இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்!
Permalink  
 


ஆண்டவராகிய இயேசு தான் உபதேச காலங்களில் பேசிய ஒரு அருமையான வார்த்தை இது. 

 மத்தேயு 13:12 உள்ளவன் எவனோ அவனுக்குக்  கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்

மாற்கு 4:25 உள்ளவனெவனோ அவனுக்குக்  கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

லூக்கா 19:26 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
.
மத்தேயு மார்கு லூக்கா மூவரும் இந்த வார்த்தையை குறித்து
தவறாமல் எழுதிவைத்துள்ளனர், எனவே இவ்வார்த்தைகள் மிக முக்கியமான வார்த்தைகள் என்று நான் கருதுகிறேன். 
.
இந்த வசனத்தின் நேரடி பொருள் அல்லது உலகப்பிரகாரமான பொருள் என்னவென்று பார்த்தால்:
 "பணம் பொருள் அல்லது சொத்து உள்ளவன் எவனோ அவனுக்கு மேலும் மேலும் அதிகமாக  கொடுக்கப்படும் அவன் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு பரிபூரணம் அடைவான் ஆனால் இல்லாதவனிடம் இருந்தோ உள்ளதும் பிடுங்கிகொள்ளப்படும் அல்லது எடுத்துக் கொள்ளப்படும் அவன் ஒரேயடியாக ஓட்டாண்டியாகி ஒன்றுமில்லாமல் போவான்" என்பது போல் உள்ளது. 
.
இதற்க்கு இசைந்தால் போல் இன்று பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் மேலும் மேலும் சொத்து சுகங்களை வாங்கி குவிப்பதை பார்க்க முடிகிறது. அதிக பணம் வைத்திருப்பவர்கள்  அதை  நல்ல இடங்களில் முதலீடு செய்து மேலும் மேலும் பணத்தையும் சொத்தையும் பெருக்குகிறார்கள் இல்லாத ஏழைகள் கையில் உள்ளதெல்லாம் பிடுங்கபட்டு உள்ளவர்கள் கையில் போய் சேர்வதை நாம் பார்க்கலாம்.
.
இது நடைமுறை உண்மையாக இருந்தாலும் ஆனடவரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளின் ஆவிக்குரிய பொருள் வேறாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்   
.
இந்த வசனத்த்துக்கு பல்வேறு விதமான வியாக்கீனங்களை நாம் கேட்டிருக்கலாம் அதில் நாம் அறிந்த புரிந்த விதத்தை இங்கு பதிவிட்டால் ஆண்டவர் சொன்னதன் உண்மையான பொருள் என்னவென்பதை அறியும் வாய்ப்பு ஏற்ப்படலாம் என்று கருதுகிறேன்.
.
சரியான விளக்கம் தெரிந்த சகோதரர்கள் தங்கள் விளக்கங்களை பதிவிடலாமே.
 


-- Edited by SUNDAR on Saturday 23rd of June 2012 11:02:57 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SUNDAR wrote:
 
மாற்கு 4:25 உள்ளவனெவனோ அவனுக்குக்  கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
 

 

மிகுந்த ஏழையாக இருந்து அதிக பணம் சம்பாதித்து பணக்காரன் ஆகியவனும் உண்டு அதேபோல் ஒரு காலத்தில்  ஓஹோ என்று கொடிகட்டி வாழ்ந்தவர்கள் இன்று உலகத்தில் ஒன்றும் இல்லாமல் இருப்பதும் உண்டு.  அப்படிபட்ட அநேகரை நான் என் வாழ்வில் பார்த்துவிட்டேன். எனவே பணம் பொருளை குறித்து ஆண்டவராகிய இயேசு இந்த வார்த்தையை சொல்லவில்லை என்றே நானும் கருதுகிறேன்.    

இந்த வசனத்துக்கு ஆவிக்குரிய விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கலாமே. 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்!
Permalink  
 


பின்வரும் தொடுப்பிலுள்ள எனது பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் எனது விளக்கம் உள்ளது. தயவுசெய்து தொடுப்பிற்குச் சென்று படிக்கும்படி வேண்டுகிறேன்.

http://www.christian-perfection.com/2007/Feb07.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

anbu57 wrote:

பின்வரும் தொடுப்பிலுள்ள எனது பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் எனது விளக்கம் உள்ளது. தயவுசெய்து தொடுப்பிற்குச் சென்று படிக்கும்படி வேண்டுகிறேன்.

http://www.christian-perfection.com/2007/Feb07.pdf


சகோ. அன்பு அவர்கள் தொடுப்பு கொடுத்துள்ள தளத்தில் சென்று பார்த்தபோது மிக அருமையான விளக்கங்களை பார்க்க முடிந்தது.   

ஆண்டவராகிய இயேசு சொன்ன இரண்டு உவமைகளாகிய  வெளியூர் போகும் எஜமான் தன் ஊளியக்காரனிடம் கொடுத்த 10௦,5,1 தாலத்து மற்றும் ராத்தல்,  அந்த தாலந்தை கொண்டு இருவர் சம்பாதித்தது ஒருவன் சம்பாதிக்காமல் அப்படியே  புதைத்து வைத்தது. 

இதன் அடிப்படையில் முயற்சி செய்தவன் சம்பாதித்தான் முயற்சி இல்லாமல் புதைத்து வைத்தவன் உள்ளதையும் இழந்துபோனான் என்று விளக்கியதோடு,  தன்னிடம் என்ன தாலந்து இருக்கிறதோ அதைகொண்டு மேலும் முயர்ச்சி செய்கிறவனுக்கு அதிகம் கொடுக்கப்படும். முயற்சி செய்யாதவனுக்கு உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்"  என்ற விளக்கமும்.

அதை தொடர்ந்து ஆவியை பெற்ற கிறிஸ்த்தவர்கள் மேலும் மேலும் முயர்ச்சிக்கும்போது இன்னும் அதிகமாக ஆவியின் வல்லமையை பெறமுடியும் என்றும் ஆவியை பெற்ற கிறிஸ்த்தவர்கள் தேவனை தேடும் முயர்ச்சியில்லாமல் இருக்கும்போது அவர்கள் அருளப்பட்டதையும்  இழந்து போவார்கள்" என்பது போன்ற விளக்கம் தந்துள்ளார்கள்.  நன்றி.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

 

 விசுவாசம் உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும் ; விசுவாசம் இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் ர்



__________________


புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்!
Permalink  
 


உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.

ஆண்டவனிடத்தில் விசுவாசம் என்பது
நன்றி
அன்போடு இருத்தல்
நேர்மை
கீழ்ப்படிதல்
உண்மை
சந்தேகம் கொள்ளாதிருத்தல்
சாத்தானின் கவர்ச்சிக்கு உட்படாதிருத்தல்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard