கிறிஸ்த்தவ வாழ்க்கை என்பது சுயம் சார்ந்த வாழ்க்கை அல்ல என்பதை நான் மீண்டும் இங்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
இன்றைய உலகில் அனேக கிறிஸ்த்தவர்கள் தங்களின் முழு வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புகொடுக்க மனதில்லாமல் பாதி வாழ்கையை தேவனுக்கு கொடுத்துவிட்டு மீதி முக்கியமான காரியங்களை செய்யும்போது தங்கள் சுயத்தின்படி முடிவெடுத்து செய்கிறார்கள். இப்படி அங்கே பாதி இங்கேபாதி என்று இருந்தால் நம்மை வைத்து தேவனால் ஒன்றும் செய்துவிடமுடியாது.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவரிடம் வீடு வாங்குவது குறித்த விவாதம் வந்தபோது அவரின் நிலைபாடுகள் சற்று தவறாக
இருந்ததால் "கர்த்தரின் சித்தத்தை அறிந்து செய்யுங்கள்" என்று ஆலோசனை கூறினேன். ஆனால் அவரோ இதுபோன்ற காரியத்துக்கு எல்லாம் நாம்தான்
ஏதாவது முயற்சி எடுத்து காரியங்களை முடிக்க முயலவேண்டும் எல்லாவற்றிக்கும் கர்த்தரையே பார்த்துகொண்டு இருக்ககூடாது என்பது போன்ற
நோக்கில் பேசினான்
சங்கீதம் 127:1கர்த்தர்வீட்டைக்கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;
வீடு கட்டுவது வாங்குவது மட்டுமல்ல, திருமணம், தொழில், வியாபாரம் போன்ற இந்த உலக வாழ்க்கை சம்பந்தமான எந்த ஒரு காரியமானாலும் தேவ சித்தபடி செய்வதுதான் ஏற்றது! சிலர் தங்கள் சித்தத்தை தேவனிடம் திணித்து அதை தேவ சித்தமாக ஏற்றுக்கொள்ளும்படி ஜெபிக்கிறார்கள். வேறு சிலரோ "சொந்த வாழ்க்கை தொழில் போன்றவை வேறு ஆன்மீகம் வேறு" என்று கருதுகின்றனர். அது இரண்டுமே முற்றிலும் தவறான ஒரு கருத்து! இந்த் உலகில் நாம் செய்யும் எல்லா காரியங்களுமே தேவனின் பார்வையில்தான் நடக்கிறது வியாபாரத்துக்கு வேறு தேவனும் வாழ்க்கைக்கு வேறு தேவனும் அல்ல! நாம் இவ்வுலகில் செய்யும் எல்லா காரியங்களுமே தேவ நியாயதீப்புக்குட்பட்டதுதான்!
பிரசங்கி 12:14ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலேகொண்டுவருவார்.
எனவே எல்லா செயலையுமே தேவ சித்தத்த்க்கு ஒப்புகொடுத்து செய்தல் அவசியம்! அவ்வாறு எல்லா காரியத்துக்கும் தேவனின் சித்தபடி செய்ய நம்மை ஒப்புகொடுக்கவிடில், தேவன் நம்மை பயன்படுத்தி ஒரு காரியத்தை செய்ய முனையும்போது நாம் நமது சுயத்தை பயன்படுத்தி அதை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறோம் எனவே அங்கு யாருக்கும் பயனில்லாத ஒரு நிலையே ஏற்ப்படும்.
ஆண்டவராகிய இயேசு எப்படி தன பிதாவின் சித்தத்துக்கு தன்னை முழுமையாக ஒப்புகொடுத்து அவரது சித்தத்தை செய்து முடிப்பதையே தனது
போஜனமாக எண்ணி வாழ்ந்தார்
யோவான் 4:34இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
ஆண்டவரின் இந்த வார்த்தையை பாருங்கள் எவ்வளவு மேன்மையாக இருக்கிறது! இவ்வாறு அவர் செயல்பட்டதால்தான் அவர் மூலம் மொத்த மனுகுலத்துக்கே இரட்சிப்பு கிடைத்தது. அதுபோல் நாமும் நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் தேவனின் சித்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
சில நேரங்களில் தேவனின் நடத்துதல்கள் நமக்கு புரியாமலும் அதனால் நமக்கும் மற்றவர்களுக்கும் எந்த பயனும் இல்லாதது போலவும் நமக்கு மிகுந்த துன்பத்தை தருவது போலவும் இருக்கலாம் ஆனால் அதினிமித்தம் நாம் சோர்ந்துபோக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எனினும் ஒன்றே ஒன்றை மட்டும் நாம் கருத்தில் கொள்வது அவசியம்! அதாவது நாம் சுயத்தில் நடக்கும்போது அதனால் நமக்கு என்ன பயன் என்பதைபற்றி மட்டுமே சிந்திக்கிறோம் ஆனால் நம்மை தேவன் கையில் ஒப்புகொடுத்து தேவன் அவரை நடத்தும்போது அவரை சில சிரமங்களுக்குள் நடத்தியாவது அநேகருக்கு பயனுள்ள பாத்திரமாக
அவரை மாற்றவே பிரியப்படுகிறார். எனவே சுயநலத்தையே நோக்கமாக கொண்டவரை தேவன் எந்த ஒரு காரியத்துக்கும் தேர்ந்தெடுப்பது இல்லை!
.
இந்த கருத்துக்கு ஆதாரமாக ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் முழுமையாக இயேசுவின் கரத்தில் கொடுக்கபட்டபோது அது ஐயாயிரம் பேருக்கு பசி தீர்க்கும் ஆகாரம்ஆனதை நினைவு கூறலாம்
.
அதேபோல் யோசேப்பின் வாழ்வில் தேவ சித்தத்தின்படி அவன் குழியில் தள்ளப்படும்போதும் எகித்துக்கு அடிமையாக போகும்போதும் அனேக கஷ்டங்கள் நேரிட்டிருக்கலாம் ஆனால் அதை அவன் பொறுமையாகவே சகித்தான் இறுதியில் அவன் செய்யாத குற்றத்துக்கு சிறைத்தண்டனை பெற்றபோதும் பெரிதாக
அலட்டிக்கொள்ளவில்லை ஆனால் இறுதியில் அந்த நடத்துதல்கள் அவனுக்கும் அவன் சகோதரர்களுக்கு மட்டுமல்ல முழு எகிப்த்தியருக்குமகூட பயனுள்ளதாக அமைந்தது.
"தேவனின் சித்தம்" என்பது எதோ ஒருவரை மையமாக கொண்டிருப்பதுபோல் இருந்தாலும், அதனால் உண்டாகும் பயன்பட்டு என்பது அனேக கூட்டத்தாருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நிலையிலேயே அமையும்! எனவே அன்பானவர்களே, உங்களை மட்டும் அல்ல உங்கள் உடமைகள் மற்றும் செல்வங்கள் எல்லாவற்றையும் தேவ சித்தத்துக்கு ஒப்புகொடுங்கள். அதை தேவன் அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றி தருவார்!
-- Edited by SUNDAR on Friday 9th of November 2012 03:27:17 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று ஆராய்ச்சி பண்ணும் காலம் இதுவல்ல நண்பரே. அவர் எப்படி வாழ்ந்தாலும் , அவர் ஒரு போதகராய் இருந்தாலும் அவர் போதிக்கும் வார்த்தையின் மூலம் ஆவியானவர் உங்களோடு பேசினால் அதற்கு கீழ்ப்படியுங்கள்.
II இராஜாக்கள்-5:2. சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டுவந்திருந்தார்கள்;அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். 3. அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.
இந்த அடிமைப் பெண்ணின் வார்த்தையை கேட்டு நாகமான் கீழ்ப்படிந்ததால் தான் அவன் சுகமானான்.
ஆதியாகமம்-9:21. அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்
நோவா வெள்ளத்துக்கு முன்னரும் குடிகாரனாகத்தான் இருந்திருப்பான் .அவன் உலகம் அழியப் போகிறது , மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்த போது, ''இந்த குடிகாரனுடைய கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்''. ''குடிகாரனோடு கடவுள் பேசுவாரா?'' என நினைத்து அந்த காலத்தில் ஜனங்கள் அவன் பிரசங்கித்ததை கேட்காமல் போனதால் தான் அவர்கள் அழிந்து போனார்கள்.
அது மட்டுமல்ல..
எண்ணாகமம்- 22 :28. உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது. கர்த்தரின் வார்த்தையை மற்றவர்களுக்கு சொல்லும் தீர்க்கதரிசிக்கு அவனது மதியீனத்தை தெரியப்படுத்த கர்த்தர் கழுதையை கொண்டு பேசினார்,.
எனவே நண்பரே பாஸ்டர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா? என்று ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
உங்களோடு பேச கர்த்தர் ஒரு கழுதையையே பயன்படுத்த வல்லவர். அது கழுதை தானே என்று நினைத்து கீழ்ப்படியாமல் இருந்துவிடாதீர்கள்.
மற்றவர்கள் தேவ சித்தத்துக்கு ஒப்புகொடுத்து வாழ்கிறார்களா என பார்ப்பது நம் கடமையல்ல. ''
நாம் தேவ சித்தபடி வாழ்கிறோமா என்பதை அறிந்து கொள்ள ஏதாவது வழி இருகிறதா?'' என சுந்தர் அண்ணா விடம் கேளுங்கள்.
-- Edited by t dinesh on Wednesday 14th of November 2012 12:45:58 AM
-- Edited by t dinesh on Wednesday 14th of November 2012 12:48:39 AM
உண்மையில் நான் தேவ சித்தத்துக்கு என்னை ஒப்புகொடுத்து வாழ்கிரேனா என்பதை எப்படி அறிந்துகொள்ல முடியும் என்பதே எனது கேள்வி.
தேவ சித்தத்துக்கு ஒப்புகொடுத்து வாழ்வது என்பதற்கு இயேசுவின் கீழ்கண்ட ஜெபமே நமக்கு முன்மாதிரி!
லூக்கா 22:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்
மிக கடினமான யாரும் விரும்பாத சிலுவையின் பாதையில் கடந்து செல்லவேண்டியநிலை ஏற்ப்பட்ட போதும்கூட அந்த பாத்திரத்தை தன்னைவிட்டு நீங்கும்படி செய்யும் என்று ஜெபித்த இயேசு "ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று சொல்லி ஜெபித்தார்.
அதுபோல் நாம் எந்த கடினமான பாதையில் பயணம் செய்யும்போதும் அல்லது பிரச்சனைகள் துன்பங்கள் போராட்டங்கள் பற்றாக்குறைகள் இவற்றால் கடினமான பாடுகளுக்குள்ளாக கடந்து போகுமநிலையில் கூட: "ஆண்டவரே இந்த துன்பங்கள் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும் ஆகினும் என்னுடைய சித்தப்படி அல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது"
"ஆண்டவரே இந்த பணமோ பொருளோ வேலையோ எனக்கு கிடைக்கும்படி அருள்செய்யும் ஆகினும் என்னுடைய சித்தப்படி அல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது" என்பதுபோல் எந்த ஒரு காரியத்தை செய்ய பிரயாசம்
எடுக்கும்போதும் ஆண்டவர் கையில் நமது நிலைமை தெரிவித்து அவர் சித்தப்படி நடக்க ஒப்புகொடுத்து உமக்கு சித்தம் இல்லை என்றல் எனக்கு எத்தனை ஆதாயம் கிடைத்தாலும் அது தேவையில்லை அதை தடுத்துவிடும்!
என் பணம் பிரயாசம் எல்லாம் போனாலும் பரவாயில்லை என்று முழு மனதோடு சொல்லி ஜெபிக்கும் ஜெபத்தோடு காரியங்களை செய்யும் மனபக்குவத்துடன் நடக்க முடியும் என்றால் அதுவே தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புகொடுத்து வாழும் நிலையாக நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)