இவ்வாறு வானத்தில் இருந்து வீழ்ந்து அகாதமான பாதாளத்தில் தள்ளுண்டு போன சாத்தான், ஆதாம் ஏவாளுக்காக தேவன் படைத்த ஏதேனுக்குள் எப்படி வந்தான்?
(யாராவது பதில் தருவார்கள் என்று நானும் எதிர்பார்த்தேன் இதுவரை இல்லை ஆகையால் எனது தியான கருத்துக்களை பதிவிடுகிறேன்)
சாத்தான் என்பவன் தேவனால் உருவாக்கபட்ட ஓரு மகிமையான தேவதூதன் அவன் "காப்பாற்றுகிற கேருபாய்" வானத்தில் இருந்தவன் என்பதையும் நாம் அறிவோம்! அவனது வீழ்ச்சி பற்றியும் இரண்டு நிலைகளை வேதம் நமக்கு சொல்கிறது.
விடிவெள்ளியின் முதல் வீழ்ச்சி - வானத்தில் இருந்து தரையில் விழுதல்!
இந்த விடிவெள்ளியின் வீழ்ச்சி பற்றி ஏசாயா கீழ்கண்ட வசனத்தில் குறிப்பிடுகிறார்.
ஏசாயா 14:12அதிகாலையின்மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
இவ்வாறு தரையில் விழ வெட்டபட்டதற்க்கு அவன் செய்த தவறு அல்லது தேவனுக்கு எதிரான அவனுடைய நினைவுகள் என்னவென்பதை வேதம் தெளிவாக சொல்கிறது.
13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
தேவனால் உருவாக்கபட்டு வானத்தில் இருந்த இவன், பெருமை மற்றும் தனது மேட்டிமையான எண்ணங்களான "தேவனுக்கு மேலாங்க தன்னை உயர்த்த நினைத்து" முதலில் தரையில் விழ வெட்டபட்டு போனான்!
இவன் வானத்தில் இருந்து வீழ்ந்த இந்த சம்பவத்தை பார்த்த நம் இயேசுவானவர் இவ்வாறு சொல்கிறார்:
வானத்தில் இருந்து தரையில் விழ வெட்டப்படுதல் சாத்தானின் வீழ்ச்சியின் முதல் பகுதி.
இரண்டாம் வீழ்ச்சி - தரையில் இருந்து பாதாளத்தில் தள்ளுண்டு போதல்:
இவ்வாறு வானத்தில் இருந்து தரையில் விழ வெட்டபட்ட இந்த அதிகாலையின் மகன் உடனே நியாயம் தீர்க்கப்படவில்லை. தரையில் வந்தபின் அவன் இருந்த இடம்தான் எதேன்! இதை குறித்து எசேக்கியேல் சொல்கிறார்:
ஏதேனில் வீழ்ந்த போதுகூட மகன் மகிமையில் குறைச்சல் இல்லாமலேயே இருந்தான்! ஏதேனில் சாத்தனின் மகிமை குறித்து வசனம் இவ்வாறு சொல்கிறது.
எசேக்கியேல் 28:13கூட பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு எதேனில் இருக்கையில் அவன் செய்த பாவ காரியம் என்னவென்பதை கீழ்கண்ட வசனம் சொல்கிறது
எசேக்கியேல் 28:16உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
எனவே அங்கிருந்து பாதாளத்துக்கு தள்ளபட்டு போனான் என்பது எனது கருத்து.
ஏசாயா 14:11 உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
தேவனின் மகிமையில் இருக்கும்வரை நன்றாகவே இருந்த சாத்தான், தேவ மகிமையை இழந்தபோது தேவனுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தான்.
அவன் பாதாளத்தில் தள்ளுண்ட போதிலும்,
யோபு 2:1பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.
என்ற வசனத்தை பார்க்கும்போது, சாத்தான் கர்த்தருடைய சந்நிதி வரை சென்று வரும் வல்லமை பெற்றிருந்தான் என்பதை அறியமுடிகிறது. அதாவது அவன் பாதாளத்தில் தள்ளுண்டு, பாதாளமே அவனது இருப்பிடமானாலும், அவனுக்கு பூமி மற்றும் கர்த்தருடைய சந்நிதிவரை, அவன் தள்ளப்படும் முன்னர் இருந்த இடம்வரை சென்றுவர அவனுக்கு அனுமதி இருந்தது என்பதையே வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
(இந்த விளக்கங்கள் வசனத்தின் அடிப்படையிலான எனது சொந்த கருத்துக்கள். வேறு விளக்கங்கள் அறிந்தவர்கள் பதிவிடலாம்)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)