இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துன்பப்படுத்தியவர்களுக்காக ...


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
துன்பப்படுத்தியவர்களுக்காக ...
Permalink  
 


நண்பர்களே ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்பட்ட வீடியோ காட்சியை நேற்று நான் பார்க்க நேர்ந்தது,
மிகவும் வேதனையாக இருந்தது. என்னால் பார்க்க முடியவில்லை. அந்த கொடுமைக்காரர்கள் மேல் கோபம் எனக்கு ஏற்பட்டது. என்மனதில் ''ஆண்டவர் அவர்களுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்'' என நினைத்தேன். அவர்கள் நரகத்தில் வேதனைப்படுவார்கள் என நினைத்து மனமாறினேன்.

ஆனால் இன்று காலையில் நான் ஜெபித்த போது யேசப்பா என் மனதில் பேச ஆரம்பித்தார். நீ கிறிஸ்தவனாயிருந்தால் அவர்களை மன்னிக்கும் மனம் வேண்டும்.  என்றார்.

அந்த கொடுமைகளை பார்த்தால் மன்னிக்கும் மனம் எங்கே வரப்போகிறது? உண்மைதான்.ஆனால் நாம் செய்த பாவத்தை இயேசு மன்னிக்க வேண்டும் என்று நினைக்கும் நாம் மற்றவர்களின் பாவத்துக்கு தண்டனை தர வேண்டும் என நினைப்பது மிகவும் தவறு. இயேசு தன்னை துன்பப்படுத்தியவர்களை எவ்வளவு அன்பாக மன்னித்தார்.

அவர்களுக்கு மனம் மாற ஒரு தருணத்தை ஆண்டவர் கொடுத்தால் ஒருவேளை அவர்கள் மனம் மாறி இயேசுவுக்காக ரத்த சாட்சியாக மரிக்கவும் கூடும். அவர்களை தாண்டியும் ஆண்டவரே என நீ ஜெபித்தால் நீ ஒரு கிறிஸ்தவன் அல்ல. அவர்களை மனமார மன்னித்து , அவர்களை இரட்சியும் ஆண்டவரே என ஜெபித்தால் நீதான் அவர் விரும்பும் பிள்ளை..

உடனே ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து அவர்களை மன்னியும் ஆண்டவரே என ஜெபித்தேன் . ஆண்டவர் அந்த உணர்வையும் கீழ்ப்படியும் மனதையும் எனக்கு தந்ததற்காக அவருக்கு நன்றி.



-- Edited by t dinesh on Thursday 22nd of November 2012 01:13:15 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

t dinesh wrote:

யேசப்பா என் மனதில் பேச ஆரம்பித்தார். நீ கிறிஸ்தவனாயிருந்தால் அவர்களை மன்னிக்கும் மனம் வேண்டும்.  என்றார்.


மிக அருமையான சிந்தனை அருமையான் செயல்பாடுகள் நல்ல கருத்துகள் சகோதரர் அவர்களே!      

தேவனின் இருதய விருப்பம் அதுதான். அதைதானே தங்களிடமும் தெரிவிக்க முடியும்!  எந்த பெரிய பாவம் செய்தவனையும் ஆண்டவர் வெறுப்பதே இல்லை. எவரொருவர் தண்டனை  பெருவதையோ  பாவம் செய்து சாவதையோ  தேவன் எள்ளளவேனும் விரும்புவதில்லை!  

எசேக்கியேல் 18:32 மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எனவே அதே தேவசிந்தை நம்மிலும் இருக்க வேண்டும் என்பது தேவனின் எதிர்பார்ப்பு!   

 

யார் மேலும் நமக்கு கோபமோ மனஸ்தாபமோ வேண்டாம் எல்லோரையும் மன்னிப்போம்!

 

மேலும் இவ்வாறு மன்னிப்பதற்கு மனதில்லை என்றால் நான் அறிந்த கருத்திப்படி  சற்று சிந்தனை செய்து பாருங்கள்.  

 

இயேசுவின் சீடனாக வலம்வந்த யுதாசினுள் சாத்தான் புகுந்த பிறகுதான் அவன் இயேசுவை காட்டி கொடுக்க சம்மதித்தான்.  அவ்வாறு காட்டிகொடுக்க வைத்து காரியத்தை முடித்த சாத்தான், அவனை விட்டு போனபின்பு

 

மத்தேயு 27:4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்    

 
என்று சொல்லி யூதாஸ் புலம்புகிறான்!
 
அதேபோல், தனக்கு இடம் கொடுக்கும் சில மனுஷர்களுக்குள் புகுந்துகொள்ளும் சாத்தான் அவர்களை வைத்து தன் காரியத்தை சாதிக்கிறான். பின்னர் காரியம் முடிந்தபின்னர் அவர்களை விட்டு வெளியேறி விடுகிறான். அவன் போனபின்பு அந்த மனுஷர்கள் "ஏன்தான் இப்படி ஒரு காரியத்தை செய்தேனோ எனக்கே தெரியவில்லை" என்று புலம்புவார்கள்!
 
எனவே நாம் குற்றம் செய்தவர்களை பார்க்காமல் அவர்களுக்குள் இருந்து அவர்களை தூண்டிய சாத்தனை பார்ப்போம். அவனோடு ஆவியில் எதிர்த்து  நின்று ஜெயிப்போம்! மற்றபடி இந்த ஒன்றும்அறியாத ஆடுகளை மனதார மன்னித்து விட்டுவிடுவோம்.  
 
ஆகினும், சாத்தனுக்கு இடம் கொடுத்தது அவர்களுடைய தவறுதான் அதற்க்கு ஆண்டவர் ஏற்ற காலத்தில் பதிலளிப்பார்!    
 


-- Edited by SUNDAR on Tuesday 27th of November 2012 08:46:07 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

மிகச் சரியான கருத்து அண்ணா.அவர்கள் ஒருவேளை மனம் திரும்பி மன்னிப்படைந்து விடுவார்கள். மன்னிக்கா விட்டால் நாமோ தண்டிக்கப்பட வேண்டி வரும்.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard