆவியானவர் துக்கபட்டார்.     
 
நல்லவன் கெட்டவன் என்று யாரிடம்  வாக்குவாதம் பண்ணினாலும் ஆவியானவர் துக்கப்படுகிறார்  என்பதை என்னால் அறியமுடிகிறது.
 
அத்தோடு நமது நியாயமான  கோரிக்கையை  அல்லது நமக்கு நியாயமாக சேரவேண்டிய பொருளையோ பணத்தையோ வாங்குவதற்கு  போராடினாலும் கூட பரிசுத்த  ஆவியானவர் துக்கப்படுகிறார் என்ற காரியமே விசேஷமான பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலாக நான் சமீபத்தில் அறிந்தது.
 
அதற்க்கு ஒப்பாக விவிலிய வசனத்தை தேடியபோது:    
உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு  மத் 5:40
 
என்ற வார்த்தை நியாபகத்துக்கு வந்தது.


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரரே ..

 

நீங்கள் கூறுகிற காரியம் உண்மையே.. எனக்கும் இதைபோன்ற உணர்த்துதல் ஏற்பட்டது.

நண்பனுக்கு கொடுத்த கடனை சமீபத்தில் பலமுறை கேட்டபின்னும் வாக்களித்த படி திருப்பி தராமல் அவர் தற்போது கால் அட்டென்ட் செய்வதை நிறுத்திவிட்டார்.

நான் கொடுத்த கடனை பலமுறை திருப்பி கேட்க முனைந்த போது என்னால் தேவ ஆவியானவர் துக்கபட்டதை உணரமுடிந்தது....no



-- Edited by JOHN12 on Monday 21st of May 2012 03:30:11 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard