இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Is the morning star in the bible Jesus or Lucifer?


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Is the morning star in the bible Jesus or Lucifer?
Permalink  
 


In Isaiah 14:12 Lucifer is called the son of the morning

but, Rev.22:16
 I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.

 

Who is the morning star Jesus or Lucifer?



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Dear Brother,

We welcome you here in the name of Christ Jesus.

 

Satan was the son of morning and Lord Jesus is the morning star as verses are saying. If you want more in detail, I can elaborate.

 

Praise the Lord.



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Praveen wrote:

In Isaiah 14:12 Lucifer is called the son of the morning

but, Rev.22:16
 I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.

 

Who is the morning star Jesus or Lucifer?


 

சகோ. பிரவீன் அவர்களை நாம் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.  
 
தங்களின் கேள்விபோல் எனக்கும் முன்பு மனதில் கேள்வி இருந்தது ஆனால் தாங்கள்  சுட்டிக்காட்டியிருக்கும்  இரண்டு வசனங்களையும் சற்று கூருந்து படித்து ஆங்கில விவிலிய வசனத்தோடு ஒப்பிட்டு பார்த்தபோதுதான்  உண்மையை  அறிய முடிந்தது.
 
ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே
 
அதாவது தமிழ் விவிலியத்தில் ஏசாயா 14:12  வசனத்தில் "விடிவெள்ளி" என்று அதாவது 
"morningstar" சொல்லப்படும் வார்த்தை ஆங்கில விவிலியத்திலோ அல்லது மூல மொழியிலோ இருப்பதுபோல் தெரியவில்லை.   
 
14:12  How great is your fall from heaven, O shining one, son of the morning! How are you cut down to the earth, low among the dead bodies!
 
மாறாக "son of the morning" என்று அதாவது "காலையின் மகன்" என்று தான் வசனம் சொல்கிறது. மூல மொழியில் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கிறது.
 
ஆனால் இயேசுவை குறித்து வெளிப்படுத்தின விஷேசததில் சொல்லும்போது விடிவெள்ளி (morning star) என்று தெளிவாக சொல்லபட்டுள்ளது.  
 
Rev.22:16
 I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.    
 
வெளி 22:16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்
      
எனவே "விடிவெள்ளி" (morning star)என்பது நமது இரட்சகராகிய இயேசுவை மாத்திரமே குறிக்கிறது என்பதுதான் உண்மை.
 
எனது கருத்தில் தவறு இருந்தால்  அறிந்தவர்கள் திருத்தவும்.        
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

Praveen wrote:

In Isaiah 14:12 Lucifer is called the son of the morning

but, Rev.22:16
 I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.

 

Who is the morning star Jesus or Lucifer?


 

சகோதரர் பிரவீன் அவர்களின் வருகைக்கு நன்றி. தங்கள்  கேள்விக்கும் மிக்க நன்றி
ஆண்டவராகிய இயேசு ஒருவரையே "பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்" என்று  வேதாகமம் குறிப்பிடுகிறது என்பது உண்மை.      
என்னுடைய கணிப்புப்படி: 

ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, 
14:12  O shining one, son of the dawn!

ஆங்கில வேதாகமத்தில் லூசிபரை  "விடிவெள்ளி" நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் அதற்க்கு ஒப்பாக வார்த்தைகள் இருப்பதாலேயே  தமிழில் விடிவெள்ளி என்று மொழிபெயர்த்துள்ளனர் என்பது எனது கருத்து.   

இங்கு வசன அடிப்படையில் லூசிபர் "பிரகாசிப்பவனும் அதிகாலையின் மகனுமாக" இருந்திருக்கிறான். அதிகாலையில் பிரகாசிப்பது விடிவெள்ளி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அது ஒரு மேன்மையான நிலையாக இருந்திருக்க வேண்டும்.       
 
ஆனால் அவனோ தான் கொண்ட பெருமையினால் தனது மேன்மையை இழந்து தனக்கு கொடுக்கபட்ட பதவியை இழந்து போனான்!  
ஏசாயா 14:12 நீ வானத்திலிருந்து விழுந்தாயே!  ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

அவன் இருந்த மேன்மையான இடத்தில் இருந்து தரையில் விழ வெட்டபட்டு போனான்! எனவே அந்த இடம் காலியானது. \
 
ஆண்டவராகிய இயேசு மரணத்தை ஜெயித்ததன்மூலம் விடிவெள்ளி நட்சத்திரமாக இருக்கிறார்! 

வெளி 22:16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

இங்கு தாவீதின் வேர்/சந்ததி என்று இயேசு தன்னை குறிப்பிட குறிப்பிட காரணம் அவர் தாவீதின் சந்ததியில் பிறந்து மரித்து உயிர்த்து மரணத்தை ஜெயித்தார் என்பதாலேயே. 

ஆகினும் தற்போது இயேசுவின்வசம் இருக்கும்  அந்த "விடிவெள்ளி" நட்சத்திரமானது வேறொருவருக்கு கொடுக்கப்படும்! இந்த செய்தியை ஆவியானவர் சபைக்கு கூறியிருப்பதையும் நான் அறிய முடியும் 

வெளி 2:26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

 28. விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன் 

இங்கு "ஜெயம்கொள்கிறவன்" என்று ஒரே ஒருவனைப்பற்றி வேதம் குறிப்பிட்டிருப்பதை அறிய முடியும். அந்த ஜெயம் கொள்கிறவன் யார் எனபதை அறிய கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும். 

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ.... !!!

மரணம் என்பது அந்த அதிகாலையின் மகனாகிய லூசிபரின் வீழ்ச்சியாலேயே வந்தது! மரணத்தை ஜெயித்தன் மூலம்  தேவகுமாரனாகிய இயேசு விடிவெள்ளி நட்சத்திரமாக இருக்கிறார். அடுத்து  முடிவு பரியந்தம்  இயேசுவின் கிரியைகளை கைகொண்டு மரணத்தை ஜெயம்கொள்கிறவனுக்கு லூசிபர் இழந்துபோன அந்த மேன்மை   கொடுக்கப்படும்.

(இது வசன தியானத்தின் அடிப்படையில் நான் அறிந்த என் சொந்த கருத்து) 
    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard