எனது கணினியில் பொதுவாக YUtubeஐ நான் கிளிக் செய்த போது அதில் பலதரப்பட்ட படங்களின் தொகுப்பு இருப்பதை நான் பார்க்க முடிந்தது.
சினிமா சம்பந்தப்பட்டது, TV சம்பந்தபட்டது, செய்திகள் சம்பந்தபட்டது, பாலியல் சம்பந்தபட்டது போன்ற பலதரப்பட்ட படங்கள் திரையில் கோர்வையாக தோன்றுகிறது.
அந்த பலதரப்பட்ட படங்களில் நாம் எந்த ஒரு படத்தை செலக்ட் செய்து கிளிக் பண்ணினாலும் அதனோடு சம்பந்தப்பட்ட அனேக படங்கள் திரையில் தோன்றுவதை பார்க்க முடிகிறது. அதாவது சினிமாவை சொடுக்கினால் திரை முழுவதும் சினிமா சம்பந்தபட்டது வருகிறது, பாலியல் சம்பந்தபட்டத்தை சொடுக்கினால் எல்லாமே அசிகமான படங்கள் வருவதை பார்க்க முடிகிறது.
இதில் இருந்து நாம் ஒரு பாடத்தை அறிந்துகொள்ள முடியும்.
நல்லதையே நாம் தேடும்போது அல்லது நல்ல காரியங்களிலேயே நமது மனதை ஈடுபடுத்தும் போது நமக்கு நல்ல நல்ல இன்போர்மேசன்கள் அதிகமாக கிடைக்கிறது! அதற்க்கு ஏற்ற நண்பர்கள் நமக்கு கிடைக்கிறார்கள், நல்லதை அறிவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நமக்கு உருவாகிரத்தை நாம் அறியலாம்.
அதுபோல் தீயதில் மனதை மனதை செலுத்தினால் அதற்க்கு ஏற்ற காட்சிகள் செய்திகள் மற்றும் நண்பர்களே அதிகம் நம்மை தேடிவரும் என்பதை நாம் அறிதல்அவசியம்.
நல்லவன் தான் மனதில் இருந்து நல்லதைத்தான் எடுத்து கொடுப்பான். நல்லவன் தீயவனோடு சேர்ந்து அதிகநாள் இருக்கவும் முடியாது தீயவன் நல்லவனை விட்டு பிரியாமல் பற்றிக்கொண்டு இருக்கவும் முடியாது.
பொதுவாக, நல்ல செய்திகள், இறைவனை பற்றிய காரியங்கள் எதுவும் திரையில் உடனே தோன்றவில்லை. அதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது! ஆனால் தீமையான செய்திகள் தானாகவே நம்மை கவரும் விதமாம் அதிகமாக தென்படுகின்றன.
வீழ்ந்துபோன இந்த உலகில் நன்மையானது தீமையால் மறைக்கபட்டுவிட்டது அல்லது விழுங்கபட்டுவிட்டது என்றுதான் சொல்ல முடியும். ஆவலோடு தேடினால் மட்டுமே
இறைவனையும் நீதியையும் நேர்மையையும் எந்தஒரு நல்லதையும் கண்டடைய முடியும்.
ஆமோஸ் 5:14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்;