இன்றைய உலகத்தில் பலர் "நான் அவனுக்காக இப்படியெல்லாம் செய்தேனே, இத்தனை துன்பங்களை சகித்தேன் ஆனால் நான் கஷ்டப்படும்போது அவன் கடுகொள்ள வில்லையே" என்று புலம்புவதை நாம் பார்க்க முடியும். ஒருவர் செய்த நன்றியை ஒருவர் மறப்பது தவறுதான் என்றாலும் இந்த உலகத்தை பொறுத்தவரை யாருடைய பாவத்தையும் யாரும் சுமப்பது இல்லை! யாருக்காகவும் யாரும் துன்பம் அனுபவிப்பது இல்லை.
எசேக்கியேல் 18:20குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்
பிறருடைய பாவங்களையும் அதற்க்கான தண்டனையையும் சுமது தீர்த்தவர் ஆண்டவராகிய இயேசு ஒருவரே! அவரன்றி வேறு யாரும் யாருடைய பாவத்தையும் சுமப்பது இல்லை.
அவரவர் செய்த பாவத்துக்குதான் அவரவர் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
இங்கு நடப்பது எதுவும் காரணமில்லாமல் ஏதோ தன்னிச்ச்யாக நடப்பது அல்ல! ஒரு விபத்தில் மாட்டியவன் காப்பற்றபட வேண்டும் என்று இருந்தால், அதற்க்கு ஏற்ற மனுஷர்கள் அந்த பக்கம் கண்டிப்பாக வருவார்கள். அவன் 'காப்பாற்றப்பட கூடாது' என்ற நிலை இருந்தால் காப்பாற்ற வரும் ஆம்புலன்ஸ் கூட வரமுடியாமல் டிராபிக் ஜாம் ஆகிபோகும். இந்த சூழ்நிலைகள் எல்லாம் எதைக்கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்றால் அவனவன் செய்த கிரியைகளை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. தேவனுக்கேற்ற கிரியைகள் இல்லாமல்
"ஏன் ஆண்டவரே எனக்கு இப்படி?" என்று புலம்புவதில் எந்த லாபமும் இல்லை.
இயேசுவை ஏற்றுகொண்டு பாவங்கள் கழுவப்பட்டபின்னர் எப்படி வேண்டுமானாலும்வாழலாம் என்று பலர் வாழ்வதாலேய அவர்கள் அனேக விசுவாசிகள் கூட விபத்தில் மாட்டிக்கொண்டும் பல்வேறு கொடிய நோய்களால் பாதிக்கபட்டும் துன்பம் அனுபவிக்கின்றனர்.
இந்த உலகத்தில் உபத்திரியம் உண்டு என்பது நாம் அறிந்ததே ஆனால் அந்த உபத்திரியங்களுக்கு காரணம் நமது தேவ விரோத போக்குதானேயன்றி வேறெதுவும் இல்லை.
நம் மனதில் எழுப்பும் தேவனுக்கு விரோதமான சிறு எண்ணங்கள்கூட உடனே தேவனால் அறியப்பட்டு ஆவியானவரால் எச்சரிக்கப்படும்! ஆனால் நாம் நமது மாம்ச இச்சயிநிமித்தம் அந்த எச்சரிப்புகளை தாண்டும்போது அது நமக்கு துன்பத்தை கொடுவரும் என்பதை நாம அறிய வேண்டும்.
யாக்கோபு 1:14அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
எனவே உங்களுடைய துன்பங்களுக்கு உங்களையன்றி வேறு யாருமே நிச்சயம்காரணம் இல்லை என்பதை உணர்ந்து நம்மை நாமே அடிக்கடி நிதானித்து அறிந்து தேவ நியாயதீப்பில் இருந்து தப்புவதற்கு தேவன்தாமே நமக்கு பிரகாசமான இருதய நிலைகளை தருவாராக!
I கொரிந்தியர் 11:31நம்மைநாமேநிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
இந்த உலகத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்ட தேவ பிள்ளைகள் ஒவ்வொருவரின் இடது புறம் சாத்தானின் தூதனும் வலது புறம் தேவ தூதனும் இடைவிடாமல் பின்செல்கின்றனர். நாம் நன்மையான காரியங்களை செய்து நல்ல சிந்தனையில் இருக்கும்போது தேவ தூதன் கெம்பீரமாக நம்மை பாதுகாத்து நம்மோடு வருகிறான். ஆனால் தீமையான சிதையிலும் தீய காரியங்களிலும் நாம் ஈடுபடும்போது, சாத்தானின் தூதன் நம்மை ஆட்கொண்டு விடுகிறான்! தேவ தூதனும் (தேவனும்கூட) நம்மை எதுவும் செய்ய முடியாமல் வருத்ததோடு நம் பின்னர் வருகின்றனர். ஆனால் அவர்கள் நம்மைவிட்டு விலகுது இல்லை. மேலும் இதில் நாம் அறிந்துகொண்ட வேறொரு முக்கிய விஷயம் என்னவென்றால் நாம் நல்ல சிதனையில் நடந்து தேவதூதனால் தாங்கி நடத்தப்படும்போது அதைகண்டு சாத்தான் சற்றும் மனம் தளருவது இல்லை! இன்று விட்டால் நாளை
பார்த்துகொள்கிறேன் என்பதுபோல் செயல்படுவதை அறியமுடிகிறது. ஆனால்நாம் தீய செயல்களில் ஈடுபடும்போது தேவனோ நமக்காக மிகவும் பரிதபிப்பதை அறியமுடிகிறது
காரணம் அதற்க்கான தண்டனையை நாம் நிச்சயம் அனுபவிக்க வேண்டுமே!
எனவே அன்பானவர்களே:
எந்த சூழ்நிலையிலும் பிறரை கெடுத்து பேசாதீர்கள்!
எந்த சூழ்நிலையிலும் யாரை பார்த்தும் பொறாமை கொள்ளாதீர்கள்
எந்த சூழ்நிலையிலும் பிறரை ஏமாற்றாதீர்கள்!
எந்த சூழ்நிலையிலும் பிறர் பொருட்களை/ பணத்தை திருடாதீர்கள்
எந்த சூழ்நிலையிலும் பிறர்மேல் வஞ்சம் வைக்காதீர்கள்.
எந்த சூழ்நிலையிலும் யாரையும் சபிக்காதீர்கள்.
பிறரை குற்றப்படுத்துவதற்கு முந்த வேண்டாம். நம்மில் குற்றம் இல்லாத மனுஷன் இல்லையே!
உள்ளதை உள்ளது என்று சொல்வதற்கு சற்றும் தயங்க வேண்டாம்.
எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்றே எப்பொழுதும் ஜெபியுங்கள.
பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொள்ளாமல் எப்பொழுதும் ஆண்டவரோடு தொடர்பு நிலையில் இருந்து உங்களில் இருக்கும் அழுக்குகளை வேத வெளிச்சத்தில் கண்டறிந்து திருத்துவதோடு நம்மை பண்படுத்தும் ஆவியானவர் வெளிப்படுத்தும் மேலான காரியங்களுக்கு கீழ்படிய சற்றும் தாமதியாதீர்கள். இயேசுவின் நாமத்தை அடிக்கடி உச்சரியுங்கள்!
இவைகள் எல்லாம் நம்மை இந்த உலக துன்பத்தில் கண்ணிகளில் இருந்து தப்பிக்க வைப்பதோடு மறுமை வாழ்விலும் நம்மோடு தொடர்ந்து வந்து நமக்கு மேன்மையை பெற்றுத்தரும்!
(என்னடா? இவன் பெரிய அட்வைஸ் பண்ணுகிறான் என்று எண்ண வேண்டாம். நல்ல காரியங்களை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சொல்ல தடையில்லை. நீங்கள் விரும்பினால் எனக்கு அட்வைஸ் பண்ணுங்கள் நான் கேட்க தயார்)
-- Edited by SUNDAR on Tuesday 28th of August 2012 03:17:18 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படீன்னா இயேசப்பா நமது பாவஙலுக்கும் சாபஙகலுக்கும் மரித்துவிட்டார் என்று பைபில் சொல்வது குரித்து என்ன சொல்கிரீர்கல்.
