இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இவர்போன்ற ஊழியர்களின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிபோம்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
இவர்போன்ற ஊழியர்களின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிபோம்.
Permalink  
 


நான்கைந்து வருடங்களாக நான் அறிந்தவரும், ஒரு  மிகப்பெரிய  சபையில் மாத சம்பளத்தக்கு துணை பாஸ்டராக ஊழியம் செய்த  ஒருவர் திடீர் என்று அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். காரணம் அவருக்கு அரசியல் பண்ணுவதற்கோ அடுத்த பெரிய பாஸ்டர்கள் முன்னால் நடிக்கவும்/ நடுங்கவும் தெரியவில்லையாம். 
.
வேறு எந்த வேலைக்கும் போக முடியாத அந்த பாஸ்டர் ஆவடி பக்கத்தில் ஒரு கிராமத்தில் சென்று ஒரு சிறிய ஊழியம் செய்ய ஆரம்பித்தார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கையை தள்ளமுடியாமல் கடுமையான பண பற்றாக்குறையில் பாதிக்கபட்டாராம்.  தான் முன்பு ஊழியம் செய்த அந்த  மிகப்பெரிய சபையை அணுகி தான் ஊழியம் செய்ய தேர்வு செய்திருக்கும் இடத்தில் ஒரு கீற்று கொட்டகை போடுவதற்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று கேட்டாராம். ஆனால கோடிக்கணக்கில் பணம் புரளும்  அந்த பெரிய பாஸ்டரோ "எந்த காரணத்தை கொண்டும் இங்கு என்னை பார்க்க இங்கு  வரவேகூடாது போ" என்று வார்த்தையால் அடித்து துரத்திவிட்டாராம்.
 
யாருடைய உதவியும் கிடைக்காமல் மிகவும் வருத்தத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் எங்கள் வீட்டுக்கு வந்து  புலம்பிக்கொண்டு இருந்தார். 
.
சொகுசு வாழ்க்கையை தேடி ஓடும் இந்த உலகில் அதிகமானோர் ஆண்டவருக்கு முழுநேரமாக ஊழியம் செய்ய முன்வருவது இல்லை. முன்வந்து இதுபோன்று ஊழியம் செய்ய விரும்பும் மனுஷர்களும் இவ்வாறு கடும் பாடுபட்டால் மற்றவர்களுக்கு எப்படி ஊழிய வாஞ்சை உண்டாகும்?
அந்த பாஸ்டர் தற்போது ஆவடி பகுதியில் ஒரு சிறு கிராமத்தில் தனியாக ஒரு சபை நடத்தி வருகிறார். பக்கத்தில் சொந்தமாக ஒரு சிறு இடம் வாங்கி ஒரு சிரிய சபை காட்ட ஆரம்பித்து சுமார் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது ஆனால் பண பற்றாக்குறையால் இரண்டு மூன்று சுவர்களை எழுப்பியதோடு அப்படியே வேலை நிற்கிறது. 
.
VISAON2000௦௦௦ என்ற ஊழிய ஸ்தாபனம் நிலம் உள்ள ஊழியர்களுக்கு சபை கட்டிகொடுக்கும் பணியை செய்து வந்தது எனக்கு தெரியும். எனவே நான் அந்த ஸ்தாபனத்தை அணுகும்படி ஆலோசனை சொன்னேன் ஆகினும் பல மாதங்கள் முயன்றும் அவர்களிடமும்  சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.  
.
இதுபோன்ற தானாக  முன்வந்து  ஊழியம் செய்ய விரும்பும் ஊழியர்களை  இறைவன் அங்கீகரித்து அவர்களுக்கு தேவையானதை கொடுக்கவும்  அவர்களது இறைப்பணி தேவைகளை சந்திக்கவும் பிரார்த்திப்போமாக.  
 


-- Edited by Nesan on Thursday 4th of October 2012 09:46:41 PM

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard