கிறிஸ்து உயிர்த்த பின் ஏன் சாத்தானை அழிக்காது இன்றுவரை விட்டு வைத்தார் ?
சகோ. SAR அவர்களே தாங்களின் இந்த கேள்விக்கு கிறிஸ்த்தவர்கள் பலவிதமான பதில்களை தயாராக வைத்திருக்கிறார்கள். அவர்களின் எந்த ஒரு பதிலையும் நான் குறைகூற விரும்பவில்லை ஆனால் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து நான் அறிந்த பதிலை இங்கு தருகிறேன் ஏற்ப்பதும் ஏற்காததும் தங்கள் விருப்பம்.
ஆதியில் எதேன் தோட்டத்தில் தேவனால் படைக்கபட்ட ஆதாமும் ஏவாளும் சாத்தானின் தூண்டுதலால் கீழ்ப்படியாமையின் மூலம் தேவனின் கட்டளையை மீறி விலக்கபட்ட கனியை புசித்தபோது சாத்தான் மனுஷர்களுக்குள் புகுந்து அவனது தீய காரியங்களை மனுஷர்கள் மூலம் செய்து முடிக்கும் வல்லமையை பெற்றான். அதன் பின்னரே அவன் காஈனுக்குள் புகுந்து ஆபேலை கொலை செய்தான். யூதாசுக்குள் புகுந்து இயேசுவை காட்டி கொடுத்தான்.
கீழ்படியாமையால் இழந்து போனதை கீழ்படிதல் மூலம் மட்டுமே திரும்ப பெற முடியும்.
எனவே, தேவன் பழய ஏற்பாட்டு காலம் முழுவதும் பல்வேறு கட்டளை மற்றும் நீதி நியாங்களை போதித்து அவைகளை கைகொண்டு நடக்கும் படிகட்டளையிட்டார். ஆனால் அவர்களோ தேவனின் கட்டளையை அவமாகிபோட்டார்கள்
எரேமியா 31:32நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறிஅவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இவ்வாறு எல்லோருமே தேவனின் கட்டளைகளை மீறி ஏகமாய் கெட்டுபோய் தேவனுக்கு கீழ்படிந்து சாத்தானை ஜெயிக்கும் தகுதியை இழந்து போனார்கள்
ரோமர் 3:12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. என்ற நிலை ஏற்ப்பட்டது.
சாத்தான் ஆவிக்குரியவனாக இருக்கிறான் மனுஷனோ மாம்சத்துக்குரியவனாக இருக்கிறான்! இந்நிலையில் சாத்தானை எந்த ஒரு மனுஷனாலும் தன் சுய பலத்தால் ஜெயித்து விட முடியாது என்ற நிலை ஏற்ப்பட்டபோது, சாத்தானை ஜெயிப்பதற்கு புது ஆவிக்குரிய பெலனை கொடுகவும் இழந்து போன மனு குலத்தை மீட்டெடுக்கவும் இயேசுவானவர் அனுப்பபட்டார்.
லூக்கா 19:10இழந்துபோனதைத்தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
இழந்து போனதை தேடவந்த மனுஷகுமாரன் தன் மரணத்தின் மூலம் "பரிசுத்த ஆவி" என்னும் கூடுதல் வல்லமையை மனுஷனுக்கு தந்தருளினார். இப்பொழுதும் நாம் அந்த ஆவியானவரின் பலத்தடன் நமது முழு மனதையும் பலத்தையும் சேர்த்து தேவன் மீது அன்புகூர்ந்து தேவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்து சாத்தானை ஜெயித்தால் மட்டுமே மனுஷனை பிடித்துள்ள சாத்தானை ஜெயிக்க முடியும். அதன்பின்னர் மனுஷர்கள் மீது சாத்தானுக்கு அதிகாரம் இல்லாமல் போகும். அப்பொழுதுதான் சாத்தானை பிரித்து நிரந்தரமாக பாதாளத்தில்தள்ளி அடைக்கதேவனால் முடியும்.
தாங்கள் கேட்பதுபோல் இயேசு மரித்து உயிர்த்த உடன் சாத்தானை அழித்தால் சாத்தானின் ஆவியால் பிடிக்கப்பட்டிருக்கும் முழு மனுக்குலமும் அவனோடு சேர்ந்து அழிந்துபோவார்கள் அல்லது அவனோடு சேர்ந்து அக்கினி கடலுக்கு போய்விடுவார்கள். எனவே சாத்தனையும் மனுஷனையும் தனித்தனியே பிரித்து பின்னர் சாத்தானை அக்கினி கடலில் தள்ளுவதுதான் தேவனின் திட்டம். அந்த திட்டத்தின் நிறைவேருதல்கள்தான் தற்போது நடந்து வருகிறது. எனவே அந்த திட்டத்தின் நிறைவேருதலின் போதுதான் சாத்தான் அழிக்கப்படுவான் அல்லது நித்தியமாக அடைக்கப்படுவான்.
இவ்வாறு கற்ப்பனை பண்ணி பாருங்கள் "ஒரு சிறு குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்துகொண்டு ஒரு திருடன் திருடுகிறான் அவன் செயலை தடுத்தால் அல்லது அவனை அழிக்க முயன்றால் ஒருவளை அந்த சிறு பிள்ளைக்கு பாதிப்பு வரலாம். எனவே சிறு பிள்ளையை முதலில் அந்த திருடனிடம் இருந்து மீட்டுவிட்டு பின்னர் அவனை அழிப்பதுதானே சிறந்தது.
அதுபோல் சாத்தானானவன் தேவனின் படைப்பாகிய மனுஷர்களை பிடித்து வைத்து தேவனை ப்ளாக் மெயில் பண்ணிக்கொண்டு இருக்கிறான்.எல்லோரையும் சேர்த்து அழித்துபோடுவது தேவனுக்கு பெரிய காரியம் அல்ல. ஆகினும் "துன்மாக்கரோடு சேர்ந்து நீதிமானையும் அழிப்பது தேவனின் செயல் அல்ல என்பதை லோத்தின் காரியத்தில் இருந்து அறிய முடியும்.
எனவே முதலில் சாத்தானின் பிடியில் இருக்கும் மனுஷனை தனியே பிரித்துவிட்டு பின்னர் சாத்தானை முடிவுக்கு கொண்டுவருவதுதான் தேவனின் திட்டம். அந்த திட்டத்தின் நிறைவேருதளுக்கு சில கால நிர்ணயங்கள் இருப்பதால் சாத்தானை இயேசு உடனடியாக அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உண்மைதான் சகோ. SUNDAR அவர்களே எனது கேள்விக்கு கிறிஸ்த்தவர்கள் பலவிதமான பதில்களை கூறினார்கள். ஆனாலும் சரியாக புரியவில்லை. தங்கள்து பதில் மிக இலகுவாக புரியும் படியுள்ளது நன்றி சகோதரரே