இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மோசே மறுத்தும் தேவன் அவனையே அழய்க்க காரண்ம் என்ன?


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
மோசே மறுத்தும் தேவன் அவனையே அழய்க்க காரண்ம் என்ன?
Permalink  
 


என்னை பொறுத்தவரையில் அநேகமாக ஒருவருக்கென்று தேவன் தீட்டி வைத்த திட்டத்தை , அவரை கொண்டுதான் நிறைவேற்ற விரும்புவார். உதாரணமாக யோனா தர்ஷீஷ்க்கு ஓடிப்போனான் ஆனால் தேவன் அவனையே பயன்படுத்துகிறார்.


யோனா 1:3 அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.

எலியா இனிமேல் ஊழியம் செய்ய முடியாது என்று சொனாலும் அவனை அவர் திடப்படுத்தி அனுப்புகிறார்.


I இராஜாக்கள் 19:4 அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,

இதே போல இன்னும் அதிக உதாரணங்கள் உண்டு. ஏன் தேவன் அவர்களை பயன்படுத்துகிறார் என்றால்.
ஒரு மனிதனை கொண்டு தேவன் என்ன திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கிறாரோ அதற்கேற்ற விதமாகவே அவனை படைக்கிறார்.
அதாவது அவனுக்குரிய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு அவனுக்கு என்ன என்ன தாலந்துகள் , திறமைகள் , குணாதிசயங்கள் தேவையோ , அவற்றையெல்லாம் உடையவனாகவே அந்த மனிதனை தேவன் படைப்பார் .
உதாரணமாக
ஒரு மனிதனுக்கு போதிக்கும் ஊழியத்தை தேவன் வைத்து இருந்தால் அவனுக்குள் போதிக்கும் தாலந்து, போதிக்கக் கூடிய குரல் வளம் , வேதத்தை ஆராயக்கூடிய பொறுமை, இவற்றையும் , இவற்றை போல அவ் ஊழியத்துக்கு தேவையான பிற குணாதிசயங்கள் என்பவற்றையும் உள்ளடக்கி அந்த மனிதனை தேவன் படைக்கிறார்.


அக்குனாதிசயங்கள் அவனுக்குள் இருக்கும் . அவனை தேவன் பயன் படுத்த நினைக்கும் போது   பொருத்தமான சூழ்நிலை, பரீட்சை, போன்றவற்றை அவனுக்கு அனுமதித்து புதைந்து கிடக்கும் அந்த தாலந்து ,குணாதிசயம் என்பவற்றை வெளியே கொண்டு வருகிறார்.

மட்டுமல்ல அவனை பயிற்ருவிக்கிறார்.

எல்லா ஊழியக்காரரும் இந்த பயிற்சிக்கூடாக செல்ல வேண்டும் .

தேவன் மோசேயை கிட்டத்தட்ட 40 வருடங்கள் எகிப்திலும் , கிட்டத்தட்ட 40 அவனுடைய மாமனாரின் வீட்டிலும் அவனுக்கு பாடம் புகட்டி அவனை ஒரு தலைவனாக தெரிந்து கொள்கிறார் .

இவ்வளவு ஆயத்தங்களை செய்த பிறகு ஒருவன் ஊழியத்தை புறக்கணித்தால் ஆண்டவருடைய மனம் எவ்வளவு வேதனைப்படும் ?

இந்த விடயத்தில் மோசேயை அவ்வாறு தேவன் பயிற்ருவித்திருக்க  அவன் ஓடிப்போனால் அவன் மூலமாக தேவன் செய்ய நினைத்த காரியம் தடைப்பட்டு விடும் .

அல்லது அந்த காரியம் செய்யப்பட கால தாமதம் ஆகும் .

எனவேதான் அவரவருக்கு நியமித்த வேலையை அவரவரே செய்யவேண்டுமென்று தேவன் எதிர் பார்க்கிறார் .




-- Edited by t dinesh on Thursday 25th of October 2012 02:36:37 AM



-- Edited by t dinesh on Thursday 25th of October 2012 10:45:22 AM



-- Edited by t dinesh on Thursday 25th of October 2012 10:45:51 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

ஐயா எனக்கு ஒரு சந்தேகம் கொஞசம் விளக்கம் தாருங்கல். 

கர்த்தர் முட்செடியில் தரிசனமாகி ஆடு மேய்த்துகொன்டிருந்த  மேசேயிடம் பேசினார். அவனை எகிப்துக்கு அனுப்பி இஸ்ரவேல் ஜனஙகளை மீட்டு கானான் தேசத்துக்கு வழினடத்தி செல்ல அனுப்ப போவதாக கூரினார்.

ஆனால் மோசேயோ கர்த்தரின் வார்த்தயை சற்றும் மதிக்காமல் வேரு யாரையாவது அனுப்பும்படி கர்த்தருக்கு அட்வைஸ் பண்ணுகிறான். ஆகினும் கர்த்தர் அவனையே கட்டாய படுத்தி அனுப்புகிரார்.

கடவுளின் சித்தபடி கீழ்படிந்து செய்ய மறுக்கும் மோசேயை தேவன் தள்ளிவிட்டு வேரு ஒருவரை தேர்வு செய்யாமல், உலகத்தில் வேறு மனுஷர்களே இல்லாததுபோல் அவனையே மீண்டும் மீண்டும் அனுப்ப வேண்டிய காரணம் என்ன?     



__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
RE: மோசே மறுத்தும் தேவன் அவனையே அழய்க்க காரண்ம் என்ன?
Permalink  
 


t dinesh wrote:

என்னை பொறுத்தவரையில் அநேகமாக ஒருவருக்கென்று தேவன் தீட்டி வைத்த திட்டத்தை , அவரை கொண்டுதான் நிறைவேற்ற விரும்புவார்.  r 2012 10:45:22 AM

*******************************************************************************************************


 

ஐயா தஙகளுடைய கருத்துபடி மற்றும் உதாரணஙகள்படி தேவன் தாமே சிலரை சில தாலந்துகளுடன் குரிப்பிட்ட நோக்கத்துக்காக படைக்கிரார் என்றும் ஒருவேளை அவர்கள் தேவனின் சித்தத்துக்கு கீழ்படிய‌ மருத்தாலும் தேவன் அவர்களை விடாமல் திருத்துகிரார் என்றும் எடுத்துகொண்டால். சவுலையும் அவர்தான் ராஜாவாக நியமித்தார் ஆனால் அவன் தவரு செய்தபோதோ அவனை தள்ளீவிட்டு விட்டு தாவீதை தெரிந்துகொண்டாரே ஏன்? 



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
மோசே மறுத்தும் தேவன் அவனையே அழய்க்க காரண்ம் என்ன?
Permalink  
 


JOHNJOSH wrote:

ஐயா தஙகளுடைய கருத்துபடி மற்றும் உதாரணஙகள்படி தேவன் தாமே சிலரை சில தாலந்துகளுடன் குரிப்பிட்ட நோக்கத்துக்காக படைக்கிரார் என்றும் ஒருவேளை அவர்கள் தேவனின் சித்தத்துக்கு கீழ்படிய‌ மருத்தாலும் தேவன் அவர்களை விடாமல் திருத்துகிரார் என்றும் எடுத்துகொண்டால். சவுலையும் அவர்தான் ராஜாவாக நியமித்தார் ஆனால் அவன் தவரு செய்தபோதோ அவனை தள்ளீவிட்டு விட்டு தாவீதை தெரிந்துகொண்டாரே ஏன்? 


 

இதற்கு பதில்  கூறும் முன்பதாக

ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் . தேவன் மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பவர். ஆனால் அவர்கள் தொடர்ந்து அப்படி தவறு செய்யும் போது அவர்களை தண்டிக்க வேண்டியது கடவுளின் சிறந்த பண்பு.

உதாரணமாக பார்வோனின் கதையை அறிந்திருப்பீர்கள் .

தேவன் மோசேயை அனுப்பி பார்வோனோடு முதல் தடவையாக பேசும் போது . அவருக்கு அவன் கீழ்ப்படியவில்லை.

யாத்திராகமம்5-2.   அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?
என்று கேட்கிறான் .

அவன் தெரியாமல் கேட்ட படியால் கடவுள் அதை மன்னித்து ஒரு அற்புதத்தை  செய்து காட்டி தான் யாரென நிரூபிக்கிறார். 

யாத்திராகமம்7-10. மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.

அதன் பின்பதாக மீண்டும் மோசேயையும் ஆரோனையும்  அனுப்பிய போதும் அவன்  கீழ்ப்படியவில்லை. இருந்தாலும் தேவன் பல தடவைகள் அவனுக்கு மன்னிப்பு கொடுத்தார். அதையும் அவன் ஏற்றுக்கொள்ளாத படியினால் தேவனே அவனுடைய இருதயத்தை கடினப்படுத்தி அவனை தண்டிக்கிறார்.

அதை பின்வரும் வசனங்கள் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள்.

யாத்திராகமம்-7;22. பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
யாத்திராகமம்-8;15தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்;
யாத்திராகமம்-8;32. பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.


இவ்வளவு தடவையும் அவன் தன் இருதயத்தை கடினப்படுத்தினான். 

பின்பு நடந்தது என்ன ?

தேவனே அவனுடைய இருதயத்தை கடினப்படுத்த தொடங்குகிறார்.


யாத்திராகமம்-9;12கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

யாத்திராகமம்-10;20. கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்;

யாத்திராகமம்-1௦;27. கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்;

யாத்திராகமம்-14;8. கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்;

இதை நான் சம்பந்தம் இல்லாமல் எழுதுகிறேன்  என்று நினைக்க வேண்டாம் .

ஏன் இதை எழுதினேன் என்றால். நம்முடைய தேவனின் குணாதிசயம் இப்படிப்பட்டதுதான் என்பதை எடுத்து  காட்டவே .

அதாவது ஒருவன் பாவம் செய்தால் அவனுக்கு மன்னிப்பு கொடுத்து தருணங்கள் கொடுப்பது நம் தேவனின் பாங்கு.

தொடர்ந்தும் பாவம் செய்யும் போது அவனை அவர் தண்டிக்கிறார்.

ஆனால் அவர் மிகவும் கண்டிப்பாக புறக்கணிக்கிற அதாவது செய்ய வேண்டாம் என்று விலக்குகிற பாவத்தை செய்தால்  உடனே தண்டனையை தீர்மானிப்பதும் அவருடைய பண்புதான் .


இதுதான் சவுலின் விடயத்தில் நடந்தது.

 

 

சவுலின் விடயத்தில் நடந்தது என்னவென்றால் .

இவ்வளவு வசனங்களையும்  நிதானமாய் வாசித்துப் பாருங்கள்

II தீமோத்தேயு 3:4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

II பேதுரு 2:10 விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.

ஆதியாகமம் 34:25 மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

யாத்திராகமம் 21:14 ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டு போய்க் கொலைசெய்யவேண்டும்.

எண்ணாகமம் 15:30 அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

எஸ்தர் 7:5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்

நீதிமொழிகள் 14:16 ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.

பிரசங்கி 5:2 தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.



இவ்வளவு வசனங்களையும்  நிதானமாய் வாசித்துப்பார்த்தால் துணிகரம் என்பது தேவனால் மிகவும் கண்டிக்கப்படுகிற பாவம் என்பதை அறிய முடிகிறது.

அதனால் தான் தாவீது

சங்கீதம் 19:13 துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.

அப்படியானால் துணிகரமான பாவங்களால் பெரும் பாதகம் உண்டாகும் என்பது திண்ணம்

அப்படியே இந்த வசனத்தை  வாசியுங்கள்.

I சாமுவேல்-13;11. நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர்வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே,

12. கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.

அவனுடைய துணிகரத்தை கர்த்தர் விரும்பவில்லை.

மேலும்

பிரசங்கி 5:2 தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.

இந்த வசனத்தின் படி தேவசமுகத்தில் துணிகரமாய் வாயினால் பேசுவதே தேவன் விரும்பாததாய் இருக்க
சவுல் தேவசமுகத்தில் துணிகரமாய் ஒரு செயலை செய்ததை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதுவும் அவன் எப்படிப்பட்ட காரியத்தை  செய்தான்? ஆசாரியர்கள்  மாத்திரமே செய்ய வேண்டும் என்று தேவன் கட்டளையிட்ட பலி செலுத்தும் ஊழியத்தை அவன் செய்தான்.

இதிலிருந்து இன்னொரு சத்தியமும் தெளிவாகின்றது.

நான் முன்பு சொன்னது போல அவரவருக்கு நியமிக்கப்பட்ட ஊழியத்தை அவரவர் நிறைவேற்றினால் எந்தப் பிரச்சினையும் இல்லை.


ஆசாரியனுடைய ஊழியத்தை ஆசாரியனும் ராஜாவுடைய ஊழியத்தை ராஜாவும் செய்திருந்தால் எந்தப்பிரச்சனையும் வந்திருக்காது


மோசேயை தேவன் அழைக்கும்  போது அவன் முடியாதென்று சொன்னான். 

அவன் தேவனின் வார்த்தையை மதிக்காததால் அப்படி சொல்லவில்லை. மாறாக அவன் பயந்தாலும் , தன்னை தகுதியற்றவன் என நினைத்ததாலும் தான் அப்படி சொல்லியிருப்பான். என்பது என்னுடைய கருத்து.

 

இன்னொரு காரியத்தையும் சொல்லி விடுகிறேன் .

I சாமுவேல் 17:28 அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.

இவ்வசனத்தில் தாவீது துணிகரம் கொண்டதாக கூறப்படுகிறது . அது உண்மைதான் . அவன் எதைக்குறித்து துணிகரம் கொண்டான்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நான் கூறியது வெறும் என்னுடைய புரிதல் மட்டுமே . இது தவறாக இருக்க வாய்ப்பு இருக்கலாம். இதைக்குறித்து விவரமாக அறிந்த மற்ற சகோதரர்கள் தயவு செய்து பதிவிடுங்கள்.


என்னுடைய தளம் http:www.kristhavan.blogspot.com

 



-- Edited by t dinesh on Saturday 27th of October 2012 01:10:03 AM



-- Edited by t dinesh on Saturday 27th of October 2012 01:11:48 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
RE: மோசே மறுத்தும் தேவன் அவனையே அழய்க்க காரண்ம் என்ன?
Permalink  
 


t dinesh wrote

நான் கூறியது வெறும் என்னுடைய புரிதல் மட்டுமே . இது தவறாக இருக்க வாய்ப்பு இருக்கலாம். இதைக்குறித்து விவரமாக அறிந்த மற்ற சகோதரர்கள் தயவு செய்து பதிவிடுங்கள்.

 


நல்ல புரியும்படியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஐயா  மிகவும் நந்ரி.

ஒரு செயல் பாவம் என்று தெரிந்தபின்னரும் அதை துணித்து  செய்வது கடவுளின்
பார்வையில் மன்னிக்க முடியாத மிகப்பெரிய தவறு என்பதை எல்லோரும் உணர வேண்டும். அதனாலேயே சவுல் தண்டிக்கபடடான் என்று புரிகிறது.  


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு.சகோதரர்.தினேஷ் அவர்களே,

தங்கள் தளம் அருமையாகவும்,பிரியோஜனமானதாகவும்  வடிவமைக்கப்பட்டுள்ளது உள்ளது.வாழ்த்துக்கள்!!!
 கர்த்தர் தாமே தங்களின் இணைய ஊழியங்களை ஆசிர்வதிப்பாராக!!

பெரியவரான தேவனுக்கே மகிமை!!


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

மிக்க நன்றி ஜான் அண்ணா . தங்கள் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி.

இயேசுவுக்கே மகிமை.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard