அறியாத ஜனங்களுக்கு கிறிஸ்த்துவை அறிவிக்க வேண்டும் என்ற அதிக பதட்டம் இருப்பதோடு பதில் தெரியாத பல்வேறு கேள்விகள் எனது இருதயத்தை
குழப்புகிறது
பொதுவாக இதுபோன்ற வெளிப்பாடுகள் மற்றும் படங்கள் எல்லாம் மனுஷனை பயம்காட்ட உருவாகியுள்ள கற்ப்பனை என்று நாத்திகவாதிகள் மட்டுமல்ல சில கிறிஸ்த்தவர்களே கூட கூறுகிறார்கள். காரணம் அவர்களுக்கு நரகத்தில் நடக்கும் காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை
ஒருபுறம் பார்த்தால் இல்லாத ஒன்றை கற்ப்பனை செய்து படம்வரைந்து போட்டு ஒருவரை பயம்காட்டி கிறிஸ்த்துவுக்குள் கொண்டு வருவதில் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே அதில் உண்மை இருக்க நிச்சயம் அதிக வாய்ப்பு இருக்கிறது.
இன்னொருபுறம் பார்த்தால் அந்த கொடுமையான இடம் பற்றிய வெளிப்பாடு எல்லோருக்கும் ஏன் கிடைப்பதில்லை என்ற கேள்வி எழுகிறது.
ஒரு மனுஷனுக்கு அவன் வாழ்நாளில் ஒரு முறையாது அந்த நரகத்தில் நடக்கும் காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு கொடுக்கபட்டால் அவன் மனம்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்குமே. பிறகு ஏன் அது மறைக்கப்படுகிறது என்பது புரியவில்லை.
அல்லது ஆண்டவராகிய இயேசு ஒருவரது வாழ்வில் ஒருமுறையாவது தரிசனமாகி "நான்தான் உண்மை
இறைவன் என்னை ஏற்க்காவிட்டால் நரகம் என்ற கொடிய இடம் போவது உறுதி" என்று எச்சரித்தாலாவது பல இரண்டும் கெட்டான் ஜனங்கள் அவரை நம்பும் வாய்ப்பு இருக்கிறது
.
ஆனால் பவுலுக்கும் யோவானுக்கும் ஸ்தேவானுக்கும் தரிசனம் தந்த இயேசு சாதாரணமான மனுஷர்களுக்கு தரிசனம் தருவது இல்லை.
மேலும் "சர்வ வல்லவர்" என்று போற்றப்படும் நம் இறைவன், இதுபோன்ற கொடிய இடத்தில் மனுஷனை போட்டு வதைப்பாரா? அல்லது வதைக்க அனுமதிப்பாரா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகினும், நரகம் பாதாளம் என்ற வேதனை மிகுந்த இடங்கள் இருக்கிறது என்பதை விவிலியம்
பலமுறை சொல்லி நம்மை எச்சரிக்கிறது. நமது தளத்தில் கூட
ஆனால் என்னுடைய கேள்வி என்னவெனில் பாவம் செய்த மனுஷனை தண்டிப்பது தேவனா? அல்லது சாத்தானா? என்பதுதான்.
எனக்கு தெரிவிக்கப்பட்டதை சுருக்கமாக சொன்னால்: தற்போது இந்த உலகம் முழுவதும் இங்குள்ள மனுஷர்களும் சாத்தானின் பிடியில் கீழ் உள்ளனர். இதில் இயேசுவை ஏற்றுகொண்டவர்களுக்கு மட்டும் பிசாசின் பிடியில் இருந்து விடுபட்டு தேவனின் பிள்ளைகள் ஆகும்படி அதிகாரம் கிடைக்கிறது.
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
ஆனால், பாதாளத்தில் வேதனை உண்டு என்று வசனம் தெரிவித்தாலும்
லூக்கா 16:23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது,தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
அங்கு சாத்தான் மரித்த மனுஷர்களை வாதிப்பதாக நேரடி வசன ஆதாரம் எதுவும் வேதாமகத்தில் இருப்பதுபோல் தெரியவில்லை.
ஆகினும் பாதாளத்தின் ராஜன் சாத்தான் என்று கீழ்கண்ட வசனம் நமக்கு தெரிவிக்கிறது:
வெளி 9:11அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
மேலும் தேவனின் சாட்சிகளை கொலை செய்யும் மிருகமானது பாதாளத்தில் இருந்து ஏறி வருவதாக வேதம் சொல்கிறது:
வெளி 11:7அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம்அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.
தேவன் இந்த உலகத்தையும் பாதாளத்தையும் சத்துருவின் கரத்தில் இருந்து பிடுங்கும்வரை பாதாளத்தில் செல்லும் ஜனங்களை வாதிப்பது சாத்தானின் கூட்டங்களே என்றுபலருடைய வெளிப்பாட்டின் அடிப்படையிலும் பாதாளம் சாத்தானின் உறைவிடமாக இருப்பதாலும் நம்ப தோன்றுகிறது .
ஆனால் உலகத்தின் முடிவிலோ:தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
மத்தேயு 13:50அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
மேலதிக விளக்கம் அறிந்தவர்கள் பதிவிடலாம், தவறிருந்தால் திருத்தலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நரகத்தில் உள்ள ஆன்மாக்களின் இரட்சிப்புகாக்க நாம் செபிக்க முடியுமா ?
தங்களின் இந்த கேள்வியை குறித்து தியாநிதுகொண்டிருந்தேன். பாதாளத்துக்குள் துன்பம் அனுபவிப்பனுக்கு இரட்சிப்பு கடந்துபோயவிட்டது என்று நான் அறிந்திருதாலும், மீண்டும் அவன் விடுவிக்கப்பட வாய்ப்புண்டா? முடியாது என்றால் அதற்க்கான சரியான காரணம் மற்றும் விளக்கம் என்ன? என்ற சிந்தனையில் இருந்தேன்.
இன்று அதிகாலை ஐந்து மணிக்கும் எழுந்து தூக்க கலக்கம் தீருவதற்காக சோபாவில் தலை சாய்த்துகொண்டு இருக்கும்போது நான் சரியாக தூங்காத நிலையில் ஒரு தரிசனம் கண்டேன்
அதாவது பாதாளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளையான ஒரு மனுஷனை பார்த்தேன். அவனுக்கு ஒரு கண் பிடுங்கபட்டிருந்தது உடம்பில் எந்த துணியும் இல்லாமல் வாய் மற்றும் தோன்றம் எல்லாமே கோணலாகி ஏறக்குறைய சாத்தானின் சாயலாகமாறிப்போயிருந்த அந்த மனுஷனை ஒரு நீட்ட பெஞ்சில் படுக்க வைத்துகொண்டு டாக்டரின் தோன்றம் போல் இருந்த ஒருவர் ஒரு நீட்ட கத்தியை கையில் வைத்திக்கொண்டு "இது போன்று பாதாளத்தில் இருக்கும் மனிதன் ரட்சிக்கபடுவது சாத்தியம் அல்ல" என்பதை புரியவைக்க ஏதோ விளக்கி கொண்டு இருந்தார். ஆனால என்னால் அதை சரியாக புரியமுடியவில்லை. திடீர் என்று அந்த டாக்டர் போன்றவர், தான் கையில் வைத்திருக்கும் நீட்ட கத்தியால் ஒரு மட்டன் துண்டை வெட்டுவதுபோல் அப்படியே அந்த பாதாள மனுஷனின் கையை பெரிதாக வெட்டினார் ஆகினும் அவன் கையில் இருந்து இரத்தம் எதுவும் வரவில்லை. அதை சுட்டி காட்டி ஏதோ விளக்கினார். (நான் மிகவும் பயந்து திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன், அந்த தரிசனத்தை நினைத்து மிகவும் கலங்கிபோனேன்)
அவர் என்ன விளக்கினார் என்பது எனக்கு சரியாக் புரியாவிட்டாலும் அங்குள்ளவர்களின் உடம்பில் இரத்தம் இல்லை என்றும் அவர்களை திரும்ப இரட்சிப்புக்கு கொண்டுவருவது கடினம் என்பதையும் என்னால் புரிய முடிந்தது.
தங்களின் கேள்விக்கு என்னுடய பதில் என்னவெனில்: நமக்கு வேண்டுதல் செய்ய திராணியிருக்கும்வரை நம்மால் அடுத்தவர்களுக்காக ஜெபிக்க சந்தர்ப்பம் இருக்கும்வரை எந்த ஒரு மனுஷனுக்காகவும் தேவனிடத்தில் வேண்டுதல் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் இன்னும் இறுதி நியாயதீர்ப்பு நடைபெறவில்லை. பாதாளத்தில் இருக்கும்/வேதனைப்படும் மனுஷர்கள் யாவரும் இறுதி நியாயதீப்பின் போது தேவன் முன்னால் நியாய தீர்ப்புக்கு நிற்ப்பார்கள் என்பது வேதம் சொல்லும் உண்மை.
வெளி 20:12மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்;
வெளி 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது;மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
.
அந்த நியாயதீப்பின் வேளையில் நம்முடைய வேண்டுதல்கள் கருத்தில் கொள்ளப்படலாம். ஆகினும் என்னுடைய கருத்து என்னவெனில் ஒருவரும் கெட்டுபோவது பிதாவாகிய தேவனின் சித்தம் அல்ல!
மத்தேயு 18:14இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
I தீமோத்தேயு 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
II பேதுரு 3:9ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
தேவனின் இந்த மேன்மையான சித்தம் /விருப்பம் நிறைவேர முடியாமல் சாத்தான் தடைபண்ணி வருகிறார். எனவே தேவனின் சித்தம் அப்படியே நிறைவேர நாம் அன்றாடம் அதிகமாக ஜெபிப்பது அவசியம் என்பது எனது கருத்து.
சகோ SUNDAR நீண்ட நாளாக எண்ணத்தில் இந்த கேள்வி இருந்தது .தங்களுக்கு ஏற்பட்ட திகில் பயத்துக்கு எனது இந்த கேள்வி காரணமாக இருந்த படியால் தங்களிடம் முதலில் மன்னிப்பு கோருகிறேன் .தங்களது தரிசன படி பாதாளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளையான ஒரு மனுஷனை அந்த மருத்துவரால் குணபடுத்த முடியாத படிக்கு சாத்தான் முழுவதுமாக அந்த மனுஷனை வதைத்துவிடான்.அதனால் தான் உடம்பில் இரத்தம் இல்லை. என்பதையும் தெளிவாக புரிய முடிந்தது எனவே நீங்கள் சொன்னது போல'' நமக்கு வேண்டுதல் செய்ய திராணியிருக்கும்வரை நம்மால் அடுத்தவர்களுக்காக ஜெபிக்க சந்தர்ப்பம் இருக்கும் வரை எந்த ஒரு மனுஷனுக்காகவும் தேவனிடத்தில் வேண்டுதல் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் இன்னும் இறுதி நியாயதீர்ப்பு நடைபெறவில்லை. பாதாளத்தில் இருக்கும்/வேதனைப்படும் மனுஷர்கள் யாவரும் இறுதி நியாயதீப்பின் போது தேவன் முன்னால் நியாய தீர்ப்புக்கு நிற்ப்பார்கள் என்பது வேதம் சொல்லும் உண்மை''.
-- Edited by sar on Tuesday 11th of September 2012 05:46:03 PM
பாதாளத்தை குறித்து நான் முதலில் பார்த்த தரிசனத்தில், அநேகர் அவரவர் செய்த பாவங்களுக்குதக்க தானாகவே பாதாளத்தில் வேதனை பட்டார்கள். யாரும் அவர்களை வேதனை படுத்தியதுபோல் நான் பார்க்கவில்லை.
ஆனால் பலர் எழுதிய நரகத்தை பற்றிய தெய்வீக வெளிப்பாடுகளில் சாத்தான் பாவிகளை வேதனைபடுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. மேலேயுள்ள நரகத்தை பற்றிய காட்சிகள் தொடுப்பும் அப்படிபட்ட ஒன்றுதான்.
நரக பாதாளத்தில் உள்ளவர்களை சாத்தான் வேதனை படுத்துவதற்கு எந்த வசன ஆதாரமும் இல்லை ஆகினும் அந்த வெளிப்பாடுகளை நாம் முன்றிலும் புரங்கனிக்க முடியாது காரணம். ஏனெனில்,
மரணம் என்பது ஒரு தூதன்! பாதாளம் என்பது அவனால் பிடிக்கபட்டவர்கள் தங்க வைக்கப்படும் ஒரு இடம்.
வெளி 6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது
அந்த தூதனின் பிடியில் இருக்கும் ஜனங்களைத்தான் மஹா நியாயதீர்ப்பின்போது தேவனிடம் ஒப்படைப்பதாக வசனம் சொல்கிறது.
வெளி 20:13 மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன
அந்த தூதன் நல்லவனா ஜனங்களை கொடுமை படுத்துகிரவனா என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை என்றாலும் இறுதியில் அந்த மரணம் என்னும் தூதன் பாதாளத்தோடு அக்கினி கடலிலே தள்ளபடுவதால்
வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. அவன் நிச்சயம் பிசாசின் தூதன்தான் என்றும், அவன் தன்வசம் பாதாளத்தில் இருந்த ஜனங்களை வாதிக்க வாய்ப்பிருக்கிறது என்று அனுமானிக்க வாய்ப்புண்டு.
மேலும் தேவனுக்கு எதிரான மிருகங்கள் அந்த பாதாளத்தில் இருந்து தான் ஏறிவருகிறது.
வெளி 17:8 நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது
அந்த மிருகங்களால் அந்த பாதாளத்தில் தங்கியிருப்போருக்கு வேதனைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே "பாதாளத்தில் பிசாசின் தூதர்களால் வேதனை உண்டு" என்று சொல்லப்படும் வெளிப்பாடுகளை என்னால் முற்றிலும் நிராகரிக்க முடியவில்லை.
சுருக்கமாக சொன்னால் "இயேசுவை ஏற்க்காமல் இரட்சிப்பை பெறாமல் மரித்து பாதாளம் செல்வோருக்கு நிச்சயம் வேதனை உண்டு" ஆனால் அந்த வேதனை அவரவர் கிரியைக்கு ஏற்ப தானாக நிறைவேறுமா அல்லது பிசாசினால் கொடுக்கப்படுமா என்பதற்குதான் போதிய விளக்கம் இல்லை.
-- Edited by SUNDAR on Tuesday 11th of September 2012 10:02:21 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நரகத்தில் சாத்தான் மனிதனை கொடுமை படுத்துகிறான் என்கிற அனுமானம் கற்பனையின் அடிப்படையிலானது.. அது கீழ்படியாமையால் அந்தகாரத்தில் வைக்கப்பட்டுள்ள தூதர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. அங்கு பிசாசு ரம்மியமாக உலாவுவதாகவும்,மனிதர்களை அவன் விதவிதமாக கொடுமை படுத்துவதும் வேதம் சொல்லாதது.. பிசாசுகளை தகிக்கவே நரக அக்கினி.. சாத்தானுக்கு துணைபோனால் அவனது தூதர்களுக்கும்,அவனுக்கும் ஏற்படுத்தியதை (நித்திய அக்கினியை ) நமக்கும் ஏற்படுத்த தேவன் நீதி உள்ளாவராய் இருக்கிறார் என்பதை அவரது பட்சபாதமற்ற தன்மை நமக்கு போதிக்கிறது...
யூதா1 :6. தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
ஆகவே பிசாசுகள், நரக அக்கினியில் பிடியுண்டவர்களை கொடுமைப்படுத்தாது என்பதை நாம் அறிய வேண்டியது. அவர்கள்(பிசாசுகளுக்கும் இது பொருந்தும்) சாகாத புழுக்களுக்கும், தகிக்கும் அக்கினிக்கும் ஒப்புகொடுக்கபடுகிரார்கள்..
மாற்கு 9:46 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
மத்தேயு 8 :29. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.
லூக்கா 8 :30.31 இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
இந்த இடத்தில் லேகியோன் எனப்படுகிற அனேக பிசாசுகள் எதற்க்காக இயேசுவிடம் வேண்டிக்கொள்கின்றன என நாம் சிந்தித்து பார்க்கவேண்டும்..அவைகள் பாதாளம் போக பிரியப்படவில்லை.
பிசாசுகளும் யேசுவிடம் வேண்டிக்கொள்ளும்படியாக கொடுமை நிறைந்த இடமாய் தான் பாதாளம் இருக்கிறது!! ஆகவே பிசாசுகள் அவைகள் விருப்பத்துடன் களிக்கும் இடமல்ல பாதாளம்.
மேலும்,
Bro wrote//வெளி 17:8 நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது
அந்த மிருகங்களால் அந்த பாதாளத்தில் தங்கியிருப்போருக்கு வேதனைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே "பாதாளத்தில் பிசாசின் தூதர்களால் வேதனை உண்டு" என்று சொல்லப்படும் வெளிப்பாடுகளை என்னால் முற்றிலும் நிராகரிக்க முடியவில்லை.//
மிருகமாகிய சாத்தான் மற்றும் அவன் தூதர்கள் பாதாளத்தில் எவ்வாறு தள்ளபடுகிறார்கள் அல்லது வைக்கபடுகிரார்கள் என்கிற நிகழ்வை ஆராய்ந்தால், அவனாலும் அவன் தூதராலும் பாதளத்தில் உள்ளவர்கள் தண்டிக்கப்படகூடுமா என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கும்.
வெளி20 :2. பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
ஆயிரம் வருட கால அரசாட்சியின் போதும் பிசாசானவன் கட்டிவைக்கப்பட்டு அல்லவா பாதாளத்தில் தள்ளியடைக்கபடுகிறான்!! கட்டிவைக்கப்பட்ட நிலையில் அவனால் யாருக்கு கொடுமை நிகழ்த்த,வேதனை ஏற்படுத்த இயலும்? அவனே அங்கு வேதனை தான் அனுபவிக்கபோகிறான்!!
எனவே தான் பிசாசானவன் பாவத்தில் வீழ்ந்த மக்களை பாதாளத்தில் வேதனை படுத்துகிறதில்லை என என்னால் கூறமுடிகிறது. பாதாளத்தில்,அக்கினிகடலில் அவரவர் பாவதிற்கேற்றபடி தண்டனை என்றும்,கொஞ்சம் பாவம் என்றும்,கொஞ்சம் பாவி என்றும் வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. பாவம் செய்யும் அனைவருக்கும்,பாதாளம்,அக்கினிகடல் கடல் பொதுவானது.. கருட புரானதிர்கொத்த கதை அல்ல இது!!
ஒரு கற்பனையை மீறினவன் அனைத்தையும் மீறுகிறான் என வேதம் சொல்லுகிறதல்லவா? பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறவன் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு புறம்பாய் இருந்து வேதனை அனுபவிக்கிறான்..
பாவியானவன் இப்படியாகத்தான் தமக்கு ஏற்படும்படி குறிக்கப்பட்ட பெரும் நன்மையையும் இழக்கிறான்..
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!
-- Edited by JOHN12 on Wednesday 12th of September 2012 07:24:32 PM
பாவம் செய்யும் அனைவருக்கும்,பாதாளம்,அக்கினிகடல் கடல் பொதுவானது.. கருட புரானதிர்கொத்த கதை அல்ல இது!!
சகோதரர் அவர்களே நிங்களுடைய இந்த கருத்தில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு:
கருட புராணம் மட்டுமல்ல நமது விவிலியம்கூட "அவனவன் கிரியைக்கு தகுந்த பலன் மற்றும் நியாய தீர்ப்பு உண்டு" என்பது குறித்து மீண்டும் மீண்டும் உறுதியாக சொல்லும் வசனங்களையும் இங்கு சொல்கிறேன்:
வெளி 22:12இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 20:12 அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளி 20:13சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின் படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
இறைவனே அவனவன் கிரியைக்கு தக்க நியாயதீப்பைதான் கொடுப்பேன் என்று சொல்லியிருக்க, தாங்கள் ஏன் எல்லோருக்கும் ஒரே மாதிரி தண்டனை என்று உறுதியாக சொல்கிறீர்கள்?
//சகோதரர் அவர்களே நிங்களுடைய இந்த கருத்தில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு:
கருட புராணம் மட்டுமல்ல நமது விவிலியம்கூட "அவனவன் கிரியைக்கு தகுந்த பலன் மற்றும் நியாய தீர்ப்பு உண்டு" என்பது குறித்து மீண்டும் மீண்டும் உறுதியாக சொல்லும் வசனங்களையும் இங்கு சொல்கிறேன்:
வெளி 22:12இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 20:12 அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளி 20:13சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின் படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
இறைவனே அவனவன் கிரியைக்கு தக்க நியாயதீப்பைதான் கொடுப்பேன் என்று சொல்லியிருக்க, தாங்கள் ஏன் எல்லோருக்கும் ஒரே மாதிரி தண்டனை என்று உறுதியாக சொல்கிறீர்கள்.///
அனைவருக்கும் ஒரே தண்டனை என நான் கூறவில்லை. பாவிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை நரகம்,அக்கினி கடல் என்பவைகள். இவைகள் பாவிகளுக்கு பொதுவானவைகள் காரணம் பின்வரும் வசனம்..
தானியேல் 12:2. பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
வேதத்தில் நீங்கள் முன்வைப்பது போல சொல்லப்பட்டுள்ள வசனங்கள் காட்டும் கிரியைக்குத்தக்கதான நியாயத்தீர்ப்பு, மேற்கூறிய இரண்டு வகைகளிலேயே நிகழும்.
அப்படியானால் நியாயத்தீர்ப்பின் போது, ஒருபாவம் செய்தவனுக்கும்,பல பாவம் செய்தவனுக்கும் தண்டனை ஒன்றே தான். அது நித்திய நிந்தை.
ஆனால்,நியாயத்தீர்ப்பின் போது பாவமில்லாமல் காணப்படும் இருவரில் ஒரு நன்மை செய்தவனுக்கும்,பல நன்மை செய்தவனுக்கும் ஒரே மாதிரியான தீர்ப்பு கிடைக்காது..
அப்போஸ்தலர்களுக்கும்,ரத்த சாட்சிகளுக்கும்,மூப்பர்களுக்கும்,பவுல் சொல்லும் வைக்கோல்,விலையுயர்ந்த கல் போன்று வெவ்வேறாக ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கும் தேவனால் உண்டாகும் வித்தியாசப்படும் பலன்களும் , ஜெயங்கொள்ளுகிரவர்களுக்கு கொடுக்கப்படும் வெவேறான ஆசிர்வாதங்களும் இதற்க்கு சான்று.
ஆனால் வேதத்தில், துன்மார்கரின் மரணம் தேவ கோபத்தின்படி வெவேறான வழிகளில் ஏற்படுகிறது (சிலரை அக்கினி பட்சிக்கிறது,சிலரை பூமி விழுங்குகிறது,சிலரை மலை காகங்கள் கொத்துகிறது, சிலரின் ரத்தத்தை நாய்கள் நக்குகிறது, சிலரை பட்டயமும்,குருர தூதனும் துரத்துகிறார்கள்,சிலர் நிதிமான் காலின் கீழ் சாம்பலாகிரார்கள், சிலரை கர்த்தரின் பட்டயமே மடிவிக்கிறது). ஆனாலும் இவர்கள் எல்லோருக்கும் நித்திய நிந்தையே நியமிக்கப்பட்டுள்ளது.. பரலோகத்தில் வெவேறு ஸ்தலங்கள், நிலைகள் உள்ளது போல் (இயேசுவானவர் கூறினது போல்) நரகத்தில்,அக்கினி கடலில் வேதம் காட்டுவதில்லை. ஏனென்றால் கைவிடப்பட்ட இந்த துன்மார்க்கர் அனிவருக்கும் கர்த்தரால் உண்டாகும் இளைப்பாறுதல் முற்றிலும் விலக்கப்பட்டு, நித்திய நிந்தை நியமிக்கபட்டுள்ளதே காரணம்.சுய மனசாட்சியினால் நியாந்தீர்க்கபடாலும், நியாயபிரமாணத்தின் படி நியாயதீக்கபட்டலும், இரக்கத்தை முன்னிட்டு நியாயம் ஏற்பட்டாலும் காரியம் மேற்சொன்னவாறே நிகழும்!!!
இதற்கு, நம்முடைய தற்போதைய கல்விமுறையை உதாரணமாக கூறலாம். 35 கீழ் எவ்வளவு மார்க் வாங்கினாலும்(சைபர் வாங்கினால் கூட!!) fail தான். ரேங்க் கிடையாது. 35 மார்க்குக்கு மேல் வாங்குபவர்களுக்கு (ஜெயங்கோள்ளுகிறவர்களுக்கு) தான் ரேங்க்.. ஒருகற்பனைக்கு கீழ்படியாதவனுக்கும்,தேவ கற்பனை ஒன்றுக்கும் கீழ்படியாதவனுக்கும் வேதம் கூறும்படி வேறுபாடு ஒன்றும் இல்லை.. மற்று கருத்து இருந்தால் சகோதரர் பகிரவும்.
கர்த்தருக்கே மகிமை!!
-- Edited by JOHN12 on Tuesday 16th of October 2012 02:25:09 PM
இதற்கு, நம்முடைய தற்போதைய கல்விமுறையை உதாரணமாக கூறலாம். 35 கீழ் எவ்வளவு மார்க் வாங்கினாலும்(சைபர் வாங்கினால் கூட!!) fail தான். ரேங்க் கிடையாது. 35 மார்க்குக்கு மேல் வாங்குபவர்களுக்கு (ஜெயங்கோள்ளுகிறவர்களுக்கு) தான் ரேங்க்.. ஒருகற்பனைக்கு கீழ்படியாதவனுக்கும்,தேவ கற்பனை ஒன்றுக்கும் கீழ்படியாதவனுக்கும் வேதம் கூறும்படி வேறுபாடு ஒன்றும் இல்லை.. மற்று கருத்து இருந்தால் சகோதரர் பகிரவும்.
கர்த்தருக்கே மகிமை!!
-- Edited by JOHN12 on Tuesday 16th of October 2012 02:25:09 PM
சரிதான் சகோதரே, தங்கள் கருத்துபடியே 35% க்கு கீழ் மார்க் எடுத்து பெயிலானவர்களுக்கு கூட மீண்டும் தேர்வு எழுதி பாஸ் பண்ண எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுக்கபடுமே. ஆனால் இங்கு சுமார் 60 ஆண்டு பாவ வாழ்க்கைக்கு வேறு எந்த வாய்ப்புமே இல்லாத ஒரே தண்டனையாகிய "நித்தியமான நிந்தை" என்ற தீர்ப்பு ஜீரணிக்க முடியவில்லையே.
.
இறைவன் என்ன அவ்வளவு இரக்கமில்லாதவரா அல்லது நீதியில்லாதவரா?
//சரிதான் சகோதரே, தங்கள் கருத்துபடியே 35% க்கு கீழ் மார்க் எடுத்து பெயிலானவர்களுக்கு கூட மீண்டும் தேர்வு எழுதி பாஸ் பண்ண எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுக்கபடுமே. ஆனால் இங்கு சுமார் 60 ஆண்டு பாவ வாழ்க்கைக்கு வேறு எந்த வாய்ப்புமே இல்லாத ஒரே தண்டனையாகிய "நித்தியமான நிந்தை" என்ற தீர்ப்பு ஜீரணிக்க முடியவில்லையே.//
சகோ.நேசன் அவர்களே,
சகோதரரே தங்களின் சொற்கள், தாங்கள் நரகத்தை குறித்து கொண்ட பாரத்தை வெளிப்படுத்துகிறது!!
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தேர்வு எழுத அரசும் அனுமதிக்கிறதில்லையே!!.. (அப்படியே முதிர் வயதில், பெயரளவில் படித்து முடிதாலும் வேலைவாய்ப்பில் கருதபடுகிரதில்லை என்பது தனி கதை..). சகோதரர், அந்த குறிப்பிட்ட வயதினை தாங்கள் மனிதனின் மரண நாளுக்கு ஒப்புமை கொள்ளலாம்..
மரண நாளுக்கு பிறகுபூமியில் மனித ஆத்துமாவிற்கு கிரியைஇல்லை என வேதம் சொல்லுவதும் கருத்தில் கொள்ளத்தக்கது..
Bro .நேசன் //இறைவன் என்ன அவ்வளவு இரக்கமில்லாதவரா அல்லது நீதியில்லாதவரா? //
தங்களின் ஆதங்கம் ஏற்புடையதேயாயினும், இறைவனை நீதியில்லாதவர் என நாம் நம்முடைய நீதியின்படியும்,நம்முடைய அறிவின் படியாய் தோன்றும் காரியங்களையும் கொண்டு கூறுவது சரியானதாய் இருக்காது.. நம்முடைய நீதி அழுக்கான கந்தை என வேதம் கூறுகிறது..மேலும் நியாந்தீர்கிரவரின் நீதி இன்னது என அறியாமல் பேசுகிறது சரியாய் இராது..
ஏசாயா 64:6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.
தேவ நீதியை முன்னிட்டு நியாயந்தீர்க்கபடடுகிறவர்கலாகிய மனிதர்கள்,. கர்த்தரின் காரியங்களையும்,அவரது நீதியை கொண்டே அறிவது தான் சரியானதாக இருக்க இயலும்..
சுவிசேஷத்தை அறிந்த/அறியாத மனிதர்கள் தத்தம் வாழ்நாளிலேயே ஒவ்வொருவரும் திருந்தும்படி தேவகிருபை கொடுக்கபடுகிறது, அனைவருக்கும் சுவிஷஷம் பெற்ற அனைவருக்கும் கிருபையும்/பாவத்தின் தண்டனையும் தெரிந்திருக்கும். சுவிசேஷத்தை பற்றி கேள்விப்படாதவர்கள் மரிக்கும்போது அவர்கள் மனசாட்சியின்படி தீர்ப்பு செய்யப்படுவதாக வேதம் சொல்லுகிறது..
ஆகவே மண்ணில் நாம் வாழும்போது அளவற்ற கிருபையினை பன்றி' முத்துக்களை மிதிப்பது போல ,காலில் மிதித்துபோடாமல்,கிறிஸ்த்துவை மீண்டும் சிலுவையில் அறியாமல், நம்முடைய அவயங்களை தேவனுக்கேற்கும் நீதியின் அவயங்களை ஏற்படுத்துவோமானால் பிழைப்போம்..
இயேசு கூறின செல்வந்தன் கதையில் வருவதை போலவே நிகழும்.. செல்வந்தன் மரித்தலாசருவை உயிர்தெழ செய்து,தம் தகப்பன் வீட்டுக்கு எச்சரிப்பு செய்ய அனுப்ப கேட்டபோது நிருபங்களும்,தீர்க்கதரிசிகளும் உச்சரிப்பிற்கு போதும் என அபிரகாம் கூறுவதன் காரியமும் அதுவே.
லூக்கா(16 -27-29) அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
ஆகவே தீர்க்கதரிசிகளாலும்,வேத நிருபங்களாலும் எச்சரிக்கபடுகிற நாம் நரகத்திற்கு கைவிடப்பட்டவர்களாக ஏன் தீவிரிக்கவேண்டும்!?
நன்மையை என்னும் பரலோகத்தை முன் நிறுத்தி ஓடுவோம். அப்படி ஓடுகிற ஆதாயம் நிறைந்த ஓட்டமே தேவனுக்கு சித்தம்.