இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தவர்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தவர்கள்!
Permalink  
 


கடந்த நாளில் வேதத்தை தியானிக்கும் போது  இந்த நாதாப் மற்றும் அபியூ  பற்றி வாசிக்க நேர்ந்தது. பரிசுத்தமான ஆசாரியர்களின் பிரதிஷ்டை நாளில்  ஆரோனின் இந்த இரண்டு குமாரர்களும் கர்த்தர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதிக்குள் கொண்டுவந்தத்நிமித்தம் மாண்டு போனார்கள்.
.
இந்த நடபடிகள் எனக்கு ஒரு  முக்கிய பாடத்தை பயிற்ருவித்ததாலும் அது பலருக்கு பயன்படும் என்பதாலும் நாம் சற்று ஆழமாக ஆராய்தல் அவசியம் என்று கருதுகிறேன்.
.
பொதுவாக அக்கினி என்பது தேவனுடைய மகிமைக்கு ஒப்பாக வேத புத்தகத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

யாத்திராகமம் 24:17 மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
எசேக்கியேல் 1:27. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன் 28 மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது;
.
இவ்வாரு கர்த்தரின் மகிமை என்பது அக்கினிக்கு ஒப்பாக இருக்க ஆசாரியர்களை அபிஷேகம் செய்த அந்த நாளில் கர்த்தருடைய மகிமையான அக்கினி
புறப்பட்டு சர்காங்க தகனபலிகளை எரித்தது. 
.
லேவி 9:24கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; .
.
அந்த மகிமையான அக்கினி கிரியை செய்யும் அந்நேரம்தானே, ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.  2. அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
.
நாதப் மற்றும் அபியூ செய்த காரியம் நமக்கு மிக சாதாரணமாக காரியம்போல் தெரியலாம், கர்த்தரின் உக்கிர கோபம் கடுமையானது போல நமக்கு தெரியலாம். ஆனால் கர்த்தர் இவ்வளவு உக்கிரமாக அவர்களை அக்கினியால் பட்சித்ததால் அந்த காரியத்தில் எதோ மிகப்பெரிய தவறு இருக்கிறது எனபதை நாம் அறிந்து ஆராய்தல் அவசியம். 

"அந்நிய அக்கினி என்பது இங்கு அந்நிய தேவர்களின் மகிமைக்கு ஒப்பாக இருக்கிறது" என்று எடுத்துகொண்டு தியானிப்போம் என்றால் இந்த செயல்பாட்டில் உள்ள விபரீதம் நமக்கு நன்றாகவே புரியும்.
.
எனது தாயார்  ஒரு பாரம்பரிய கிறிஸ்த்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்  நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருக்கும்போது அவர்கள் செய்த அனேக செயல்கள் பாதி கிரிச்த்தவமும் பாதி இந்து செயல்பாடுகளும் கலந்த கலவையாகவே இருக்கும். அதனாலோ என்னவோ எங்கள் குடும்பம் கடுமையான பிரச்சனைக்குள்ளேயே எப்பொழுதும் சிக்கி தவித்தது. துன்பங்களில் இருந்து எங்களால் மீளவே முடியவில்லை.  
.
இன்றும் அனேக கிறிஸ்த்தவ விசுவாசிகள் பாதி கிறிஸ்த்தவ வழி மீதி உலகத்தாரின் வழி என்று குந்தி குந்தி நடப்பதை நாம் அனேக நேரங்களில் கவனிக்கலாம்  
அந்நிய தேவர்களின் வழிகளை பயன்படுத்தும் இடங்களில் கர்த்தரின் கோபம் பற்றி எரிவதைதன பார்க்க முடியுமேயன்றி ஆசீர்வாதத்தை காண முடியாது. இது குறித்து ஆண்டவர் கடுமையாக எச்சரிக்கிறார்! 
     
எரேமியா 10:2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.

இன்று உலகத்தில் இருக்கும் பல மதங்களின் கோட்பாடுகளும் கருத்துக்களும் மிகவும் நல்ல கருத்துக்கள் போலவும் எல்லோருக்கும் பயனுள்ள போதகங்கள் போலவும் இருக்கும். ஆனால் நான் சொல்வது என்னவென்றால் புறஜாதியார் சொல்லும் எந்த ஒரு கருத்துக்கும் மேலான கருத்துக்களை அல்லது வழிமுறைகளை நம் கர்த்தர் வேதத்தில் சொல்லி வைத்திருக்கிறார். அதற்க்கு மேலாக ஒன்றுமே இல்லை! எனவே புரஜாதியின் வழிமுறைகள் நமக்கு தேவையே இல்லை.
.
திருஷ்டி கழித்தல்/ சகுனம் பார்த்தல்/ நாள் பார்த்தல் / ஜாதகம் கணித்தல் / ராசிபலன் பார்த்தல்/ கிளி ஜோஷ்யம/ பார்வை பார்த்தல்/ சுற்றிபோடுதல்/ பூசணிக்காய் தேங்காய் உடைத்தல் /மொட்டை போடுதல் இப்படி எத்தனையோ புரஜாதியார்களின் செயல்பாடுகள் நமது சமூகத்தோடு ஒன்றிபோய் உள்ளது. இந்த செயல்பாடுகள் அப்படியே RC கிறிஸ்த்தவத்தில் உடுருவி பின்னர் புரட்டஸ்டாண்டு சபையையும் ஆட்கொண்டு சில ஆவிக்குரிய கிறிஸ்த்தவர்களையும் பிடித்துள்ளது.  

வேதத்தில் சொல்லபடாத மதசெயல்பாடுகள் எல்லாமே தேவனின் பார்வையில் அந்நிய அக்கிநிகளே!

எந்த ஒரு காரியமானாலும் கிரிஸ்த்தவர்களாகிய நாம் செய்யவேண்டியது "ஜெபம் / ஜெபம் / ஜெபமே!" வேறு எந்த மாம்சபிரகாரமான செயல்பாடுகளும் தேவையில்லை அது அந்நிய அக்கிநியாகவே கருதப்படும்!



-- Edited by SUNDAR on Monday 12th of November 2012 03:33:24 PM



-- Edited by Nesan on Sunday 25th of November 2012 09:19:58 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

SUNDAR :********** 
அந்த மகிமையான அக்கினி கிரியை செய்யும் அந்நேரம்தானே, ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.  2. அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
===============================================================================================================================.
 
ஐயா என்னதான் இருந்தாலும் நாதாபும் மற்ரவரும் செய்த இந்த சிரிய தவறுக்கு அவர்கள் சாகும் அளவுக்கு இவ்வலவு பெரிய தண்டனை மிகவும் அதிகம் போல் எனக்கு தெரிகிரது. இதில் வேரு எதேனும் காரணம் இருக்குமோ?



-- Edited by JOHNJOSH on Thursday 6th of December 2012 08:17:25 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

 

JOHNJOSH

அவர்களே அந்நிய அக்கினி என்று இங்கே கூறப்படுவது அந்நிய தேவர்களின் மகிமை என சுந்தர் அண்ணா விளக்கியுள்ளார். தேவன் கூறியுள்ள வார்த்தையை பாருங்கள்.

ஏசாயா 42:8 நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

ஒருநாளும் தேவன் தன்னுடைய மகிமையை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டார். அவருக்கு போக வேண்டிய மகிமையை வேறோருவருக்கு கொடுப்பதை அவர் வெறுக்கிறார். நம்மேல் வைத்த அன்பினால் தன்னுடைய மகிமையை விட்டு இந்த பூமிக்கு வந்தார் என்பது உண்மைதான். ஆனாலும் அவருடைய மகிமையை அந்நிய தேவர்களுக்கு அவர் விட்டுக்கொடுப்பதில்லை.

இங்கே அவர்கள் கொண்டுவந்த அந்த அக்கினி அந்நிய தேவர்களுக்குரிய மகிமையாக இருந்திருக்கலாம். அதை தேவன் வெறுப்பதால் அப்படி அவர் அவர்களை தண்டித்திருப்பார்; அதையும் விட அவர்கள் தேவனின் மகத்துவங்களை கண்டவர்கள். தேவன் எப்படிப்பட்ட பயங்கரமானவர் என்று அவர்களுக்கு தெரியும் அப்படியிருந்தும் அவர்கள் கொஞ்சமும் பயப்படாமல் அப்படி செய்தார்கள்.அவர்களுடைய துணிகரத்தை தேவன் கண்டிக்கும்படி அப்படி தண்டித்தார். அது மட்டுமல்ல அந்த நாட்கள் நியாயப்பிரமாண காலம்.எபதையும் மறக்கலாகாது.



-- Edited by t dinesh on Monday 10th of December 2012 11:49:00 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard