இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விசுவாசிகள் மருந்து சாப்பிடக்கூடாதா?


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
விசுவாசிகள் மருந்து சாப்பிடக்கூடாதா?
Permalink  
 


 

விசுவாசிகள் மருந்து சாப்பிடக்கூடாதா?


''விசுவாசிகள் மருந்து சாப்பிடக்கூடாது'' என்ற உபதேசமானது வேதத்திலெங்கும் கிடையாது. வேதாகமத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட போதனை இது.

நல்ல மருந்துகள் பல மூலிகைகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. அவை நமது ஆரோக்கியத்திற் கும் பெலத்திற்குமென்று தந்தவர் தேவனே(ஆதி. 1:29). தூதாயீம் பழத்தைச் சாப்பிட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புக்கூடுமென நம்பப்பட்டு வந்ததால், ராகேல் லேயாளிடம் அதைக் கேட்டாள்(ஆதி. 30:14). தேவன் எசேக்கியா அரசனின் பாவங்களை மன்னித்து, வாழ் நாளைக் கூட்டுவதாக வாக்களித்த பின்னர், அவன் குணமடைய மருத்துவ உதவி கொடுக்கச் சொன்னது ஏசாயா தீர்க்கத்தரிசிதான்(ஏசா. 38:5,17,21).

நோயுற்றோருக்குச் செய்யப்படும் மருத்துவப் பணியை இயேசு வரவேற்றார்(மத். 9:12). குற்றுயிராய் இருந்தவனின் காயங்களில் நல்ல சமாரியன் எண்ணெ யும் திராட்சரசமும் ஊற்றி கட்டுப்போட்டானே என்றார். (லூக்கா10:34). விசுவாசிகளுக்கும் ஊழியருக்கும் கனிவுடன் மருத்துவ உதவி செய்ததால் அல்லவோ லூக்காவை 'பிரியமான" வைத்தியன் என்று அழைத்த னர்(கொலோ. 4:14). தீமோத்தேயுவின் தீராத வயிற்று கோளாறுக்குக் கொஞ்சம் திராட்சைரசம் பருகும்படி பவுல் பக்குவமாய்ச் சொன்னான்(1தீமோ. 5:23). ''பூசி" என்றிருப்பது யாக்கோபு 5:14ல் பொதுவாக வியாதிக் காரர் உடலில் எண்ணெய் தேய்ப்பது அல்லது தடவுவதைக் குறிக்கும். (Aleipho என்ற மூலபதத்தின் பொருள் இதுவே). அதேவேளையில் எண்ணெயானது தேவனது வல்லமையின் பிரசன்னத்தையும் குறிப்பதா கும். எசேக்கியேலும் யோவானும் தங்கள் தரிசனங்க ளில் ஆரோக்கியத்தின் 'இலைகளை" கண்டார்கள் (எசே. 47:12. வெளி. 22:2).

''மருத்துவரை மட்டும்" தேடினதுதான் ஆசா செய்தத்தவறு (2நாளா. 16:12). சிகிச்சைக்காக தனது ஆஸ்திகளை செலவழித்துவிட்ட உதிரப்போக்குள்ள அப்பெண்ணை இயேசு கடிந்துகொள்ளவில்லை. மாறாக அவளை உற்சாகப்படுத்திக் கனிவுடன் குணமாக்கினார் (லூக். 8:43-48). மருத்துவத்துறையைத் தோற்கடிக்கும் எத்தனையோ வியாதிகள் இன்றும் உண்டு. அவைகளுக்கு அற்புதம் ஒன்றே வழி.

மருந்து சாப்பிட்டுக் குணமானால் கர்த்தருக்கு மகிமை எங்கே என சிலர் விவாதிக்கலாம். அது தவறு. நமது கைகளால் வேலை செய்கிறோம்@ அலுவலகம் நமக்குச் சம்பளம் கொடுக்கிறது(2தெச. 3:10-12). எனினும் நாம் அன்றன்றுள்ள அப்பத்திற்காக நமது தேவனை நன்றியுடன் துதித்து, அவரை யேகோவா-யீரே எனப் போற்றுவதில்லையோ? அப்படியே, மருத்துவர் நமது காயத்தைக் கட்டலாம்@ குணமாக்கு பவரோ தேவன் தான். ஏனெனில் அவரே யேகோவா-ரப்பா! (யாத். 15:26).

என்ன வியாதியானாலும் மருந்தே தொடாத விசுவாச சகோதர சகோதரிகள் உண்டு. இது உண்மையாகவே பெரிய விசுவாசம் தான். ஆனால் இதை மற்றவர்மீது திணிக்கக்கூடாது. ''உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன் மட்டும் இருக்கட்டும்"(ரோமர் 14:22). எல்லாருடைய விசுவாச ''அளவும்" ஒன்று போலிராது(ரோமர் 12:3). ஆயினும் தங்கள் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதத்தடுப்பு மருந்து கொடுக்காத பெற்றோர் தமது கடமையில் தவறுகின்றனர். நான் ஒருபோதும் மருந்தே எடுப்பதில்லை என்று எவரும் தம்பட்டமடித்து திரிய வேண்டியதில்லை. சிலவேளைகளில் பின்நாட்களில் மருந்தெடுக்கும் சூழ்நிலைக்குட்படும்போது இவர்கள் குற்றவுணர்வுடன் வாழ்வார்கள்.

பிரசங்கிமார்கள், போதகர்கள் மருத்துவரிடம் செல்லத் தயங்கி, மனிதருக்கு அதை மறைக்கத் தேவையில்லை. பிரசங்கிகளும் சாதாரண மனிதர்கள் தான்(அப். 14:15. கலா. 4:13). கண்பார்வை மங்கினால் ஜெபத்துடன் கண் டாக்டரிடம் செல்லுங்கள். அவர் உங்களுக்கு கண்ணாடி தருவார். வேதத்தைச் சிரமமின்றி வாசிக்கலாம்! பல்வலிக்கு ஜெபத்துடன் பல் டாக்டரிடம் செல்லுங்கள். அவர் சொத்தைப் பல்லைத் தட்டுவார். செயற்கைப் பல்லையும் கட்டுவார். வலியில்லாமல் பிரசங்கிக்கலாம்! மருத்துவர் தேவன் அருளிய ஈவாம்(எரே. 8:22).



-- Edited by t dinesh on Saturday 27th of October 2012 11:31:37 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மிகவும் அருமையான ஒரு பயனுள்ள கட்டுரை. "நோய்க்கு மருந்து எடுத்துகொள்ளும்" இந்த விஷயத்தில் அனேக விசுவாசிகளுக்கு குழப்பம் இருக்கலாம் ஆனால் அதற்க்கான பதிலை இதற்க்கு மேல் விளக்கமாக யாரும் எழுத முடியாது.  
.
ஆகினும் எனது சார்பில் இருந்து நான் சொல்லும் செய்தி என்னவெனில் ஒரு மனிதனுக்கு "நோய் வர முக்கிய காரணம் தேவே வார்த்தைகளை மீறுவதும்  பாவமுமே" 
.
உபாகமம் 28:15. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில்,
22 கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
 .
யோவான் 5:6. படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
14 அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
,
இவ்வாறு பாவத்தின் மூலம் வரும் வியாதிகளுக்கு அதற்க்கான தண்டனையை அனுபவிப்பதன் மூலம் ஒரு முடிவை தேவன் வைத்திருக்கிறார். அந்த முடிவு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்  மருந்தின் மூலமாகவோ அல்லது இல்லாமலோ எவ்வாறு வேண்டுமானாலும் வரலாம்.
.
பணம் செலவு பண்ணவேண்டும் என்று தீர்மானம் இருக்கும் பட்சத்தில் (அதாவது ஒருவருடைய  பாவமானது பணம் சம்பந்தமானதாக ஏமாற்றுதல்/திருடுதல்/லஞ்சம்  போன்றதாக  இருந்தால்) அதற்க்கு தேவன் நிர்ணயித்த பணம் செலவழித்து முடியும்போது அந்த நோய் தீரும்
.
பாடு அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானம் இருக்கும் பச்சத்தில் (அதாவது ஒருவருடைய பாவம் பிறரை பாடுகளுக்கு உட்படுத்தினால் மன வேதனையை கொடுத்தால்) அதற்கேற்ற பாடு அனுபவித்த பிறகு தீரும்.
.
இரண்டும் இல்லாமல் ஒருவர் செய்த பாவம் தேவனுக்கு விரோதமாக  இருக்கும் பட்சத்தில் அதை உணர்ந்து சரிசெய்யும் வரை அந்த நோய் தீருவதில்லை.  
இதை எல்லாம் தேவன் செய்வது நமது நன்மைக்கே. 
.
மேலேயுள்ள எந்த காரணமாக இருந்தாலும்,  எத்தனை முறை மருந்து எடுத்துகொண்டாலும் தேவ பிள்ளைகளுக்கு  நோய்க்கான  முடிவு நேரமும் தேதியும் தேவன் கையிலேயே இருக்கிறதேயன்றி எந்த மருந்திலும் எந்த டாக்டரிடமும் இல்லை என்பது மாத்திரம் உறுதி. அதே நேரத்தில் கட்டுரையில் சொல்லபட்டுள்ளதுபோல் மருந்து எடுத்து கொள்வதும் வேதத்தின் பார்வையில் ஒரு தவறான செயல் என்று கூற முடியாது   
. .    
(இது எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதியது)
 


-- Edited by SUNDAR on Saturday 20th of October 2012 04:17:39 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

அப்பழுக்கு இல்லாத உண்மை



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard