இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் "ரகசிய வருகை" என்று ஒரு தனி வருகை உண்டா?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
இயேசுவின் "ரகசிய வருகை" என்று ஒரு தனி வருகை உண்டா?
Permalink  
 


கர்த்தராகிய  இயேசு மரித்து உயிர்த்து பரம் ஏறி சென்றபோது:   
 
அப் 1: 10. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:

11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
  
இதற்க்கு ஒப்பாக கர்த்தராகிய இயேசுவும் இவ்வாறு கூறியிருக்கிறார்:   
 
யோவான் 14:28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே.
 
இந்த இரண்டு வசனங்களையும் பார்க்கும்போது:
 
எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார்  
 
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன்
 
இயேசு எப்படி ஒரே ஒரு முறை பரலோகத்துக்கு ஏறி போனாரோ அதே போல் ஒரே ஒரு முறை மறுபடியும் நம்மை மீட்க வருவார் என்று புரியமுடிகிறது.
 
ஆனால் அனேக கிறிஸ்த்தவ சகோதரர்கள் "இரகசிய வருகை" "பகிரங்க வருகை" என்று இரண்டு வருகை உண்டு என்று கூறுகிறார்களே அது உண்மையா? சரியான வசன ஆதாரத்துடன் விளக்கம் தாருங்களேன்.  
 


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: இயேசுவின் "ரகசிய வருகை" என்று ஒரு தனி வருகை உண்டா?
Permalink  
 


இயேசுவின் இரண்டாம் வருகை எனபது  ஒரே ஒரு நேரம்தான் என்று நான் கருதுகிறேன்.
 
எபிரெயர் 9:28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

இதுவே இரண்டாம் வருகை ஆகும்.   அதன் பின்னர் முடிவுதான் என்பது விவிலிய
வசனத்தின் அடிப்படையில் எனது நம்பிக்கை.  
 
இது குறித்து மேலும் விபரம் அறிந்தவர்கள் விளக்கம் தரவும்.
  


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
இயேசுவின் "ரகசிய வருகை" என்று ஒரு தனி வருகை உண்டா?
Permalink  
 


சகோதரரே,

        பொதுவாக இந்த  கேள்வியின் நிமித்தம் பெரும் பிளவுகள் சபைகளின் நடுவே காணப்படுகிறது. 

கிறிஸ்து இயேசு நமக்காய் பிறந்து,மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயர்தேளுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்கிறவரை குழப்பம் இல்லாமல் இருந்துவிட்டால் பொது விசுவாசமாவது காக்கப்படும்..

 மீண்டும் கிறிஸ்து இயேசு ஏன் வர வேண்டும்...

 'கிறிஸ்து' என்றால் 'ரட்சகர்' என்பது நாம் அறிந்ததே.. அவர் நமக்கு நித்திய ஜீவனாய் இருக்கிறபடியால் முற்றுமுடிய ரட்சிக்க வல்லவர்!!

 எபிரெயர் 7:25 மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.

 நம் அனைவரின் பாவத்திற்கும் கழுவாயாய் மரித்தார். ஆகவே அவரில் மரித்த அனைவருக்கும், அவரை விசுவாசிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் நித்திய ஜீவனை அருள அவர் வல்லவராய் இருக்கிறார்.. ஆகவே அவர் நம்மை முற்றும் முடிய ரட்சிக்கவும்,நியாந்தீரக்கவும் வரவேண்டி உள்ளது.


 உயிர்தெழுதல் பற்றி..

இயேசுவின் வருகைக்கும், உயிர்த்தெழுதலின் வெவ்வேறான நிலைகளுக்கும் தொடர்பு நிலைகள் உண்டு.. ஆகவே உயிர்த்ஹெளுதலை நாம் விசுவாசிக்க வேண்டியது அவசியமாகிறது.

வேதம்  உயிர்த்தெழுதலை போதித்திருக்க அதை மறுக்கிறவர்கள், சதுசேயரின் ஆவியை பெற்றிருக்கிற  பொய்யராவர். 

 லூக்கா 20:27 உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து...


பிதாவனவரால் நிகழ்ந்த உயிர்தெழுதல் பற்றி..

முதலாவது நாம் அறியவேண்டியது உயர்தேளுதலானது யாரால் ஏககாலத்தில் நிகழ்த்தபடுகிறது என்பதாம்!!

யோவான் 5:21 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். 

ரோமர் 6:9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.

I தெசலோனிக்கேயர் 4:14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள்நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.

மேற்கூறிய  வசனத்தில் இருந்து பிதாவானவர் முதலாவது மரித்தவர்களை உயிர்த்தெழப் பண்ணுவார் (இயேசு உட்பட) என்பதும், பின்பு பிதாவைப்போல ஏசுவும் மரித்தவர்களை உயிர்பிப்பார் என்பதும் தெளிவாகிறது.. இயேசு உயிர்த்தேளுந்தபோது  அனேக பரிசுத்தவான்களும் உயிர்த்தெழுந்ததாக வேதம் கூறுகிறது..

மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.

இந்த பரிசுத்தவான்கள் தேவ வசனத்தின் நிமித்தம் கொடுத்த சாட்சியின் நிமித்தம் கொல்லப்பட்ட பாக்கியவான்கள். இவர்கள் சரீரத்துடன் எழுந்தபடியினால் பிதாவினால் உண்டான முதலாம் உயிர்தெழுதல் நிகழ்ந்தேரியாயிற்று . இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை.

வெளி 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

 (இவ்வசனத்தை ஒருவர் படித்தால் கிறிஸ்துவை ஆரதனைகுரியவர் என கூற இயலாது..அப்படியானாலும் அவமதிக்கும் மனிதர்கள் உண்டு!!)

வெளி 19:10 இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது ...

 தேவ வசனத்திற்கு சாட்சி கொடுத்த பரிசுத்தவான்கள் தீர்க்கதரிசிகள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்திரர் என்றும் அறிய முடிகிறது..

வெளி 6:9  அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். (ஆர்வமிருந்தால் பலி பீடத்தின் கீழ் அவர்கள் ஏன் காணபடுகிரார்கள் என ஆராய்ந்து பாருங்கள்!!)

முதலாம் உயிர்தெழுதல் நடக்கவில்லை என்போமாயின் உயிர்தெழுதல் இல்லாமல் மரித்த ஆத்துமாக்கள் பலிபீடத்தின் கீழ் காணபட்டர்கள் என குழம்பவேண்டிவரும். இந்த ஆத்துமாக்கள் தற்போது பலிபீடத்தின் கீழ் காணபடுகிரார்கள். ஆயிரம் ஆண்டுகளின் காலத்தின் போது சிங்காசனங்களில் நிச்சயம் அமருவார்கள். ஆனால் இவர்களுடனே கூட மரிக்காமல் மருரூபமாகும் இயேசுவின் சாட்சியை உடையவர்களும் அமருவார்கள். பின்வரும் வசனத்தை நிதானமாய் படித்தால் விளங்கும்.

வெளி 20:4 அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.

இவ்வசனத்தில் நிகழபோகும் நிகழ்வுகள் கால அடிப்படையில் வரிசைபடுத்த பட்டிருந்தாலும், மேற்கூறிய சாராரின் மரணத்தை பற்றி எழுதப்படவில்லை. இச்சாராரை யோவான் ஆவியில் கண்டதாகவும் பின் அவர்கள் உயிர்த்து அரசாண்டதாகவும் கூறுகிறார். உயிர்ப்பதற்கு முன் இச்சாரார் மரிப்பதை  இவ்வசனத்தில் யோவான் கூறவில்லை. ஏன் இவர்கள் மரிப்பதைப் பற்றி யோவான் எழுதவில்லை என ஆராய்ந்தால்.. இவர்கள் நித்திரையடையாதவர்களாம்!!

I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.

வெளி 20:4 வசனத்தின் கால வேளையினை ஆராயும் போது இந்த இயேசுவினால் வருகிற முதலாம் உயிர்த்தெழுதலின் காலம் ஏழாம் எக்காளத்தின், ஏழாம் கலசத்தின் காலம் என்பது தெளிவாகிறது.

வெளி16 :15. இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். என யேசுவானவர் கூறுகிற கால வேளையினை ஆராயும் போது, அது ஏழாம் எக்காளத்திற்கு பின்னான ஆறாம் கோபகலசதின் காலத்திற்கு பிந்தையது என்பதை அறிய முடிகிறது. 

இதிலிருந்து கிறிஸ்துவினால் வருகிற முதலாம் உயிர்த்தெழுதலும் உண்டு என்பது தெளிவாகிறது. அது 666  குறியீட்டின் வெளிப்பாடிற்கு பின்னானது (வெளி 13 :18) அல்லது முதலாம் கோப கலசத்திற்கு முன்னானது. அப்போது தான் குறியீட்டை தரித்து  கொள்ளாமல் சத்தியத்தை ஏந்தி மிருகத்துக்கு தலை வணங்காதவர்கள்   தான் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைய இயலும்(வெளி 20:4 )!! ஆக நமது விளக்கமும் இங்கே சரி என நிதானிக்கபடுகிறது.  இவர்கள் எக்காள சத்தத்தில் தானே உயிர்பிக்கபடுகிரார்கள்.. இயேசு ரகசியமாய் வந்து இவர்களை பரமேற்றுவதாக வசனத்தில் இல்லை. அப்படியானால் ரகசிய வருகை என்பது என்ன??

 

ரகசிய வருகை என்பது..

