பொதுவான இந்த இலவச தளத்தில் பதிவுகளை தரும் சகோதரர்கள் பிற சகோதரர்களின் எதிர் கருத்துகளிநிமித்தாமோ அல்லது இந்த தளத்தில் இருக்கும், தாங்கள் தவறு என்று கருதும் எந்த ஒரு செய்தியிநிமித்தாமோ சோர்ந்து போகவேண்டாம் என்று அன்புடன்
கேட்டுகொள்கிறேன்.
நல்லது கெட்டது இரண்டும் கலந்ததுதான் இந்த் உலகம். நல்லதை நாம்தான் தேடி எடுத்து கொள்ள வேண்டுமேயற்றி எல்லாம் தீமையாக இருக்கிறது என்று எண்ணி சோர்ந்துபோக கூடாது.
ஆதியில் இருந்து இறை வார்த்தைகளை எடுத்துரைத்த எல்லா தீர்க்கதரிசிகளுமே கடுமையாக எதிர்க்கபட்டர்கள் என்பதோடு யாருமே குற்றம் சுமத்த முடியாத, இறைவனின் நேரடி வார்த்தைகளை பேசிய பரிசுத்தராகிய இறைமகன் இயேசுவின் வார்த்தைகளுக்கே அனேக எதிர்ப்புகளும் குறைகூறுதல்களும் எழும்பியது என்பதை நாம் எல்லோருமே அறிவோம்.
அப்போஸ்தலர் 7:52 தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள்
நமக்கு சரி என்று தோன்றும் கருத்து பிறருக்கு தவறு என்று தோன்றலாம் பிறருக்கு சரியாக தெரியும் கருத்து நமக்கு தவறுபோல் தோன்றலாம் எனவே எல்லாவற்றையும் ஆராய்ந்து உண்மையை அறிவதுதான் நமது நோக்கமாக இருப்பதால் தேவையற்ற காரியங்களையும் பதிவுகளையும் ஓரமாக ஒதுக்கு தள்ளிவிட்டு நமது உண்மை தேடலை தொடர்வோமாக.
ஆம்! விடாப்பிடியாக உள்ளிருதைய வாஞ்சையோடு தேடுகிறவர்கள் நிச்சயம் உண்மையை கண்டடைவார்கள்.
வீழ்ந்துபோன இந்த உலகம் இருக்கும்வரை, குறை கூறுதலும், தவறை ஏற்றுக்கொள்ளாமல் சமாளித்தலும், எனக்கு புத்திசொல்ல இவன் யார்? என்ற எண்ணங்களும், நான் சொல்வது தான் சரி மற்றவர் எல்லோருமே தவறு என்ற பிடிவாதங்களும், பிறரை நியாயம் தீர்க்கும் துடிக்கும் மார்க்க பேதங்களும் ஒழிந்துபோவது இல்லை.
எனவே அன்பானவர்களே "ஒரு விவாத திரியை படிக்கும்போது உண்மை எதுவென்று ஓரளவுக்கு நமக்கு புரியும்" அத்தோடு கடந்து செல்வோமாக. நமக்கு தெரிந்தவைகளை எழுதுவோமாக தேவையற்ற வார்த்தைகளை மனதில் எடுத்து சோர்ந்துபோக வேண்டாம்