ஏசாயா 53:4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்;
இயேசு நமது பாவஙளை தீர்த்த பிறகு எப்படி நமது பாவம் பழி நமது தலயில் இருக்கும்?
அன்பான சகோதரரே, தங்கள் கேள்விக்கு நன்றி. தாங்கள் சொல்வதுபோல் "இயேசு எல்லா பாவத்தையும் சாபத்தையும் சுமந்துவிட்டார்" என்றால், இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு துன்பமும் துயரமும் வேதனையும் வியாதியும் வராமல் அல்லவா இருக்கவேண்டும்?
ஆனால் இந்த உலகில் நடப்பது என்ன? இயேசு என்னுடைய பாவத்துக்கு மரித்தார் என்று விசுவாசிப்பவருக்கும் வியாதி வருகிறது விசுவாசிக்காதவருக்கும் வியாதி வருகிறது. இவ்வாறு எல்லோரும் ஒரே மாதிரி நடக்கும் நிலையில் தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் என்ன பொருளில் எழுதப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து அறிதல் அவசியம்
நமது பாவத்துக்காக மரித்த இயேசு கூட இறுதியில் என்ன சொல்லியிருக்கிறார்?
வெளி 22:12இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன்என்னோடேகூட வருகிறது.
எனவே என்னுடைய கணிப்பு படி, இயேசுவை ஏற்றுக்கொள்ளதவர்கள் செய்யும் பாவங்களுக்கு எப்படி தண்டனை உண்டோ அதுபோல் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் செய்யும் பாவங்களுக்கும் நிச்சயம் தண்டனை உண்டு.
ஒருவர் மனம்திரும்பி தனது பாவங்களுக்காக மனஸ்தாபபட்டு பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அந்த நாள்வரை அவன் செய்த எல்லா பாவங்களும் அவன் மேலுள்ள எல்லா சாபங்களும் அவனுக்கு மன்னிக்கப்படும். ஏனெனில் வசனம் சொல்வதுபோல் "அவன் பாவங்களையும் சாபங்களையும் இயேசு சுமது தீர்த்துவிட்டார்". ஆனால் அதன் பின்னர் அவன் தேவனின் நியமனங்களை அறிந்து அதன்படி வாழவேண்டும் இல்லையெனில் அவனது மீருதல்களுக்கு தண்டனையோடு கூடவே மன்னிப்பு கொடுக்கப்படும்.
"தேவன் மஹா நீதிபரர்" தவறு செய்யாத யாரையும் அவர் தண்டிப்பது இல்லை! கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டவர்களாகிய நமக்கு துன்பங்கள் நோய்கள் வேதனைகள் வருகிறது என்றால் அதற்க்கு காரணம் நமது மீருதல்கள் மற்றும் கீழ்படியாமையே காரணம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Bro//இயேசு நமது பாவஙளை தீர்த்த பிறகு எப்படி நமது பாவம் பழி நமது தலயில் இருக்கும்? //
சகோ.சுந்தர் அவர்களின் இந்த பதிவு அர்த்தம் மிகவும் அர்த்தம் செறிந்தது. இந்த பதிவை படித்தபின், ஒரு புதிய புரிதல் தியானத்தின் போது உண்டாயிற்று.. அதென்னவென்றால்,
எபேசியர் 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலானதலையாகத் தந்தருளினார்.
எபேசியர் 5:23கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
அதாவது, கிறிஸ்த்துவின் சரீரமாகிய சபையில் நாம் அனைவரும் காணப்படும்படியாக, மணவாட்டி சபைக்கு தலையாகிய கிறிஸ்துவே அடிக்கபட்டார்.. ஆகவே அவராலே இரட்சிப்பு பெற்ற நம் எல்லோருடைய பாவமும் நம் தலையாகிய கிறிஸ்த்துவின் மீதே சுமத்தப்பட்டது..