வேதாகாமத்தில் உள்ள சில வசனங்களின் அடிப்படையில் தீமையையும் தீய சக்திகளையும் தேவனே வேண்டுமென்றே உருவாக்கினார் என்றும் தீய சக்திகளானது தேவனின் திட்டத்தின் ஒரு பகுதி என்ற கருத்து நிலவி வருகிறது.
.
இந்த கருத்துக்கு சாதகமாக குறிப்பிடப்படும் சில வசனங்கள் இதோ"
நன்மை செய்பவன் மட்டுமே தேவனால் உண்டானவன் தீமை செய்தவன் பிசாசினால் உண்டானவன் அவன் தேவனை காணவில்லை என்று வேதம் சொல்கிறது:
II யோவான் 1:11நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
.
தேவன், தீமையும் தனது திட்டத்தில் ஒரு பகுதியாக உருவாக்கி அதையும் நல்லது என்று கண்டாரா?
அவ்வாறு தீமையும் நல்லது என்று கண்டால் தீமையை செய்யாதே என்று வேதம் முழுவதும் சொல்லவேண்டிய அவசியம் என்ன?
தீமையை தேவன் வேண்டுமென்று உருவாக்கினார் என்றால் சாத்தானின் வீழ்ச்சி, ஆதாமின் வீழ்ச்சி மற்றும் இந்த உலகில் நடப்பது எல்லாம் தேவனின் திருவிளையாடல்களா?
.
ஒருவேளை அப்படியே நன்மை தீமை எல்லாமே தேவனின் திட்டம்தான் என்று எடுத்துகொண்டால். பூமியில் மனுஷனை படைத்ததற்கு தேவன் ஏன் மனஸ்தாப படவேண்டும்? சவுலை ராஜாவாக்கியதர்க்கு தேவன் ஏன் மனஸ்தாப வேண்டும்?
ஆதியாகமம் 6:6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர்மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
I சாமுவேல் 15:11 நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது;
அவருடைய அநாதி திட்டப்படி எல்லாமே நடந்தால், அது குறித்து அவர் மனஸ்தாப பட வேண்டிய அவசியம் என்ன?
எல்லாமே அவர் திட்டம் என்றால் சர்வத்தையும் படைத்தவர் கர்த்தர் கண்ணீர் விட்டு அழ வேண்டிய அவசியம் என்ன?
லூக்கா 19:41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, யோவான் 11:35 இயேசு கண்ணீர் விட்டார்.
எரேமியா 14:17 என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்;
பதில் அறிந்த சகோதரர்கள் தாங்கள் கருத்தை விளக்கவும்.
-- Edited by SUNDAR on Saturday 6th of October 2012 04:14:27 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவன் ஒளியை படைத்து, இருளை உண்டாக்கினார். இருளோ, ஒளியோ ஆரம்பத்தில் இல்லை. ஒளியை படைத்ததனால் இருள் வந்தது.
தேவன் ஒளியை பிரகாசிக்க பண்ணுகிறார். அந்த ஒளியை நோக்கி செல்பவர்கள் ஒளியை அடைவார்கள். அதை விட்டு தூர விலகுகிறவர்கள் இருளை அடைவார்கள்.
ஆக இருளுக்கு, ஒளி எப்படி காரணமாகிறதோ, அப்படியே தீமைக்கும் தேவன் காரணமாகிறார். அதாவது தேவனை விட்டு விலகுகிறவர்கள் தீமையை அடைகிறார்கள்.
சாத்தான் தன்னுடைய சித்தமோ, தேவ சித்தமோ செய்ய சுதந்திரம் படைத்தவன். அவன் தன்னுடைய சித்தம் செய்ததனால் இருளுக்கு அதிகாரியானான்.
அவ்வாறே மனிதனும் தன்னுடைய சித்தமோ, தேவ சித்தமோ செய்ய சுதந்திரம் படைத்தவர்கள். அவர்கள் தேவ சித்தத்திற்க்கு (ஒளிக்கு) தங்களை மறைத்து கொள்ளும் போது இருளை (தீமையை) அடைகின்றனர்.
தேவன் ரோபோட் போல மனிதனை படைக்காமல் சுதந்திரமாய் படைத்ததின் மூலம் இருளுக்கும், தீமைக்கும் காரணமாகிறார்.
தன் சித்தம் செய்வதன் மூலம், ஒரு உயர் நிலையை அடைய மனிதனுக்கு தகுதி இருக்கும் போது, அவன் தாழ் நிலையை அடைய முயற்ச்சிக்கும் போது அவரது ஆவியானவர் துக்கப்படுகிறார்.
ஒரு மனிதரிடம் டாக்டர் ஒருவர் உங்கள் உறவினர் இன்னும் சில தினங்களில் இறந்து விடுவார் என சொல்லி அந்த நாள் வந்து அவர் இறந்தால் அப்போது அந்த மனிதன் துக்கப்படுவானா? அல்லது இது எனக்கு முன்னமே தெரியும் என்று சந்தோஷப்படுவானா?
-- Edited by SANDOSH on Saturday 6th of October 2012 09:20:12 PM
என்ற வசனத்தை வைத்து தேவன் தீமையை உண்டாக்கினார் என்று எடுத்துகொள்வது அர்த்தமற்றது .
.
"தண்ணீர்" என்ற வார்த்தை ஆவியானவரை குறிப்பிட சில இடங்களில் பயன்படுத்தபடுவது போல், "இருள்" என்ற வார்த்தை சாத்தானின் அதிகாரத்தை குறப்பிடவே பயன்படுகிறது.
.
மற்றபடி "இருள்" என்பது தேவனின் படைப்புகளில் ஓன்று! ஆதியாகமம் 1ம அதிகாரத்தை படித்தால் தேவன் வெளிச்சத்தை உண்டாகும் முன்னரே அவர் உண்டாக்கிய பூமியில் "ஆழங்களில் இருள் இருந்தது"என்று வசனம் குறிப்பிடுகிறது.
ஆனால் மனுஷனின் கண்கள் இருளில் உள்ள காட்சிகளை காண முடியாத நிலையில் இருப்பதால் அந்த நிலையை தீமைகள் செய்ய சாத்தான் பயன்படுத்திகொண்டான் அவ்வளவே!
.
யோபு 24:13.அவர்கள் வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தரிக்காமலும் இருக்கிறார்கள்.
14. கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, இராக்காலத்திலே திருடனைப்போல் திரிகிறான். 17 விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான்.
.
மற்றபடி இருளை தேவன் உண்டாக்கியதால் தீமையையும் அவர்தான் உண்டாக்கினார் என்று நாம் எடுத்துகொள்ள முடியாது! காரணம்நம் கர்த்தர் "காரிருளில் வாசம் செய்வதாக" சொல்லியிருக்கிறார்
I இரா 8:12காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்
.
ஆனால் தீமையோ தேவனிடத்தில் சேரமுடியாது!
சங்கீதம் 5:4தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
.
இந்த கருத்துப்படி காரிருளில் தங்கினாலும் தீமையை தவிர்க்கமுடியும் என அறிய முடிகிறது!
.
எனவே "தீமை" என்பது வேறு! தேவன் உண்டாக்கிய "இருள்" என்பது வேறு!
.
இருளை தேவன் உண்டாக்கியதற்கு வேத ஆதாரம் உள்ளது! "தீமை"யை தேவன் உண்டாக்கியதற்கு வசன ஆதாரம் இருக்கிறதா அறிந்தவர் தரவும்.
.
(TROUBLES எனப்படும் தீங்கு வேறு! EVIL எனப்படும் தீமை வேறு என்பதை கருத்தில் கொண்டு பதில் தரவும்)
-- Edited by SUNDAR on Friday 12th of October 2012 03:10:51 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)