சகோ. கீர்த்திகா அவர்களின் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி. தாங்கள் இந்த தளத்துக்கு என்ன நோக்கத்தில் வந்திருந்தாலும் இந்த தளத்துக்கு வரும் ஒவ்வொருவரையும் தேவனே கொண்டுவந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன்.
.
இந்த தளமானது பரிசுத்த வேதாகமத்தையும் தேவனின் செயல்பாடுகளையும் அடிப்படையாக கொண்டு செயல்படுவது. எங்களுக்கு மற்ற உலக சம்பந்தமான காரியங்களை அறிந்துகொள்வதில் அதிக ஆவல் இல்லை சகோதரியே. ஒருவர் உலகத்தையே ஆண்டு நடத்தும் ஜீவனுள்ள தேவனை அறிந்து கொண்டால் பின்னர் உலகில் நடக்கும் எந்த காரியமும் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்த முடியாது.
.
உதாரணமாக தான் விரும்பிய ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி பயணிக்கும் ஒருவர் ஒரு நான்கு முக்கு சந்திப்பில் வரும்போது ஏது சரியான வழி என்று தெரியவில்லை என்றால் அங்கும் இங்கும் அலைவதொடு பலரிடம் விசாரித்து உண்மையை அறிய முயல்வார். சிலர் அவருக்கு தவறான வழியை கூட காட்டிவிட வாய்ப்புண்டு ஆனால் வழியை அறிந்து சரியாக பயணிப்பவர் எந்த யோசனையும் யாருடைய வழிகாட்டுதலையும் எதிர்நோக்காமல் சரியான வழியில் விரைவாக சென்றுவிடுவார்.
.
அதுபோல் உண்மையை அறிந்துகொண்ட எங்களுக்கு இந்த உலக காரியங்கள் பற்றிய கருத்து கணிப்புகளால் எந்த பயனும் ஏற்ப்படபோவது இல்லை என்பதை உறுதியாக சொல்லமுடியும்.
.
நாங்கள் அறிந்துகொண்டதும் மேன்மை பாராட்டுவதும் ஒன்றே ஒன்றுதான்!
சங்கீதம் 20:7சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்;நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடையநாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
தேவன்தாமே தேவையான சரியான உண்மையை அறிந்துகொள்ளும்படி தங்கள் இருதயத்தை திறப்பாராக!