இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தன்னை போல பிறரை நேசிக்க மறுக்கும் சில கிறிஸ்த்தவர்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தன்னை போல பிறரை நேசிக்க மறுக்கும் சில கிறிஸ்த்தவர்கள்!
Permalink  
 


கடந்த நாளில் பகல் நேரம் முழுவதும் நல்ல வெயில் காய,  இரவு நேரத்தில் திடீர் என்று வேகமாக மழை வந்துவிட்டது. வீட்டில் அமர்ந்திருந்த நானும் எனது மனைவியும்  வேகவேகமாக  வெளியில் ஓடிவந்து காய போட்டிருந்த துணிகளை எடுத்தோம். எங்கள் துணிகளை எல்லாம் எடுத்துவிட்டு நான் அந்த பக்கம் பார்த்தபோது அடுத்த வீட்டின் முன்னால் காயப்போட்டிருந்த துணிகள் மழையில் நனைத்தது எனக்கு தெரிந்தது. அவர்கள் வீட்டை எட்டி பார்த்தேன் அங்கு கதவு பூட்டியிருந்தது ஆட்கள் இல்லை. அந்த துணிகளை எடுத்து   மழை  நீர் எட்டாத பக்கத்து கொடியில்  போடலாம் என்று எண்ணி பக்கத்தில் போய் பார்த்தல் அந்த துணிகள் எல்லாமே பக்கத்து வீட்டு சகோதரியின் நைட்டி மற்றும் பெண்களின் துணிகளாக இருந்தது. அதை நாம் எடுப்பது முறையல்ல என்று எண்ணி எனது மனைவியை  அழைத்து  "மழையில் நனையும் அந்த துணியை எடுத்து வேறு இடத்தில் போட்டுவிடு" என்று சொன்னதுதான் தாமதம் அவளுக்கு வந்ததே கோபம்  "உருக்கு உழைக்க போங்க அதுதானே உங்களுக்கு முக்கியம், எந்த துணியும் எப்படியும் போகட்டும் நீங்கள் உள்ளே வாருங்கள்" என்று கத்திவிட்டு போனதோடு சிறிது நேரம் என்னை திட்டியும் தீர்ததாள்.
.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை! இந்த சாதாரண காரியத்துக்கு இவள் ஏன்  இவ்வளவு கோபபடுகிறாள்? தன்னுடைய துணி மழையில் நனைத்துவிட கூடாது
என்பதில்அதிகமாக அக்கறை கட்டும் இவள் அடுத்தவர்கள் துணி என்றால் "எப்படியும் போகட்டும் நமக்கு என்ன" என்று விலகிபோக எவ்வாறு முடிகிறது? ஏன்  தன பொருளைபோல் பிறர் பொருளையும் இவர்களால் பார்க்க முடியவில்லை? என்று எண்ணி எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இவ்வளவுக்கும் என் மனைவியும் தேவன்மேல் பற்றுள்ள ஜெபிக்கும் ஒரு நல்ல கிறிஸ்த்தவ பெண்மணிதான்.   
.
ஆண்டவராகிய இயேசு சொல்லிய முக்கிய கட்டளையாகிய  "உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக" என்ற கட்டளை ஒப்புமை இல்லாத மிகப்பெரிய கற்பனை ஆகும்! 
.
மாற்கு 12:31  உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
.
இந்த கற்பனைக்குள் முழு நியாயபிரமாணமும் அடங்கும் என்று வசனம் சொல்கிறது!  
.
கலாத்தியர் 5:14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
 
இந்த கற்பனையை நிறைவேற்றினால் மட்டுமே நீங்கள் நியாய பிரமாணத்தை நிறைவேற்றியதாக கருதப்படும்! ஆனால் இவ்வளவு முக்கியமான இந்த கற்பனையை நமது வாழ்வில் கைகொள்ள சிரத்தை எடுத்து முயற்ச்சிக்காமல் காற்றில் பறக்கவிட்டுவிட்டு "நானும் கிறிஸ்த்தவன்" என்று தம்பட்டம் அடிப்பதில் யாருக்கு என்ன பயன் உண்டாகபோகிறது?   
 


-- Edited by SUNDAR on Wednesday 24th of October 2012 07:11:11 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

சுந்தர் அண்ணா, ஒரு சிறிய காரியத்தை வைத்து ஒரு பெரிய விஷயத்தை கற்பித்து  விடீர்கள். பிரமாதம் .
(ஆனால் மனைவியை போட்டு கொடுத்து விட்டீர்களே? , fun ).

சுந்தர் அண்ணா நான் உங்கள் எழுத்துக்களை ரசிப்பவன் .



-- Edited by t dinesh on Thursday 25th of October 2012 01:24:45 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

t dinesh wrote:

சுந்தர் அண்ணா, ஒரு சிறிய காரியத்தை வைத்து ஒரு பெரிய விஷயத்தை கற்பித்து  விடீர்கள். பிரமாதம் .
(ஆனால் மனைவியை போட்டு கொடுத்து விட்டீர்களே? , fun ).

சுந்தர் அண்ணா நான் உங்கள் எழுத்துக்களை ரசிப்பவன் .

- Edited by t dinesh on Thursday 25th of October 2012 01:24:45 AM


தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே! அதற்காக நான் கர்த்தரை துதிக்கிறேன்!

என்னுடைய இந்த் கருத்தின் மூலம் நாம் கிறிஸ்த்தவர்களை எவ்விதத்திலும் குறைத்து கூறுவதாக  எண்ணிவிட வேண்டாம். 

பொய்யும், புரட்டும், கேடும் கெடுதலும், வஞ்சமும் பொறாமையும், திருட்டும் ஏமாற்றும் தலை விரித்தாடும் இந்த் கடைசி நாட்களில் உலகில் இருக்கும் மற்ற ஜனங்களை பார்க்கிலும் கிறிஸ்த்தவர்கள் பண்புள்ளவர்களாகவும்  அன்புள்ளவர்களாகவும்,  நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்க  தகுதியுள்ளவர்களாகவும், தேவ பயம் உள்ளவர்களாகவும் இருப்பதை நாம் அறியமுடியும்.

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு அடிக்கடி சண்டைகள் மூள்வதை நாம் அறியலாம் இந்நிலையில் அனேக உலக பிரகாரமான ஜனங்கள் இடையேயும்  கிறிஸ்த்தவர்கள் சண்டை போட  மாட்டார்கள், சகிப்பு தன்மை உடையவர்கள் என்ற ஒரு பொதுவான கருத்தை நமது கிறிஸ்த்தவ சகோதரகூட்டம்  நிலைநாட்டி வருவது நம்மக்கு மகிழ்ச்சியையே தருகிறது.

ஆகினும் நாம் இங்கு சொல்லவரும் கருத்து என்னவெனில் ஜீவனுள்ள தேவனின் பிள்ளைகளாக  அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் "சுத்தமாக" இருந்தால் மட்டும்போதாது, "பரிசுத்தமாகவும்" இருக்க முயற்ச்சிக்க வேண்டும் என்பதே!    

I பேதுரு 1:15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.

நீதியுள்ளவராக இருந்தால் மட்டும் போதாது உலக ஜனங்களைவிட அதிக நீதியுள்ளவர்களாக இருப்பது அவசியம்.

 

மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அன்புள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது பிறருக்காக பரிதபிப்பவர்களாகவும் இருக்கவேணும்  என்பதே!   

மத்தேயு 15:32 பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன்

 

அந்த மேன்மையான நிலையை ஒவ்வொரு கிறிஸ்த்தவரும்  எட்டவே அவர்களின் சிறு சிறு குறைகளும்கூட இங்கு சுட்டிகாட்டப்படுகின்றன.

மேலும் நியாயம் விசாரிப்பதிலும் /தவறை கண்டிப்பதிலும்  முகதாட்சண்யம் பார்ப்பது சரியாதல்ல
 
தன சொந்த மகன்கள் செய்த தவரை சரியாக கண்டிக்காத ஏலி என்னும் ஆசாரியனின் கதியும் அவனது  இரண்டு குமாரர்களின் கதிக்யும் நாம் அறிந்ததே!   
 
 
I சாமுவேல் 2: 34. ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள்.
எனவேதான் என் மனைவியாக இருந்தாலும் அவளது தவறை அவளிடம் உணர்த்தியதோடு இங்கும் சுட்டிகாட்டினேன்.
 
அடுத்து, மூன்றாம் மனுஷனுடைய  குறைகளை சுட்டிகாட்டி கருத்துக்களை சொல்வதைவிட, நம்மிடமும் நமது
குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உள்ளக தவறுகளை ஆராய்ந்து அறிந்து  அதன்மூலம் தேவையான கருத்துக்களை சொல்வோமாகில் படிப்போருக்கு நிச்சயம் மன கஸ்டங்கள் உருவாக வாய்ப்பு மிகவும் சொற்பமே!         


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard