இறந்த உறவினர்களுக்காக செபித்தால்.அவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்குமா ?
ஆண்டவாகிய இயேசுவை அறிந்து சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்னரும் தேவனுக்கேற்ற சரியான ஒரு வாழ்க்கைநிலை இல்லாமல் பின்மாற்றமாய் வாழ்ந்து மரித்தவர்களுக்கு ஜெபிபதினால் எந்த பயனும் இல்லை! என்பது மாத்திரம் சரியாக எனக்கு தெரியும்!
மற்ற மரித்தவர்களுக்காக ஜெபிப்தினாலும் கூட எந்த பயனும் ஏற்ப்படாது என்றே நான் எண்ணுகிறேன் காரணம் மரிக்காமல் இருக்கும் பாவம் செய்த ஒருவருக்காக செய்யப்படும் வேண்டுதல்களை கேட்டு இறைவன் பல நேரங்களில் அவனை மன்னித்த செய்திகளை வேததில் வாசிக்க முடியும்
ஆனால் மரித்துபோன ஒருவனுக்காக வேண்டுதல் செய்து கேட்கப்பட்டதுபோல் வசனம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. மாறாக மரித்துபோனவனுக்கு பூமியில் நடக்கும் எந்த காரியத்திலும் பஙகில்லை என்றே வசனம் சொல்கிரது
பிரசங்கி: 9:5 மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் 9:6 சூரியனுக்கு கீழே செய்யப்பட்டுவதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை