இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இப்படியும் ஒரு விசுவாசம் - உண்மை சாட்சி!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
இப்படியும் ஒரு விசுவாசம் - உண்மை சாட்சி!
Permalink  
 


கடந்த நாட்களில் ஒரு சகோதரியின் உண்மை வாழ்க்கை நிலையை அறிய நேர்ந்தது. அவர்களின் வாழ்க்கை வரலாறு எனது மனதை மிகவும் பாதிக்கும் நிலையில் இருந்ததால் சுருக்கமாக இங்கு பதிவிடுகிறேன்.
.
கிறிஸ்த்துவை அறியும் முன்: அந்த சகோதரிககு திருமணமாகி முதல் குழந்தை  4 மாத கருவாக இருக்கும்போதே அவர்களது கணவன் மரித்து விட்டாராம். இந்த சகோதரி அந்த குழந்தையை பெற்றெடுத்து அதற்காகவே தன்னுடய வாழ்க்கையை அற்பணித்து வாழ்ந்தார்களாம் ஆனால்  அவர்கள் மகனுக்கு சுமார் 22 வயதாகும்போது அவன் இருதயத்தில் ஓட்டை ஓன்று இருப்பது கண்டுபிடிக்கபட்டதாம். டாக்டர்கள் அதை சரி செய்ய முடியாது என்று சொல்லிவிடவே, அவனின் மரண நாள்வரை அவனை மிகவும் கஷ்டப்பட்டு பார்த்தார்களாம் பின்னர் அவன் மரித்து போனத்தால் அவர்களுக்கு சற்று மூளை குழப்பம் போல் ஏற்ப்பட்டதாம். 

அந்நேரம்  அவர்களை கவனித்து பார்க்க எந்த ஆதரவும் இல்லாத காரணத்தால் சாலைகளில் எங்கு போகிறோம் என்றே தெரியாமல் திரிய ஆரம்பித்தார்களாம். அவ்வாறு ஒருநாள் சின்னமலை சபை பக்கத்தில் சாலையில் பயித்தியமாக நடந்துகொண்டு இருக்கும்போது. அவர்கள் மனதில் "இந்த கட்டிடத்துக்குள் செல்" என்ற உணர்த்துதல் ஏற்ப்பட்டதாம். இவ்வாறு சின்னமலை AG சபைக்குள் சென்ற அவர்கள் ஆண்டவரால் சமாதானம் பெற்று மனநிலை சரியாகி  பின்னர் வீட்டு வேலைகள் பார்த்துகொண்டு  தனியாக வீடு எடுத்து தங்கிக்கொண்டு இருந்தார்களாம்.

கிறிஸ்த்துவை  அறிந்த பின்னர்:
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் சென்னையில் திடீர் என்று  வீட்டு வாடகைகள் இரண்டு மூன்று மடங்காக உயர்ந்தது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அவர்கள் இருந்த வீட்டு ஒணரும்  வாடகையை  பல மடங்காக உயர்த்திவிட, வாங்கும் சொற்ப சம்பளத்தில் வாடகை கொடுக்க முடியாத அவர்கள் மீண்டும் தெருவுக்கு வரும் நிலை ஏற்ப்பட்டதாம். அந்நேரம் ஏதோ ஒரு விடுதியில் (ஹாஸ்டல் ஆயா  வேலை) ஓன்று காலி இருப்பதாகவும் அங்கேயே தங்கிக்கொண்டு வேலையும் பார்க்கலாம் என்று சொல்லி ஒருவர் அழைக்க, அங்கு சென்ற அவர்கள் கொடுமையான ஒரு சிறையில் சென்று மாட்டிகொண்டதுபோல் சுமார் ஒரு வருடம் அதிக பாடுகளுக்குள்ளாக நேர்ந்ததாம். சரியான சாப்பாடு இல்லாமல் அதிக வேலை செய்ததால் மிகவும் மெலிந்து உடல் நலம் அதிகமாக பாதிக்கபட்ட நிலையில் வேலை செய்ய முடியாததால் அந்த இடத்தை விட்டு வெளியேறி ஏதோ ஒரு இடத்தில்  தற்காலிகமாக தங்கியிருந்தார்களாம். அந்த நேரத்தில் எல்லோருக்கும் வந்த சிக்கன் குனியா நோய் கடுமையாக தாக்கவே எழுது நடக்க கூட முடியாமலும் கவனிக்க யாரும் இல்லாமலும் துன்பத்தில் உச்ச கட்டத்துக்கே சென்று விட்டார்களாம். 

இவ்வாறு அடுக்கடுக்காக வேதனையை அனுபவித்த அவர்கள் பிறகு  ஓரளவுக்கு சரியாக ரூபாய் 3000௦௦ சம்பளத்துக்கு ஒரு வேலையை தேடிக் கொண்டு  குறைந்த வாடகையில் ஒரு வீட்டையும் கண்டுபிடித்து தங்கியிருக்கும் இவர்கள், ஒவ்வொரு வாரமும் முழு இரவு ஜெபத்துக்கு தவறாமல் வருகிறார்கள். இன்னும் கால் சரியாக நடக்க முடியாத நிலையில் அவர்கள் இருக்கும் இடத்துக்கும் சபைக்கும் சுமார் மூன்று கிலோ மீட்டல் தூரம் இருந்தும் ஆராதனைக்கு வருவதையோ முழு இரவு ஜபத்துக்கு வருவதையோ அவர்கள் தவிர்க்கவில்லை. 

ஆண்டவரின் மீது அதிக பற்று கொண்டுள்ள அவர்கள் "நான் இன்று இருப்பதே இயேசுவின் பெரிதான கிருபைதான்" என்று விசுவாசத்துடன் 
சொல்கிறார்கள்! அவர்கள் வாழ்வின் நடபடிகளை கேட்டபோது எனது மனம் மிகவும் கனத்தது. ஆனால் அவர்கள் விசுவாசத்தை பார்க்கும்போது "ஒரு சிறு துன்பம் வந்தாலும் ஆண்டவர் ஏன் நம்மை இவ்வாறு பாடுகள் படுத்துகிறார்" என்று எண்ணி தவிக்கும் நமது விசுவாசம் எம்மாத்திரம் என்றே எண்ண தோன்றியது.     

 



-- Edited by SUNDAR on Tuesday 14th of August 2012 04:02:14 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard