இயேசு தம்முடைய ஜீவிய நாட்களில் பல்வேரு மாதிரிகளை நம்க்கு செய்து காட்டினார் அவை ஒவ்வொன்றுமே நமக்கு முக்கியமானதுதான், ஆனால் இவை எல்லாவற்றிலும் மிக முக்கியமான அல்லது சிகரம் மாதிரியாக நான் கருதுவது எதுவெனில் அவர் தன்னை காட்டிகொடுக்க போகும் துரோகியான யூதாசின் கால்களை கழுவி துடைத்த மாதிரியே என்று நான் கருதுகிரேன்.
யோவான் 13:5பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
12. அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
14. ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
15. நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
இயேசுவின் இந்த முன்மாதிரி செயல்கள் நாம் பின்பற்றி செய்வதர்க்கு மிகவும் கடினமான செயல்கள்.
காரணம் இந்த உலகம் சொல்லும் மொழி "எதிரியை மன்னித்து விடலாம் ஆனால் நம்பிக்கை துரோகியை மன்னிக்கவே கூடாது" என்பதுபோல் சொல்லி முடிந்த நேரத்தில் அவன் காலை வாரி விட்டுவிட துடிக்கும்.
அனால் நம்மாண்டவரோ! யூதாஸ் ஒரு நம்பிக்கை துரோகி என்று அறிந்திருந்தும் அவன் கால்களை கழுவி துடைத்து மிகுந்த தாழ்மையின் மூலம் மட்டுமே எதிரியை ஜெயிக்க முடியும் என்ற உண்மையை தெரிவிக்கிறார்.
இயேசுவின் இந்த செயல்பாடுகள் இன்றுவரை என் இருதயததை நெகிழ்விக்கிறதும் நாமும் அதுபோல் செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவதுமாக இருக்கிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என் நினைவாக செய்யுங்கள் என்று யேசு சொன்ன இராப்போஜன பந்தியை நாமெலமலோரும் கடைப்பிடிக்கிறோம். ஆனால் “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்“ என்று யேசு சொன்ன காரியத்தை ஏன் நாம் சபைகளில் கடைப்பிடிப்பதில்லை?
-- Edited by t dinesh on Monday 17th of December 2012 01:41:44 AM