சில வருடங்களுக்கு முன்னர் நாங்கள இரண்டு குடித்தனம் மாத்திரம் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தபோது ஒருநாள் இரவு எல்லோரும் தூங்கிகொண்டு இருந்த சுமார் 1 ௦ மணிக்கு நான் மட்டும் தனியே விழித்து வெளியில் அமர்ந்துகொண்டு இருந்தேன். அப்பொழுது எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஏதோ தண்ணீர் பானைகள் உருட்டப்பட்டு கீழே விழுவதுபோல் பெரும் சத்தம் கேட்டது. உடனே எழுந்து அந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அந்த வீட்டு பெண்மணி வீட்டின் கதவை மூடாமல் பக்கத்து ரூமில் படுத்து தூங்கி கொண்டு இருக்க இன்னொரு அறையில் ஏதோ புகுந்து எல்லாவற்றையும் உருட்டி போட்டுகொண்டு இருந்தது அதில் தண்ணீர் பானைகள் எல்லாம் கீழ் விழுந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருந்தது.அதை பார்த்த நான் உடனடியாக அந்த வீட்டினுள் புகுந்து பானைகளை எல்லாம் சரிசெய்து வைத்துவிட்டு வெளியில் வந்தேன். அதுவரை அந்த வீட்டில் இருந்த பெண்மணி எழுந்து வரவே இல்லை.
மறுநாள் இது குறித்து என் மனைவியிடம் சொன்னபோது அவளுக்கு கோபம் வந்துவிட்டது "நீங்கள் எப்படி கணவன் இல்லாமல் பெண் மாத்திரம் தனியாக இருக்கும் அந்த வீட்டுக்குள் இரவு நேரத்தில் உள்ளே செல்லலாம்? யாராவது பார்த்தால் என்ன ஆயிருக்கும்? இதுபோல் வேலை எல்லாம் செய்யாதீர்கள். அது எல்லோருக்குமே பிரச்சனையாகிவிடும்" என்பதுபோல் சொல்லி திட்டி தீர்த்தாள்.
இது மட்டுமல்ல நான் யாருக்கு எந்த ஒரு நல்ல காரியத்தை அல்லது உதவியை செய்யபோனாலும் அல்லது யாருக்காவது நாலு ஆறுதலான வார்த்தைகளை சொல்ல போனாலும் , அதற்க்கு பின்னால் இப்படி இப்படியெல்லாம் பிரச்சனை இருக்கிறது எனவே அதை செய்யகூடாது, செய்தால் நாளை நமக்குத்தான் பிரச்சனை என்று சொல்லி நடக்கவே முடியாத காரணத்தை எல்லாம் சொல்லி தடை பண்ணுவது அவளது இயல்பு.
அதாவது நமக்கு பிறர் மேல் உண்மையான அன்பும் பரிவும் பாசமும் இல்லை என்றால் நான் என்ன செய்தாலும் அதில் ஏதாவது தவறு இருப்பது போலவே தோன்றும்.
தீத்து 1:15சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
.
ஆம்! நம் மனதில் சுத்தமான அன்பு இல்லை என்றால் நாம் எதை செய்யபோனாலும் அதனால் பிரச்சனை வருமோ என்ற பயமே உண்டாகும். நன்மை செய்வதால் சில நேரங்களில் பிரச்சனைகள் துன்பங்கள் வருவது உண்மைதான் என்றாலும் என்னை பொறுத்தவரை எந்த ஒரு உள் நோக்கமும் இல்லாமல் சுத்த மனதோடு செய்யும் காரியத்தினிமித்தம் பிரச்சனைகள் வருவது என்பது மிகவும் குறைவு. மேலும் சுத்த மனதோடு ஒருவர் செய்யும் காரியங்களில் தவறு இருந்தால் தேவனே அங்கு வந்து எச்சரித்து தடுப்பார் என்பதை அகிமேலேக்கு விஷயத்தில் நாம் வேதாகம வசனம் மூலம் அறிய முடியும்.
ஆதியாகமம் 20:5இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான். 6.அப்பொழுது தேவன்:உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; என்றார்
இன்னும்ஒரு உதாரணம்கூட வேதத்தில் இருந்து கூறலாம். கர்த்தருக்கு செம்மையானதை செய்த யோசபாத்து என்ற யூதா ராஜா தெரியாத்தனமாக துன்மார்க்கனான ஆகாப் என்ற இஸ்ரவேல் ராஜாவுடன் சமாதானமாக இருந்தான்.
I இரா 22:44யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான்.
அவர்கள் இருவரும் கூட்டுசேர்ந்து சீரியரோடு ஒரு யுத்தத்துக்கு போனார்கள்:
II நாளா 18:31 இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்;அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.
இங்கு யோசபாத்து சமாதானமாக இருக்கவேண்டும் என்று எண்ணி ஆகாபோடு யுத்தத்துக்கு போனான் அவனின் சுத்த மனதை அறிந்த கர்த்தர் அங்கு அவனை காத்தார்.
எனவே சரியான உண்மை தெரியாத நிலையில் சுத்த மனதோடு ஒரு நன்மையை செய்வதற்கு நாம் பயப்பட வேண்டிய எந்த அவசியமே இல்லை. சுத்த மனதோடு செய்யும் காரியங்கள்எல்லாம் சுத்தமாகவே இருக்கும்!
ஒருவேளை நாம் அப்படியே சுத்தமனதொடு செய்யும் காரியங்கள் மூலம் ஏதாவது தீங்கு நேர்ந்தாலும் அதை அனுபவிக்கவும் தயாராக இருப்பது நல்லது.
I பேதுரு 3:17தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்
ஆனால் முழுவதும் சுத்த மனது இல்லாது ஏதாவது ஆதாயத்தை கருத்தில் கொண்டு பிறருக்கு ஒரு நன்மையை செய்தால் அந்த நன்மைகள் மறைக்கப்பட்டு அதனால் அனேக பிரச்சனைகள்துன்பங்கள் உண்டாகும் என்பதையும் நாம் அறியவேண்டும்!
-- Edited by SUNDAR on Tuesday 17th of July 2012 10:55:25 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்றைய உலகம் தீமையால் நிறைந்திருக்கிறது. யாருக்கு நன்மை செய்ய போனாலும் அதனால் எதாவது ஒரு பின் விளைவு நம்மேல் வந்து சுமத்தபடுகிறது. இப்படி நடப்பதால் அநேகர் நன்மை செய்ய பயப்படும் நிலை இன்று உருவாகியுள்ளது. அப்படி ஒரு நிலையை இந்த் உலகில் இருப்பதன் மூலம் உண்மையான தேவையுடையோருக்கு கூட ஒரு நன்மையை செய்ய முடியாத நிலையை சாத்தான் உருவாக்கி வைத்துள்ளான்
ஆனால் தேவ பிள்ளைகளாகிய நாம் நன்மை செய்வதை எப்பொழுதும் நாடுபவர்களாக இருக்க வேண்டும். இந்த உலகில் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலும் அதில் எந்த பலனை எதிர்பார்க்காமலும் யாரிடமும் நல்ல பெயர் கிடைக்கும் என்ற எதிர்பாப்பு இல்லாமலும், செய்யும் காரியங்களை சுத்த மனதோடு, நம்மேல் விழுந்த கடமையாக எண்ணி செய்வோமாகில் அங்கு பிரச்சனைகள் எதுவும் வராதபடி கர்த்தர் நமக்கு நிச்சயம் துணை செய்வார்.
தேவன் நமது உத்தம இருதயத்தில் பிரியபடுகிறார்.
I நாளாகமம் 29:17என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்;
உத்தம இதையத்தொடு நன்மைகளை செய்யவேண்டும் என்ற வாஞ்சை இருந்தால் நாம் எந்த நன்மையையும் செய்ய முடியும் மற்றபடி, ஏதாவது எதிர்பார்ப்புடன் செய்யும் எல்லா நமையுமே நமக்கு பிரச்சனையை கொண்டுவருவது நிச்சயம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)