அருமையான தள சகோதர/ சகோதரிகளே அன்பர்களே நண்பர்களே, சமீபத்தில் நமது தள சகோதரரான தினேஷ் அவர்கள், முகமது நபி அவர்கள் சம்பந்தபட்ட ஹதீஸ் ஆதாரத்தோடு இருந்த கருத்து ஒன்றை இணைய தளத்தில்இருந்து இருந்து எடுத்து பதிவிட்டார். ஆனால் அந்த பதிவில் உண்மை இல்லை என்று நண்பர் "TAMILAN" அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, கிறிஸ்த்தவம் கருத்துக்கள் குறித்த சில மறுப்புகளையும் தெரிவித்து, அது சம்பந்தமான உண்மைகளை அறிவதற்கு விவாதம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விவாதம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
.
உண்மையில் சொல்லபோனால் நமக்கு இஸ்லாம் கருத்துக்கள் குறித்த போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நான் இந்த விவாத கருத்துக்களில் அதிகம் தலையிட முடியாது. ஆகினும் கிறித்துவம் குறித்த கருத்துக்கள் விவாதிக்கபட்டால் அங்கு எனது கருத்தை தெரிவிப்பேன்.
.
தள நிர்வாகி என்றமுறையில் அநாகரீகமான பதிவுகளை அல்லது மற்றவர்களுக்கு இடரலை உண்டாக்கும் பதிவுகளை இங்கு அனுமதிக்க முடியாது. மற்றபடி எந்தெந்த கருத்துக்கள் குறித்து விவாதிக்கலாம் அது குறித்த விதிமுறைகள் என்னென்ன என்பது போன்ற எல்லாவற்றையும் விவாதிப்பவர்களே இந்த திரியில் நிர்ணயித்து கொள்ளுங்கள்.
.
என்னுடைய வலியுறுத்துதல் என்னவெனில் திரு குர்ரான் மற்றும் ஹதீஸ்களை படித்துள்ள கிறிஸ்த்தவ சகோதரர்கள் இருந்தால் மட்டுமே அதிலுள்ள கருத்துக்கள் பற்றி சரியாக விவாதிக்க இயலும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் "கிறிஸ்த்தவம்" குறித்து நண்பர் TAMILAN முன்வைக்கும் கருத்துக்களுக்கு மட்டும் விளக்கம் கொடுத்தல் நலம் என்று கருதுகிறேன்.
.
சமாதானத்தின் தேவன்தாமே நம் அனைவரோடும் கூட இருந்து விவாதத்தை வழிநடத்துவாராக.