 

கர்த்தராகிய  இயேசுவானவர் மறித்து, பூமியின் இருதயத்தில் மூன்று நாள் இருந்த பின் உயிர்த்து, வெளியரங்கமாய் அனைவருக்கும் அல்லாமல் தம்முடையவர்கலான சிஷர்களுக்கே தம்மை வெளிப்படுத்தி சாட்சிகளாய் ஏற்படுத்தி பரமேறினார். இது புரஜாதியினர்க்கோ, கொலை செய்தவர்களுக்கோ வெளிபடுத்தபடவில்லை. இதுவே இயேசுவின் ரகசிய வருகை. இது பரத்தில் இருந்து பூமிக்கு வந்த வருகை அல்லாததால் இது இயேசுவின் ரகசிய வருகை. 

இரண்டாம் வருகை

பரத்தில் இருந்து பிதாவிற்கொப்பான மகிமையோடு வெளிப்படும் வருகையே இரண்டாம் வருகை. இது ஆயிரம் வருட அரசாட்சிக்கு பின்னானது மற்றும் நியாயதீப்பின் போதானது. இயேசுவானவரே நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்தில் அமர்ந்து யதார்த்தமாய் நியாயம் தீர்ப்பார்.

யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 5:27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

வெளி20 :11. பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

 

II தீமோத்தேயு 2 :18. அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

பிதாவினால் உண்டான உயர்த்தேளுதலே நிகழ்ந்து முடிந்திருக்கிறது.கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் மகிமையின் ராஜாவாகிய குமாரனால் நிகழப்போகும் முதலாம் உயர்த்தேளுதலும்,இரண்டாம் உயிர்த்தெழுதலும் இனி நிகழப்போகிறவைகள. ஆகவே மாற்றி கூறி வஞ்சிப்பவர்களை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.

 

 

திடமான என்னுடைய கருத்தினை வெளிப்படுத்தி உள்ளேன்..

கட்டுரையின் சாராம்சம் என்னவெனில்..

 

  • பிதாவினால் வருகிற உயிர்த்தெழுதல் நிறைவேரியாயிற்று.
  • குமாரனால் வருகிற முதலாம் உயிர்த்தெழுதலின் காலமும் , ரகசிய வருகையின் காலமும் வேறு. வித்தியாசம் மிகுந்தது.
  • குமாரனின் மூலமாய் நிகழ போகிற முதலாம் உயிர்த்தெழுதல் ஏழாம் எக்கால,ஏழாம் கோப கலசத்தின் வேளையில் நிகழக்கூடியது. இந்நிகழ்வின் போது ஏசுவின் ரகசிய வருகை நிகழாது. உயிர்தேளுபவர்கள் பிரதான தூதனின் கலசத்தின் வேளையில் உயிரடைவார்கள் (மருரூபமாவார்கள்.)
  • ரகசிய வருகை நிறைவேரியாயிற்று.அது இயேசு இயேசு பூமியின் இருதயத்தில் இருந்து உயிர்த்து வெளிப்பட்டு சீடர்களை திடபடுதின காலம் தான் ரகசிய வருகையின் காலம்.
  • இரண்டாம் வருகை என்பது குமாரனின் மகிமையான வருகை. இது அறுநூற்றறுபத்தாறு குறியீட்டிற்கு பின்னானது.நியாயத்தீர்ப்பின் சிங்காசனம் வைக்கப்படும் சமயத்திலானது.
எழுத கிருபை பாராட்டின கர்த்தருக்கு நன்றி..

என் கர்த்தருக்கே எப்போதும் மகிமை உண்டாகுக!!

 ---------------------------------------------------------------------------

ங்கீதம் 2 :11 ,12  பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

அப்போஸ்தலர் 13:41 அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன்,ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.



-- Edited by JOHN12 on Tuesday 4th of September 2012 08:45:12 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: இயேசுவின் "ரகசிய வருகை" என்று ஒரு தனி வருகை உண்டா?
Permalink  
 


BRO:JOHN12 WROTE

  • பிதாவினால் வருகிற உயிர்த்தெழுதல் நிறைவேரியாயிற்று.
மரித்த இயேசு  உயிர்த்தபோது பரிசுத்தவான்கள் பலர் கல்லறையைவிட்டு எழுந்து பலருக்கு காணப்பட்ட சம்பவத்தை குறிப்பிடுகிறீர்கள். ஆம், அதுவும் ஒரு உயிர்த்தெழுதல்தானே. தங்கள் கருத்து ஏற்புடையதுதான்.      

  • குமாரனால் வருகிற முதலாம் உயிர்த்தெழுதலின் காலமும் , ரகசிய வருகையின் காலமும் வேறு. வித்தியாசம் மிகுந்தது.
////கர்த்தராகிய  இயேசுவானவர் மறித்து, பூமியின் இருதயத்தில் மூன்று நாள் இருந்த பின் உயிர்த்து, வெளியரங்கமாய் அனைவருக்கும் அல்லாமல் தம்முடையவர்கலான சிஷர்களுக்கே தம்மை வெளிப்படுத்தி சாட்சிகளாய் ஏற்படுத்தி பரமேறினார். இது புரஜாதியினர்க்கோ, கொலை செய்தவர்களுக்கோ வெளிபடுத்தபடவில்லை. இதுவே இயேசுவின் ரகசிய வருகை. இது பரத்தில் இருந்து பூமிக்கு வந்த வருகை அல்லாததால் இது இயேசுவின் ரகசிய வருகை./// 
மிகவும் வித்தியாசமான ஒரு கருத்து, ஏற்க்ககூடியது ஒன்றுதான்  என்றபோதிலும்  இயேசுவின் இந்த வருகையை குறிக்க  "ரகசிய வருகை" என்று ஒரு வார்த்தை வேதத்தில் எங்கும் இல்லை என்று நினைக்கிறேன். தாங்கள் குறிப்பிடும் அந்த சம்பவத்தை விவிலியம் உயிர்த்தெழுதல் என்றே சொல்கிறது.

மத்தேயு 26:32 ஆகிலும், நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
மாற்கு 16:6 பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், 

என்னுடைய வார்த்தை என்னவெனில் வேதத்திலேயே எங்குமே எழுதப்படாத "ரகசிய வருகை" என்று ஒரு வருகை உண்டா? என்பதுதான்.    
  • குமாரனின் மூலமாய் நிகழ போகிற முதலாம் உயிர்த்தெழுதல் ஏழாம் எக்கால,ஏழாம் கோப கலசத்தின் வேளையில் நிகழக்கூடியது. இந்நிகழ்வின் போது ஏசுவின் ரகசிய வருகை நிகழாது. உயிர்தேளுபவர்கள் பிரதான தூதனின் கலசத்தின் வேளையில் உயிரடைவார்கள் (மருரூபமாவார்கள்.)

உயிரடைதல் மற்றும் மறுரூபம் ஆகுதல் இரண்டுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதுபோல் தெரிகிறது  மறுரூபம் அடைதல் என்பது நமது சரீரம் வேறொரு ரூபமாக  மாறுதல் ஆவதை குறிக்கிறது. 

மாற்கு 9:2 ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்;
 
I கொரிந்தியர் 15:51  நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
 
ஆனால உயிர்த்தெழுதல் என்பது மரித்தவர்கள் மீண்டும் எழும்புவதை அல்லவா குறிக்கும்?   

I கொரிந்தியர் 15:42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
 
அப்போஸ்தலர் 17:32 மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள் 

ஆனால் இரண்டையும் ஒரே கருத்தில் குறிப்பிட்டுள்ளீர்களே. 

  • இரண்டாம் வருகை என்பது குமாரனின் மகிமையான வருகை. இது அறுநூற்றறுபத்தாறு குறியீட்டிற்கு பின்னானது.நியாயத்தீர்ப்பின் சிங்காசனம் வைக்கப்படும் சமயத்திலானது.
நியாயதீப்பின் சிங்காசனம் ஆயிரம் வருட அரசாட்சிக்கு பின்னாக இறுதியில் நடக்க கூடியது. இங்கு எனது கேள்வி, இயேசுவின் இரண்டாம் வருகை ஆயிரம் வருஷ அரசாட்சிக்கும் முன்னால் நிகழ வேண்டியதா? அல்லது இறுதி நியாயதீப்பின்போது நிகழுமா?  கிறித்துவுக்குள் மரித்தவர்கள் ஆயிரம் வருஷ அரசாட்சியில் இடம் பெறுவார்களா?  
சற்று  விளக்குவீர்களா?  


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
இயேசுவின் "ரகசிய வருகை" என்று ஒரு தனி வருகை உண்டா?
Permalink  
 


Bro.Nesan wrote//மிகவும் வித்தியாசமான ஒரு கருத்து, ஏற்க்ககூடியது ஒன்றுதான்  என்றபோதிலும்  இயேசுவின் இந்த வருகையை குறிக்க  "ரகசிய வருகை" என்று ஒரு வார்த்தை வேதத்தில் எங்கும் இல்லை என்று நினைக்கிறேன். தாங்கள் குறிப்பிடும் அந்த சம்பவத்தை விவிலியம் உயிர்த்தெழுதல் என்றே சொல்கிறது.

மத்தேயு 26:32 ஆகிலும், நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
மாற்கு 16:6 பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், 
என்னுடைய வார்த்தை என்னவெனில் வேதத்திலேயே எங்குமே எழுதப்படாத "ரகசிய வருகை" என்று ஒரு வருகை உண்டா? என்பதுதான்.//

'ரகசிய வருகை' என்கிற பதம் வேதத்தில் இல்லை தான். ஆனால் இயேசுவானவர் பூமியின் இதயத்தில் இருந்து உயிர்தெழுந்து பகிரங்கமாய் எல்லோருக்கும் தம்மை வெளிப்படுத்தாமல், தம்முடையவர்களுக்கே தம்மை வெளிப்படுத்தி பரமேறினபடியால் இதனை ரகசியமான வருகை அல்லது ரகசிய வருகை அல்லது பாமில்லாத முதலாம் தரிசனம் என கூற இயலும்.  

யோவான் 3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஒருவன் மறுபடியும் பிறவாதிருந்தால் தேவ ராஜ்யத்தில் நுழையமுடியாது என கூறிய இயேசு மறுபடியும் பிறந்தவராகவே பரமேறினார், பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

இந்த 'ஜலம்' என்ற பதத்திற்கும் இயேசுவானவர் 'மூழ்க வேண்டிய ஸ்நானம்' என  ஞானஸ்தானம் பெற்ற பின் குறிப்பிட்ட காரியத்திற்கும் தொடர்புண்டு. இதை பின்பு பார்க்கலாம். ஒருவன் ஜலத்தினாலும் 
ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவ ராஜ்யத்தில் நுழையமுடியாது என கூறிய இயேசு மறுபடியும் பிறந்தவராகவே பரமேறினார், பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.அல்லேலுயா!!

யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது.. எனும் வசனத்தின்படி யோவான் 3:3 ,5 வசனங்களில் குறிப்பிட்ட மறுபடியும் பிறத்தல் என்கிற காரியம் ஆவியினால் நிகழ்கிற காரியமாம்.

ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

இயேசுவுக்கு நேரிட்ட அந்த உயிர்த்தெழுதலின் அனுபவம் அவரில் விசுவாசமாய் இருக்கும் நமக்கும் உண்டு என்பது திண்ணம். இயேசுவானவர் குழந்தையாய் உயிர்பிக்கபடாமல் ஆதாமை போல இளைஞனாய் உயிர்த்தெழுந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆகவே இயேசுவின் பிறப்பினை தரிசனம் என கூற இயலாது. ஆகவே இரண்டாம் தரம் மீண்டும் குழந்தையாய் பாவமில்லாமல் பிறப்பார் என்கிறவாதமும் குழந்தைத்தனமானது.
 

எபிரெயர் 9:28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

ஆகவே இயேசுவானவர் உயிர்த்தெழுந்த பின் 'மறுபடியும் பிறந்தே' இவ்வுலகத்தில் காணப்பட்டார் என்பது திண்ணம். மறுபடியும் பிறந்து சீடர்களுக்கு பூமியில் தரிசனமானது முதலாந்தரம் நிகழ்ந்த பாவமில்லாத தரிசனம். 
அப்போஸ்தலர் 1:11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

ஆவியினால் உயிர்த்தெழுதலை பெற்ற இயேசு மறுபடியும் அவரது இரண்டாம் வருகையில் தரிசனமாவார்(எப்படி இளைஞனாய் பரமேறினாரோ அப்படியே!!) என எழுதபட்டுள்ளது.

ஆகவே தங்கள் கேள்விக்கான எனது பதில் என்னவெனில் இயேசுவின் ரகசியமான வருகை வேதத்தில் உள்ளது. அது நிறைவேறிவிட்ட காரியமாகும்...
                                                                                                                                                                               (தொடரும் ..)


-- Edited by JOHN12 on Friday 14th of September 2012 06:10:20 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Bro.Nesan wrote//குமாரனின் மூலமாய் நிகழ போகிற முதலாம் உயிர்த்தெழுதல் ஏழாம் எக்காள ,ஏழாம் கோப கலசத்தின் வேளையில் நிகழக்கூடியது. இந்நிகழ்வின் போது ஏசுவின் ரகசிய வருகை நிகழாது. உயிர்தேளுபவர்கள் பிரதான தூதனின் கலசத்தின் வேளையில் உயிரடைவார்கள் (மருரூபமாவார்கள்.)//

உயிரடைதல் மற்றும் மறுரூபம் ஆகுதல் இரண்டுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதுபோல் தெரிகிறது  மறுரூபம் அடைதல் என்பது நமது சரீரம் வேறொரு ரூபமாக  மாறுதல் ஆவதை குறிக்கிறது//.//ஆனால உயிர்த்தெழுதல் என்பது மரித்தவர்கள் மீண்டும் எழும்புவதை அல்லவா குறிக்கும்?  // ஆனால் இரண்டையும் ஒரே கருத்தில் குறிப்பிட்டுள்ளீர்களே. //

அன்பான சகோதரரே,

உயிர்த்தெழுதல், மறுரூபமாகுதல் என்பவைகள் அடுத்தடுத்த நிகழ்வுகள். அவைகளை ஒரே நிலைகளாக நான் குறிப்பிடவில்லை. அழிந்து போகும் சரீரத்தில் இருந்து,மரித்து ,உயிர்த்து அல்லது மரிக்காமல், பின் தேவ சாயலுள்ள அழியாத சரீரத்தை தரித்துகொள்வோம்.

பிலிப்பியர் 3:21 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

 மாற்கு 16:12 அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். என்ற வசனத்தில் இருந்து எசுவானவர் உயிர்த்தபின் மருரூபமாகிரதையும் அறிய முடிகிறது. இந்த இரண்டு வசனங்களில் இருந்து இயேசுவானவர் உயிர்த்தெழுந்து மறுரூபமடைந்ததையும் அவரை போலவே மரித்த நீதிமான்கள் உயிர்தெழுந்து  மறுரூபமடையபோகிறதையும் அறியலாம். 
மேலும், கிறிஸ்த்துவை உலகத்தில் எதிர்பார்த்து காத்திருக்கும் சாரார் அப்படியே மருரூபமடையபோகிறதையும் அவர்கள் ஆயிரம் வருடம் கிறிஸ்துவுடன் அரசாளபோகிறதையும் வெளிப்படுத்தின சுவிஷேஷத்தில் இருந்து அறியலாம் (வெளி 20:4 ). இந்த சாரார் 'நாம்' என பின் வரும் வசனங்களில் குரிக்கபடுகிரவர்கள் தான்!!

I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்

கொரிந்தியர் 15:52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
இவ்வசனங்களில் 'நாமெல்லாரும்','நாமும்' என்கிற பதங்கள் மரிக்காமல் மறுரூபம் அடைகிரவர்களை குறிக்கிறது. மரித்து உயிர்த்து நியாயத்தீர்ப்பின் பொது நீதிமான்களாய் கானப்படுகிரவர்களும் மருரூபமாக்கபடுகிரவர்களே!!

உயிர்த்தெழுதளில்லாமல் மறுரூபம் அடைதல் என்பது யாக்கோபின் ஆவி உயிர்த்த சம்பவத்திற்கு ஒப்பானது(என் தியானத்தின் போது பெற்ற விளக்கம்).அவன் தன் மகனான யோசேப்பு மரணமடைந்தான் என்கிற பொய்யினை அறியாமலும், நிமித்தமும் அவனுக்காக துக்கித்து,தனது  மகனை குறித்த நினைவுகளின் நிமித்தமும் துக்கித்து கொண்டிருந்தான் ..

தன் மகன் எகிப்திலே காணப்பட்டான்  எனவும்,அதின் அடையாளங்கள் தன் கண் முன் நிச்சயமாய் காணப்படுகிறதென்பதை அறிந்த பின் அவன் ஆவி உயிர்த்ததாகவும் வேதம் குறிப்பிடுகிறது..

ஆதியாகமம் 45:27 அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவிஉயிர்த்தது.

இங்கு யாக்கோபின் ஆவி மரித்து உயிர்க்கவில்லை என்பது அறியபடத்தக்கது. அதைப்போலவே தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு காத்திருக்கிற நீதிமான்களும் புது நம்பிக்கை பெற்று கிறிஸ்துவின் வருகையின் அறிவிப்பை கேட்டு ஆவியில் உயிர்த்து மருரூபமாவார்கள். யாக்கோபின் ஆவி உயிர்த்ததற்கு ஆன நேரத்தை பற்றி குறிப்பு இல்லை. ஆனால் கிறிஸ்துவின் ஆறுதலுக்கும்,வருகைக்கும் காத்திருக்கிற பரிச்த்தவாங்களுக்கும்,பாக்கியவான்களுக்கும் ஆவி உயிர்த்து மறு ரூபமாக ஒரு கணம் போதும்!!  

சகோ.நேசன் //நியாயதீப்பின் சிங்காசனம் ஆயிரம் வருட அரசாட்சிக்கு பின்னாக இறுதியில் நடக்க கூடியது. இங்கு எனது கேள்வி, இயேசுவின் இரண்டாம் வருகை ஆயிரம் வருஷ அரசாட்சிக்கும் முன்னால் நிகழ வேண்டியதா? அல்லது இறுதி நியாயதீப்பின்போது நிகழுமா?  கிறித்துவுக்குள் மரித்தவர்கள் ஆயிரம் வருஷ அரசாட்சியில் இடம் பெறுவார்களா?  சற்று  விளக்குவீர்களா? ///

சகோதரரே, 
இது ஒரு குழப்பமான கேள்வியை போல் தோற்றமளித்தாலும் எளிதானதாகவே காணப்படுகிறது.. முதலாம் உயிர்த்தெழுதலில்  உயிர்த்தெழுபவர்கள்  எங்கே அரசாளுவார்கள்என்பதே உங்கள் கேள்விக்கான பதில்..

வெளி 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம்அரசாளுவார்கள்.

மேலும் இயேசுவின் ராஜ்ஜியம் இவ்வுலகத்தின் அதிகாரத்தின் படியான ராஜ்ஜியம் அல்ல. 

யோவான்18 :36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
இவர்கள் பரிசுத்தவான்கள்.இவர்கள் கிறிஸ்துவினால் உண்டாகும் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து பூமியில் அரசாளுவார்கள். இவர்கள் பரலோகத்தில் இருந்து பூமியில் அரசாளுவார்கள் என்கிறபடியினால் தான் பூமியில் இருந்து பிசானவன் 1000 வருடம்  அப்புறபடுத்தபட்டு,பாதாளத்தில் அடைத்துவைக்கபட்டுவிடுவான். இவர்களுடனே ஆளுகிற கிறிஸ்துவானவர் தேவனுடைய  சிங்காசனத்தில் அமர்ந்து இருப்புகொலால் ஆளுகை செய்ய போகிறவர். (கிறிஸ்துவின் இருப்புகோல் அரசாட்சி இறுதிகாலத்தின் போதானது,அவர் கோபம் பற்றி எரியும் இறுதிகாலத்தின்போதானது (சங்: 2)  )

வெளி 12:5 சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது.

வெளி 19:15 புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

எப்படி பிதாவினால் உண்டான  இயேசுவின்  உயிர்த்தெழுக்கு பிதா இப்பூமிக்கு வர அவசியமில்லாதிருந்ததோ,அப்படியே குமாரனும் தம்மால் உண்டாகும் முதலாம் உயிர்தேளுதளுக்கு இப்பூமிக்கு வரவேண்டியதில்லை.  எக்காள சத்தத்தின் போது(பவும் கூருகிறபடியே ) முதலாம் உயிர்த்தெழுதல் தானாய் நிகழும். ஆகவே இயேசுவின் ரகசிய வருகை முதலாம் உயிர்த்தெழுதலின் போது நிகழும் என கூறுவது தவறு. அவர் பரலோகத்தில் இருந்து பூமியை ஆளுகை செய்வார்.


ஆகவே தங்களின் கேள்விக்கான எனது பதில்
  • கிறிஸ்த்துவின் ரகசியவருகை என்பது அவர் மருரூபமடைந்து உலகில் காணப்பட்ட நிகழ்வையே குறிக்கிறது!! 
  • கிறிஸ்துவுக்காக மரித்தவர்கள் நிச்சயம் முதாலம் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள். 
  • மற்றவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் மரித்தவர்கலானாலும் பங்கடையமாடார்கள்.
  • தேவ ராஜ்ஜியம் பூமியில் நிலைப்பட்ட பின்பு தான் சத்ருக்களுக்கு நியாயதீர்ப்பு செய்யப்பட முடியும்.
  • ஆகவே 1000 வருட அரசாட்சிக்கு பின் நியாயதீர்ப்பு நிகழும்.அப்போது கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகை ஏற்படாது.
  • கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகை நியாய தீர்ப்பின் போதானது
  • 1000 வருட அரசாட்சிக்கு பின்பு நிகழும்  நியாயத்தீர்ப்பின் போது அனைவரும் உயிர்தேளுவார்கள். 
  • தீர்ப்பின் அடிப்படையில்  மருரூபமடைதலும்,நித்திய அழிவும் குறிக்கப்படும்.

 

(இவ்ளோ TYPE பண்ண கிருபை தந்த )
கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!aww
----------------------------------------------------------------

எபேசியர் 3:5
 அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;


-- Edited by JOHN12 on Friday 14th of September 2012 08:23:41 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: இயேசுவின் "ரகசிய வருகை" என்று ஒரு தனி வருகை உண்டா?
Permalink  
 


ஜான் கிரிஷ்டோபர், சகரியா  பூணன் போன்ற பாஸ்டர்கள் எழுதிய " வெளிப்படுத்தின 
விசேஷம்" குறித்த விளக்க  ஊரைகளை நான் படித்திருக்கிறேன். அவரவர்கள்  அவரவர்
கருத்துக்கு சில வசன ஆதாரங்களை காட்டி, ஒரு முழு விளக்கத்தை உரைத்திருப்பார்கள்
ஆனால் இரண்டுபேரின் வியாக்கீனத்திலும் பல வேறுபாடுகள்  இருக்கும்.  அதை பற்றி  அவர்களிடம் கேள்விகள் கேட்க நினைத்தாலும் முடியவில்லை. அதில் ஏற்ப்பட்ட ஒரு சந்தேகம்தான் "ரகசிய வருகை" பற்றிய எனது கேள்வி.   எல்லோரிடமும் இருந்து ஒரு விதமான விளக்கம் வந்தால் புரிவதற்கு சுலபமாக இருக்கும்.
 
தற்போது நிங்களும் சில வசனங்களை சுட்டிகாட்டி, சில புதிய மற்றும்  பழைய கருத்துக்களை  கோர்வையாக்கி ஒரு விளக்கத்தை  தெரிவித்திருக்கிறீர்கள்.  எதோ புரிந்ததுபோல்  தெரிந்தாலும் ஒரு குழப்பமாகவே இருக்கிறது.  நிங்களின்  தியான கருத்துக்களுக்கு நன்றி
  


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ நேசன் அவர்களே,


//ஜான் கிரிஷ்டோபர், சகரியா  பூணன் போன்ற பாஸ்டர்கள் எழுதிய " வெளிப்படுத்தின 
விசேஷம்" குறித்த விளக்க  ஊரைகளை நான் படித்திருக்கிறேன். அவரவர்கள்  அவரவர்
கருத்துக்கு சில வசன ஆதாரங்களை காட்டி, ஒரு முழு விளக்கத்தை உரைத்திருப்பார்கள்
ஆனால் இரண்டுபேரின் வியாக்கீனத்திலும் பல வேறுபாடுகள்  இருக்கும். ///
 
நானும் கூட சகோ. சகரியா பூணன்(இவர் பஸ்டர் அல்ல.சக விசுவாசி என்றே தனது நூலில் தெரிவித்துள்ளார்.) மற்றும் சிலரது புத்தகங்களையும்,அனேக கடைசிகால போதகங்களையும்,சில இணையதள கட்டுரைகளையும்,போதகங்களையும் கவனித்துள்ளேன்,இருந்தாலும் நான் வேதத்தில் இருந்து அறிந்து கொண்டவைகளை மாத்திரமே இக்கட்டுரையில் பதிந்துள்ளேன்.. 

////எல்லோரிடமும் இருந்து ஒரு விதமான விளக்கம் வந்தால் புரிவதற்கு சுலபமாக இருக்கும்.
 
தற்போது நிங்களும் சில வசனங்களை சுட்டிகாட்டி, சில புதிய மற்றும்  பழைய கருத்துக்களை  கோர்வையாக்கி ஒரு விளக்கத்தை  தெரிவித்திருக்கிறீர்கள்.  எதோ புரிந்ததுபோல்  தெரிந்தாலும் ஒரு குழப்பமாகவே இருக்கிறது.  நிங்களின்  தியான கருத்துக்களுக்கு நன்றி////

தாங்கள் கூறுகிறபடி கடைசி கால போதகத்தில்,புரிந்துகொள்ளுதலில் ஒரு கருத்தை பொதுவாக எட்டுவது அரிதானது .கடைசி காலத்தில் அன்பு தணியும் பொது எவ்வாறு கருத்தொற்றுமை ஏற்படும்,ஏற்படுமானாலும் அந்த கருத்தொற்றுமை எவ்வளவு நம்பகத்தன்மை உடையதாய் இருக்கும்!!!

சிலர் வரலாற்றை முன் நிறுத்தி கருத்தை முன் மொழிவர், சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக, சுருக்கமாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி கத்தோலிக்க போதகத்தை போல கோர்வையாக,இலக்கண நேர்த்தியாக கருத்துகளை முன் மொழிந்தாலும் 'சத்தியம்' என்கிற 'சாரம் ' அற்று இருப்பதை அறிய முடிகிறது. 

சிலர் மொழிபெயர்ப்பை முடிவற்று பிரதானபடுத்தி  இறுதி கருத்து இல்லாத ஆய்வு கட்டுரைகளை பிரசுரிப்பார்கள்.. இதுவும் வீண்..

ஆகவே சகோதரர் அவர்கள் தனிப்பட்ட வேத வாசிப்பின் அடிப்படையில், தங்கள் விசுவாச அளவிற்கேற்றபடி புரிதலை தேவனிடத்தில் இருந்து பெற்று அதிலேயே புது புது புரிதல் பெற்று வளருங்கள்..

புதுபுது கருத்துகளை  கேட்டாலும்,படிக்க நேரிட்டாலும் தேவனால் அந்நிய அக்கினி கலவாதபடி காணப்படுகிரவைகளையே விசுவாசித்து ஏற்றுகொள்ளுங்கள்..

வரலாற்று ஞானமும்,மொழிபெயர்ப்பு ஞானமும்,கதைகளை  எழுதுகிற/கேட்டறிகிற பக்குவமும்  மாத்திரமும் கொண்டு கடைசி கால தீர்க்கதரிசனங்களை அறியமுடியாது என உறுதியாய் கூறமுடியும் .. ஞானமுள்ள இருதயத்தை நொடி பொழுதில் தரவல்ல தேவனின் வழிகாட்டுதலும்,அனுதின வாழ்வில் தானியேலை போன்ற பொறுமையும்,பரிசுத்தமும் அவசியம்...

கர்த்தருக்கே மகிமை உண்டாகுக!!


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard