இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "மனைவியை அடிப்பதில் தவறில்லை" - நீதிபதி தீர்ப்பு!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
"மனைவியை அடிப்பதில் தவறில்லை" - நீதிபதி தீர்ப்பு!
Permalink  
 


பெங்களூரு: "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை' என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.


"என் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்' எனக் கோரி, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு, சமீபத்தில், கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விஷயங்களை, குழந்தைகளின் நலன் கருதி, பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார். நீதிபதியின் இந்தக் கருத்துக்கு, பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, "ஆன்-லைன்' மூலம், பிரசாரம் செய்து வருகின்றன. பெண் வழக்கறிஞர்கள் சிலர், இதுதொடர்பாக, ஐகோர்ட் தலைமை நீதிபதியைச் சந்தித்து, மனு ஒன்றையும் அளித்து உள்ளனர்.

"மனைவியை அடிப்பது தவறு" என்பது எல்லோருடைய பொது கருத்தாக இருக்கும்போது இப்படி ஒரு  தீர்ப்பை பகிரங்கமாக  கனம் நீதிபதியவர்கள் வழங்கியுள்ளது ஆச்சர்யமாக உள்ளது.
இந்த தீர்ப்பு குறித்த சகோதர சகோதரிகளின் கருத்து என்ன?  நடைமுற அனுபவ கருத்தின் அடிப்படையில் ஆலோசனை வழங்கலாம்.    
இஸ்லாமியர்களின் வேதம்  "மனைவி தவறு செய்தால் வலிக்காத  வண்ணம் அடிக்கலாம்" என்று சொல்கிறதாம்.  
நமது விவிலியத்தில் இந்த கருத்து குறித்து ஏதாவது குறிப்பு உள்ளதா?  


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
RE: "மனைவியை அடிப்பதில் தவறில்லை" - நீதிபதி தீர்ப்பு!
Permalink  
 


மனைவியை அடிப்பது குறித்து வேதாகமத்தில் எந்த கருத்தும் இருப்பதுபோல் நான் அறியவில்லை. ஆகினும் இந்த  தீர்ப்பு பற்றி  என்னுடைய  சார்பில்  சில கருத்துக்கள்.  
எபேசியர் 5:22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
எபேசியர் 5:24 சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
கொலோசெயர் 3:18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.

மனைவிமார்கள் எல்லா விஷயத்திலும் கணவனுக்கு கர்த்தருக்குள் கீழ்ப்படியவேண்டும் என்பது வேதாமம் சொல்லும் கருத்து. கீழ்படியாத மனைவி அமைந்துவிட்டால் என்ன செய்வது? கண்டிப்பதை விட கர்த்தரிடம் முறையிடுவதே சிறந்தது.

மேலும் கணவன்மார்கள் அலுவலகங்களில் உயர் அதிகாரிக்கு கீழ்படிந்து நடக்க வேண்டியது அவசியம் . ஆனால் வீட்டில் இருக்கும்  ஒரு மனைவிக்கு இருக்கும் ஒரே உயர் அதிகாரி அவள் கணவன்தான். மேலான அதிகாரம் இல்லாத யாருமே தரிகேட்டுபோக அனேக வாய்ப்புகள் உண்டு.   எனவே தன்னை பற்றிய அன்பும் மரியாதையுடன்  ஒரு பயத்தை மனைவி இடம்  ஏற்ப்படுத்த வேண்டியது கணவனின் கடமை!  இல்லையேல் குடும்பங்கள் சீரழிந்துபோகும்.

எபேசியர் 5:33 மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.

அந்த பய பக்தியையும் தனது நேர்மை மற்றும் நன்னடத்தைகள் மூலமே ஏற்ப்படுத்த முடியுமேயன்றி மனைவியை அடித்து ஏற்ப்படுத்த முடியாது.  

ஒரு ஆண் எப்படி தறிகெட்டு போனாலும் ஒரு மேன்மையான  தாயானவள் தன் வாழ்க்கையையே அற்பணித்து  குழந்தைகளை காப்பாற்றி விடுவாள். ஆனால் ஒரு தாயானவள் குடும்பத்தை விட்டு பிரிந்தால் அந்த குடும்பம் என்ற அமைப்பே சிதறிவிடும். அப்படி சீரழ்ந்துபோன பல குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன்.  

அதுபோல் புருஷனானவன் மனைவியிடம் அன்புகூறவேண்டும் என்பது வேதாமம் போதிக்கும் கட்டளை.


எபேசியர் 5:25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; 
கொலோசெயர் 3:19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.


அன்புகூர விரும்பாமல் அடிக்கும் கணவன் அமைந்தால்? எதிர்த்து நிற்ப்பதை விட, கீழ்படிதல் மற்றும் தாழ்மையுடன் கூடிய ஜெபமே நல்ல நல்ல பலனை தரும்.   

I பேதுரு 3:1 அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 3:2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 
  
பொதுவாக நாம் சுய புத்தியின் மேல் சாயாமல்  கர்த்தர் கிரியை செய்ய இடங்கொடுங்கள் அவர் நன்மையானதை தருவார்! 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard