\\இத்தகைய ஆத்திர உணர்வும் ஆசீர்வாத உணர்வும் ஆவிகளின் நல்லது தீயது போன்ற குணாதிசயங்களை உருவாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் இறந்து போய் ஒரு வருடத்திற்குப் பிறகு சில குறிப்பிட்ட வரையரையளுக்கு உட்பட்டு ஒரளவு சுதந்திரத்துடன் ஆவிகள் பூமிக்கு வந்து செல்ல மேலுலகத் தேவதைகள் அனுமதி அளிக்கின்றன. தங்களது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கம் நரகம் என்ற வாழ்ககைத் தரத்தை ஆவிகள் மேலுலகில் பெற்றிருந்தாலும் அடுத்து ஓர் பிறப்பை அவைகள் பெறும்வரை பூமிக்கு வந்து செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.//
மறு ஜென்மம் அல்லது மறு பிறப்பு உண்டா?
சகோதரர்களே மறு ஜென்மம் அல்லது மறு பிறப்பு உண்டா? நம் வேதம் இவை இல்லை என்று சொல்லுகிறது என்று நினைக்கிறேன் . இவை அனைவருக்குமே பொருந்தும் ( கிறிஸ்தவர், இஸ்லாம் மற்றும் இந்து ) ஏனென்றால் அவர்களையும் படைத்தது நம் தேவாதி தேவன் தானே . சகோதரர் அன்னா அவர்கள் எழுதியது என்னால் ஏற்க முடியவில்லை. உண்டு அல்லது இல்லை என்பதை தள சகோதரர்கள் வசன ஆதாரத்துடன் தேவனிடம் விசாரித்து சொல்லவும் நன்றி
மறு ஜென்மம் உண்டு... பாவத்தில் வாழும் ஆத்துமா, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தால் பரிபூரணமாய் கழுவப்பட்டு தேவனால் ஆவின் படி பிறந்த புது பிறப்பாகிறது..
யோவான் 1:13 அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலேபிறந்தவர்கள்.
யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 3:7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.
மத்தேயு 17:11 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
மத்தேயு 17:12 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
இயேசுவானவர் உயிர்த்தபின், இறந்த பரிசுத்தவான்களும் புது சரீரத்தோடு நகரத்தில் காணப்பட்டது உயர்தேளுதளால்...
திரும்பவும் பூமியில் காணப்பட்ட காரணத்தினால் இவர்களையும் மறு ஜென்மம் எனலாம்..
மத்தேயு 27:53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக்காணப்பட்டார்கள்.
ஆகவே மறுஜென்மம் என்பது பாவம் கழுவபடுதளையும், ஆவிக்குள் பிறத்தலையும், உயர்தேளுதளையும் குறிப்பதாக உள்ளது..
ஞானஸ்தானமும் இதன் ஆவிக்குரிய அடையாளமே அடையாளமே!!
மரித்து உலர்ந்த எலும்புகளை மாரியிருந்தவர்களையும் திரும்ப பிரவேசிக்க செய்தாரே அதும் மறுபிறப்பு தான்-எசேக்கியேல்
37 அதிகாரம் (1-10 )
இயேசுவும், சில சீடர்களும்,தீர்க்கதரிசிகளும் மரித்தவர்களை உயர்பித்தார்களே அதுவும் மரிதவர்களுக்கு மறு பிறப்பு தான்.
மற்றபடிஈ யாகவோ,நாயாகவோ மறுஜென்மம் எடுக்கும் concepts எல்லாம் நம் வேதத்தில் இல்லை.. ஆகவே தங்கள் நண்பருக்கு வேதம் காடும் மறுபிறப்பை இவ்வாறாக தெரியபடுத்துங்கள்...
எந்த ஒரு காரியமானாலும் அதன் அடிப்படை அல்லது தொடக்கம் முழுமையாக தெரியாமல் அதன் தற்போதைய நிலையை சரியாக தீர்மானிப்பது கடினமான ஓன்று. உதாரணமாக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து எப்பொழுது புறப்பட்டது என்பது தெரியாமல் அது எப்பொழுது திருச்சி வந்து சேரும் என்பதை சரியாக தீர்மானிக்க முடியாது.
அதேபோல் இந்த உலகத்தை பற்றிய அனேக அடிப்படை காரியங்களுக்கு இன்றுவரை சரியான பதில் தெரியவில்லை.
1. ஆதாம் ஏவாள் இருந்த இடத்தில் சாத்தான் என்னும் சர்ப்பமும் இருக்க காரணம் என்ன?
3. நன்மை தீமை அறியாத ஆதாம் ஏவாளை தந்திரக்காரனாகிய சாத்தான் சோதிக்க காரணம் என்ன?
4. பாவம் செய்த ஆதாம் ஏவாளை தேவன் உடனடியாக அழிக்காத காரணம் என்ன? அப்படி உடனே அழித்திருந்தால் கூட்டமான மக்கள் நித்தியமான நரகம் செல்வதை தவிர்த்திருக்கலாமே
5. வேதம் குறிப்பிடும் ராட்ச்சர்கள் யார்? வானத்திலும் பூமியிலும் இருக்கும் தேவர்கள யார்?
6. பிறவியிலேயே கூன், குருடு, செவிடு, ஊமைகளை தேவன் இன்றும் படைக்க காரணம் என்ன?
7. ஒருவனை பிறக்கும்போதே செல்வந்தனாகவும் ஒருவனை ஏழையாகவும் தேவன் படைக்க காரணம் என்ன?
8. மன வளர்ச்சி இல்லாதவர்களை தேவன் படைக்க காரணம் என்ன? இவர்கள் குறித்த நித்தியவாழ்வின் தீர்ப்பு என்ன?
9. சிறு குழந்தைகளின் அகால மரணங்களை தேவன் அனுமதிப்பது ஏன்? அவர்கள் செல்லும் இடம் ஏது?
10. சர்வ வல்ல தேவன் மனுஷனாக வந்து, பாவிகளாகிய மானிடர்கள் கையில் கொடூர சித்திரவதைகள் அனுபவித்து மரிக்க காரணம் என்ன?
.
இதுபோன்ற சரியான பதில் இல்லாத கேள்விகள் இருக்கும் வரையிலும், வேதம் நேரடியாக "மறு ஜென்மம் என்று ஒன்றும் இல்லை" என்று சொல்லாத ஒரு
காரியத்துக்கு யாரும் சரியான பதில் சொல்லிவிட முடியாது என்பது எனது கருத்து.
.
வேத புத்தகம் என்பது மனுஷர்களின் ரட்சிப்புக்கும் நித்திய வாழ்வுக்கும் நேர்வழியை காட்டும் புத்தகமாகும் எனவே பயனற்ற பல காரியங்கள்பற்றி அதில் எழுதப்படவில்லை என்பதை நாம் அறியவேண்டும்.
.
உதாரணமாக: "யாசேரின் புத்தகம்" குறித்து வேதாகமத்தில் உள்ள இரண்டு வசனங்கள் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.
யோசுவா 10:13அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின்புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா;
II சாமு 1:18(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.)
.
அந்த யாசேரின் புத்தகம் நமது வேதாகமத்தில் இல்லை. காரணம் அதில் நித்திய ஜீவனை அடைவதற்கு வழிகாட்டும் தேவையான வசனங்கள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த புத்தகம் இல்லை! எனவே அப்புத்தகத்தில் தேவனின் செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று சொல்லி விட முடியாது. அந்த புத்தகத்தில் தேவனின் செயல்பாடுகள் இருக்கிறது என்பதை வேதமே நமக்கு கைகாட்டி போதித்துள்ளது.
எனவே "மறுஜன்மம் அல்லது மறுபிறப்பு உண்டா" என்பது குறித்த காரியங்களை குறித்து நாம் இப்படித்தான் என்று அறுதியிட்டு எதுவும் சொல்லிவிட முடியாது!
மனுஷ ஆன்மா நித்தியமானது என்றும் மரித்தவர்கள் மீண்டும் எழுவார்கள் என்றும் மறுஜன்மம் என்று ஓன்று உண்டு என்பதை வேதமும் ஒத்துகொள்கிறது.
மத் 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
அப் 24:15நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.
ஆனால் அது இந்த் பூமியில் அது நடக்குமா அல்லது வேறு எங்கும் நடக்குமா என்பது குறித்த போதுமான விளக்கம் இல்லை. அதுபோல் இதற்க்கு முந்தைய காலத்தில் மறுஜன்மம் இருந்ததா இல்லையா என்பது குறித்து நம்மால் அறுதியிட்டு எதுவும் சொல்ல முடியாது.
-- Edited by SUNDAR on Thursday 23rd of August 2012 02:46:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Bro///அந்த யாசேரின் புத்தகம் நமது வேதாகமத்தில் இல்லை. காரணம் அதில் நித்திய ஜீவனை அடைவதற்கு வழிகாட்டும் தேவையான வசனங்கள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த புத்தகம் இல்லை! எனவே அப்புத்தகத்தில் தேவனின் செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று சொல்லி விட முடியாது. அந்த புத்தகத்தில் தேவனின் செயல்பாடுகள் இருக்கிறது என்பதை வேதமே நமக்கு கைகாட்டி போதித்துள்ளது.///
போன்ற சில தளங்களில் தகவலிறக்கம் செய்து யாசேரின் புத்தகத்தின் எஞ்சிய மொழிபெயர்ப்புகளை அறிய முடிகிறது... ஏனோக்கின் புத்தகத்தை போலவே அறியபடாத புதிய தகவல்கள் காணபடுகின்றன!!
போன்ற சில தளங்களில் தகவலிறக்கம் செய்து யாசேரின் புத்தகத்தின் எஞ்சிய மொழிபெயர்ப்புகளை அறிய முடிகிறது... ஏனோக்கின் புத்தகத்தை போலவே அறியபடாத புதிய தகவல்கள் காணபடுகின்றன!!
நன்றி சகோதரரே!
நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த புத்தகத்தை படிப்பதற்கு லிங்க் கொடுத்துள்ளீர்கள்.
மிகுந்த பயனுள்ள பதிவு.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கிறிஸ்தவர்களுக்கு மறுஜென்மம் அல்லது மறுபிறவி என்பது உண்டா?
கேள்வி : மத்தேயு 19:28ன்படி கிறிஸ்தவர்களுக்கு மறுஜென்மம் அல்லது மறுபிறவி என்பது உண்டா?
இதற்கான பதிலைத் தருமுன் ‘மறுஜென்மம்’ என்ற வார்த்தையானது முழு வேதாகமத்திலும் இரு இடங்களில் காணப்படுகின்றது.
ஒன்று, அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 19:28)
இரண்டு, (தீத் 3:5) நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின் படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
இவ்விரண்டு வசனங்களிலிருந்து நாம் ஒரு கோட்பாட்டையோ, அல்லது தத்துவத்தையோ அமைக்க முடியாது. (இந்து பெளத்த மதங்களில் ஏழுபிறவி உண்டென நம்புவது வேதத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாது). எனினும் முழு சத்திய வேதாகமம் போதிக்கின்ற சத்தியத்தின்படி சில காரியங்களை கூறலாம் என விரும்புகிறேன்.
எமது மரணத்துக்கு பின்பாக இன்னுமொரு பிறப்போ, அல்லது அவதாரமோ இல்லை. அதாவது நாம் மரித்த பின்னர் மறுபடியும் எம்மால் பிறக்கமுடியாது. ஆனால் நமது மரணத்துக்கு பின்பாக எமது சரீரம் இல்லாமல் போகிறது. அதாவது எமது உடல் மண்ணோடு மண்ணாகத்தான் போகின்றது. அதில் எவ்வித சந்தேகம் இல்லை. ஆகவே இப்பொழுது இருக்கின்ற கண், காது, வாய், எலும்பு போன்ற மனித உடல் அவயவங்கள் மண்ணோடு மண்ணாகிபோனாலும் நான் இப்பொழுது எப்படியிருக்கிறேனோ அவ்வாறே நான் மரித்தபின்னர் எனது ஆவி ஆத்துமாவும் இருக்கும். ஆவி ஆத்மா அழிந்துபோகாத தன்மையுடையது.
ஒரு முட்டைக்குள் எப்படி உயிர் இருக்கின்றதோ அவ்வாறே எமது உடலுக்குள் நாம் இருக்கின்றோம். ஒரு குஞ்சு முட்டையை விட்டு வெளியே வருவதுபோல நாம் மரணத்திற்கு அப்பால் வெளிவரப்போகின்றோம். ஆகவே மரணத்தின் பின் எமக்கு ஒரு வாழ்வு உண்டு. அதனை மறுஜென்மம் என்றோ மறுபிறவி என்றோ அழைக்க முடியாது. காரணம் நான் அப்பொழுதும் நானாகவே இருப்பேன். ஒன்று பரலோகத்தில். அல்லது நரகத்தில்.
மறுபிறவி என்பதன் அர்த்தம் மீண்டும் பிறத்தல் என்பதாகும். மனிதனுக்கு இவ்வுலகில் ஒரு தடவையே வாழ சந்தர்ப்பம் இறைவனால் கிடைக்கிறது. ஆக மறுபிறவி என்ற சித்தாந்ததிற்கு இடமில்லை.
மறுஜென்மம் மறுஜென்மம் என்ற வேதாகம வார்த்தை பிரயோகத்தின் அர்த்தமானது மறுபிறவி அல்ல. அது தேவனுக்குள்ளாக மீண்டும் பிறத்தல் என்ற அர்த்தத்தையே கொடுக்கின்றது. அந்த வகையில், மேலே கொடுக்கப்பட்டுள்ள வேத வசனத்தை மீண்டும் வாசித்து பார்க்கவும். அதாவது ஆண்டவர் ஆதியில் மனிதருக்கு (ஆதாம், ஏவாளுக்கு) கொடுத்திருந்த சுபாவத்தை மறுபடியும் கொடுப்பதாகும். எமது சுபாவம் பாவத்தினால் கறைப்பட்டு விட்டது. அதனை நாம் ஜென்ம சுபாவம் என்கிறோம்.
அதாவது பாவத்தினால் கறைப்பட்ட எமது சுபாவமே ஜென்ம சுபாவம் ஆகும். இந்த ஜென்ம சுபாவம் இருப்பதினாலேயே நாம் பாவம் செய்கிறவர்களாக இன்றும் இருக்கிறோம். கிறிஸ்துவானவர் எமக்குள்ளாக வரும்போது எமது ஜென்மசுபாவம் நீங்கி அவருக்குள்ளாக நாம் புது சிருஷ்டிகளாகின்றோம். நமது ஆவி, ஆத்துமா யாவும் தேவனுக்கு முன்பாக புதுசிருஷ்டிகளாகின்றன.
மறுஜென்ம முழுக்கு ஆகவே மறுஜென்ம முழுக்கு என்பது ஞானஸ்நானத்தையும் எமது மனந்திரும்பின வாழ்வையும் குறிக்கின்றது. மறுஜென்மகாலம் என்பது நாம் கர்த்தரோடு வாழ்கின்ற எமது நித்திய நித்தியமான வாழ்வையே குறிக்கின்றது. கிறிஸ்துவுக்குள் பிறந்த ஒவ்வொருவனும் மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கைக்கு நேராகவே போய்க் கொண்டிருக்கின்றான்.
அவ்வாறே இயேசுவை கர்த்தராக தங்களுடைய வாழ்க்கையிலே சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு, நல்வழி வாழ்ந்தவர்களுக்கு பரலோகமும், அப்படி வாழாத பொல்லாதவர்களாய் வாழ்ந்தவர்களுக்கு அக்கினி எரியும் நரகமும் கிடைக்கப் போகிறது. இதுவே உண்மையான சத்தியமாயிருக்கிறது. ஆகவே கர்த்தரை உங்கள் வாழ்க்கையிலே ஏற்றுக்கொண்டு, அவருக்குள் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்களானால், எத்துன்பம் கண்ணீர்கள், சோதனை வேளைகளிலும், கர்த்தர் உங்களை காத்து தமது செட்டையின் மறைவில் வைத்து பாதுகாத்தருளுவார்.
கர்த்தருடைய நியாயத்தீர்ப்பில், உங்களுடைய சரீரம் இல்லாவிட்டாலும் நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு முகங்கொடுப்பீர்கள். நாம் மரித்த பின்னரும் வாழ்வோம். அது தேவனுடனா? அல்லது நரகத்திலா என்பதில்தான் எமது நித்திய நித்தியமான வாழ்க்கை தங்கியுள்ளது. கிறிஸ்தவர்களின் விசுவாசமானது நாம் கிறிஸ்துவுடனே கூட நித்திய நித்தியமாக வாழுவோம் என்பதாகும்.
(கேள்விக்கான சுருக்கமான பதில், கிறிஸ்தவனுக்கு மறுபிறவி கிடையாது. மறுஜென்மமாக்கப்பட்ட நித்திய வாழ்வு உண்டு என்பதாகும்.).இணையத்திலிருந்து...
-- Edited by t dinesh on Monday 22nd of October 2012 12:30:24 AM