பணம் பாதாளம் வரை பாயும் என்பதை நாம் கேள்வி பட்டு இருக்க்ன்றோம் ஆனால் அந்த பணம் இப்பொழுது தேவனிடதிலும் பாயவைக்கின்றார்கள் நம் மனிதர்கள்
ஒரு கிறிஸ்தவ பத்த்ரிக்கை ஒன்றை பார்க்க நேர்ந்தது அந்த பத்திர்க்கையில் அநேகர் பெற்று கொண்ட அற்புதத்தையும் அதியசயத்தையும் பற்றி எழுதி இருந்தார்கள் அவர்கள் அந்த அற்புதத்தை எதினால் பெற்று கொண்டார்கள் என்பதை படித்த உடனே என் மனம் மிகுந்த வேதனை அடைந்தது அதோட கூட சிரிப்பும் வந்தது ஆம் நண்பர்களே அது என்னவெனில்
(1 ) என் குழந்தைக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருந்தது நான் என் மகனை இளம் பங்காளர் திட்டத்தில் சேர்ந்தேன் சேர்த்த உடனே சுகம் கிடைத்து விட்டது
(2 ) பல வருடங்களாக எனக்கு குழந்தை இல்லாமல் இருந்தது கட்டிட நிதிக்காக ஒரு தொகை கொடுத்தேன் அடுத்த வருடமே எனக்கு குழந்தை பிறந்து விட்டது இதற்க்கு முன்பு நான் என் வயிற்றில் உள்ள குழந்தைக்காக கூட பங்காளர் திட்டத்தில் இணைத்தேன்
(3 ) வீடு கட்டமுடியாமல் வேளையில் இழப்புகளும் ஏற்பட்டு இருந்தன அப்பொழுது டிவி நிகழ்ச்சியை தாங்க ஒரு தொகை கொடுத்தேன் வீட்டை கட்டி இப்பொழுது நன்றாக உள்ளேன்
போல இன்னும் அனேக அற்புதங்களும் அதிசயங்களும் பணத்தினால் நிகழ்துள்ளது மேலே ஒருபிட்டு உள்ள அனைத்தும் கூர்ந்து கவனித்தால் தேவனுக்கு பணம் கொடுத்தால் எல்லாமே நடந்து விடும் என்று தெரிகின்றது அல்லது தெரிவிக்கின்றார்கள்;
ஊழியர்கள் சொல்கின்றார்கள் நீங்களும் இவர்களை போல கொடுத்து பாருங்கள் இவர்களை போலவே ஆசிர்வாதத்தை பெற்றுகொல்வீர்கள் தேவனுக்கு கொடுப்பதை தவறு என்று சொல்லவில்லை ஆனால் பணம் கொடுத்த உடன் தேவன் அற்புதத்தை செய்கின்றார் என்று சொல்வது தான் எனக்கு எரிச்சலாக உள்ளது ஏதோ ஒருவர் அல்லது இருவர் சொன்னால் பரவாயில்லை ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்ட எல்லோரும் இப்படி தான் சொல்கின்றார்கள்
மனிதனிக்கு பணத்தை காட்டி காரியத்தை முடிப்பது போல தேவனுக்கும் பணத்தை காட்டுகின்றார்கள் ஆனால் தேவன் இவர்களுக்கு செய்யும் அற்புதம் அதியசம் எல்லாம் அவர் நம் மீது வைத்த அனுபிர்காக தான் என்பதை உணர மனம் இல்லாத மனிதர்களாய் இருக்கின்றார்கள்
தேவன் என்ன பணத்தை பார்த்த கிரியை செய்கின்றார் வேதம் சொல்கின்றது பாவிகளுக்கும் ஆகாரம் கொடுக்கின்றார் என்று அதே போல அவரின் கையின் கிரியைகள் எல்லாவற்றின் மேலும் அவர் அன்பாய் இருக்கின்றார் என்று
இப்படி அன்பும் இரக்கும் அலாவில்லாமல் தனுக்குள் கொண்டு உள்ள தேவன் நம் மீது வைத்து உள்ள அன்பிற்காக தான் நமக்கு செய்கின்றார் என்று நீங்கள் எதை செய்தாலும் இப்படியே நினைத்து கொள்ளுங்கள் ஏனென்றால் அவர் நம்மை சிருஷ்டித்து விட்டார்......
தேவனை அறிந்தவர்களாய் இராமல்
தேவனுடைய இருதயத்தை அறிந்தவர்களாய் இருங்கள்
அதாவது என் தாயை எனக்கு தெரியும் என்பதை விட என் தாயின் இருதயத்தை பற்றி எனக்கு தெரியும் என்பது தான் அதன் பொருள்.
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 17th of October 2012 08:10:13 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)