எனக்கு தெரிந்த பணக்கார நபர் ஒருவர் தன மகனுக்கு திருமணம் செய்தார். திருமண பந்தியில் பல்வேறு உச்சிதமான பொருட்கள் பரிமாறப்பட்டன. விருந்துக்கு வருகிற எல்லோரையும் "வாருங்கள் நன்றாக சாப்பிடுங்கள்" என்று சிரித்த முக த்தோடு உபசரித்த அவர் பந்தி நடக்கும் இடத்தில் சென்று பார்த்துவிட்டு தனக்கு மிகவும் வேண்டிய ஒருவரிடம் "என்னமாய் கொட்டுகிறார்கள் பாருங்கள், தின்பதற்கு என்றே வருவார்கள் போலும்" என்பதுபோல் சொல்லி சாப்பிட்டுகொண்டிருக்கும் விருந்தினர்களை பற்றி இழிவாக பேசினாராம்.
இந்த காரியம் குறித்து நான் ஆராய்ந்தபோது எனக்கு பைபிள் சொன்ன பதில்.
எரேமியா 9:8 அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப்பதிவிடை வைக்கிறான்.
பிறருக்கு முன்னாள் சிரித்து சமாதானமாக பேசிவிட்டு அவர்களுக்கு பின்னால் ஏளனமான வார்த்தைகளை உபயோகிக்கும் இந்த செயலை கபடம் என்று ஆண்டவர் குறிப்பிடுகிறார்.
வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தால் "கபடம்" என்ற செயலை ஆண்டவர்கடுமையாக வெறுப்பதை பல்வேறு வசனங்கள் அறிய முடிகிறது
தொடர்ந்து வேத வார்த்தைகளை தியானித்த போது "கபடஸ்தன்" பற்றிய இன்னொரு விளக்கத்தையும் அறிய முடிந்தது!
சில நாட்களுக்கு முன்னாள் என்னுடைய மனைவி அவளுக்கு தெரிந்த ஒரு பெண்மணியை நலம் விசாரிக்க சென்றிருந்தாளாம். அந்நேரம் அவர்களின் கணவன் அவர்கள் மகளிடம் சொல்லி, என் மனைவிக்கு வீட்டில் இருந்த சுண்டலில் கொஞ்சம் கொடுக்க சொல்லியிருக்கிறார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்டலை எடுத்து வந்த அந்த மகள், அவள் தாயை நோக்கிளாம், அந்த பெண்மணி எதோ கண்களால் சைகை காட்ட, கையில் இருந்த பாத்திரத்தை கொண்டு வைத்து விட்டு வேறொரு பாத்திரத்தில் இருந்த சுண்டலை எடுத்து வந்து கொண்டுத்தாளாம். என் மனைவி அதை உண்ணலாம் என்று பார்த்தபோது அவை எல்லாம் பிசு பிசு என்று நாறிப்போன சுண்டலாக இருந்ததாம்.
.
"நல்ல சுண்டல் தங்கள் வீட்டில் இருக்க, வீட்டுக்கு வந்த ஒருவருக்கு கெட்டுபோன சுண்டலை எடுத்து கொடுக்கும்" இந்த நிலையையும் கபடம் என்றுதான் வேதம் சொல்கிறது.
இன்று உலகத்தில் அநேகர், நல்லவை தரமானவை எல்லாவற்றையும் தங்களுக்கு என்று பதுக்கிவிட்டு, கெட்டுபோனதையும் குப்பையில் போடவேண்டிய நிலையில் இருக்கும் பொருட்களையும் பிறருக்கு தாராளமாக வழங்குவதுபோல் அள்ளி கொடுக்கிறார்கள்.
.
மனுஷர்களாகிய நம்மாலே இதுபோன்ற காரியங்களை சகிக்க முடியாமல் இருக்க, அதே "கபடை" சர்வவல்ல தேவனிடமும் காட்டுகிறார்கள் என்று வேதம் சொல்லி அவர்களை சபிக்கிறது!
.
சிலர் நல்ல பொருள் கெட்ட பொருள் எதையுமே பிறருக்கு கொடுக்காமல் உள்ளேயே வைத்து கெட்டுபோனபிறகு கொண்டு குப்பையில் போடுவார்கள். அவர்களின் பெருங்குணத்தை நான் எதுவும் சொல்வதற்கில்லை, ஆனால் பிற மனுஷர்களுக்கு ஒன்றை கொடுக்கவேண்டும் என்று கருதுகிறவர்கள் அது நல்ல நிலையில் இருக்கும் போதே கொடுந்த்துவிடுங்கள் அல்லது எதையும் கொடுக்க வேண்டாம்!
.
ஆனால் ஆண்டவருக்கு கொடுக்கும்போதோ "உங்களிடம் இருக்கும் பொருட்களில் உச்சிதமானத்தை எடுத்து கொடுங்கள்" அது நல்லது! அதைவிட, இருக்கும் எதையும் தனக்கென்று பிடித்து வைக்காமல் எல்லாவற்றையுமே ஆண்டவர் ஆளுகைக்கு ஒப்புகொடுத்து விடுவது மிக சிறந்தது.
-- Edited by SUNDAR on Saturday 15th of December 2012 03:40:10 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்போஸ்தலர் 13:10எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே
I பேதுரு2 :2. சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
சகலவித கபடம்,எல்லா கபடம் என்பதை வேதத்தில் இருந்து கண்டு ,கவனிக்கும் பொது கபடம் என்பது பாவங்களின் தொகுப்பு என்பதை அறிய இயலுகிறது.அதாவது கபடஸ்தனிடம் அனேக பாவங்கள் குடிகொண்டிருக்கும்.. மேலும் வேதம் சொல்லுகிறபடி சகலவித கபடங்கள் இருப்பதாக தோன்றுகிறது.. மாய்மாலம் பண்ணுகிற அனைவரும் கபடு நிறைந்தவர்கள் என எண்ணுவது சரியாய் இருக்கும் என தோன்றுகிறது!!