உடன்படிக்கைப் பெட்டி புதிய ஏற்பாட்டில் தேவனுடைய பிரசன்னத்துக்கு அடையாளம் என கருதுகிறேன். பழைய ஏற்பாட்டில் பெட்டியை சுமந்தது போல புதிய ஏற்பாட்டில் தேவனுடைய பிரசன்னத்தை சுமக்க வேண்டும்.
பூர்வத்தில் இவ்வளவு சிறப்பாக மேன்மையாக இருந்த அந்த உடன்படிக்கை பெட்டிக்கும் புதிய எற்ப்பட்டு காலத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிரதா?
உடன்படிக்கை பெட்டியின் மேன்மையையும் புதிய ஏற்பாட்டில் அதன் நிலையையும் அறிவதற்க்கு அந்த உடன்படிக்கை பெட்டியினுள் என்ன என்ன பொருட்கள் இருந்தது என்பதை முதலில் நாம் அறிவது அவசியம.
அந்த உடன்படிக்கை பெட்டியினுள் என்ன இருந்தது?
எபிரெயர் 9:4 அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
மொத்தம் மூன்று பொருட்கள்: 1. மன்னா வைக்கபட்ட பொற்பாத்திரமும் 2. ஆரோனுடைய தளிர்த்த கோல் 3. உடன்படிக்கையின் கற்பலகை
புதிய ஏற்பாட்டு காலத்தில் மனுஷனே தேவன் தங்கும் ஆலயமாகிவிட்டதால்
.
எரேமியா 3:16அவர்கள் கர்த்தருடையஉடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
.
எனவே இந்நாட்களில் "உடன்படிக்கை பெட்டி" என்பது மனுஷ சரீரத்துக்கு ஒப்பாகவும் அதனுள் இருந்த அந்த மூன்று பொருட்களும் மனுஷ உடம்பினுள் வந்து தங்கும் தேவ வல்லமையாகவும் எடுத்து கொள்ளலாம்!
1. மன்னா வைக்கபட்ட பொற்பாத்திரம்
உபாகமம் 8:3மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடையவாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்தமன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
.
மன்னா என்பது தேவனின் வார்த்தைக்கு ஒப்பாக கூறப்படுகிறது. எனவே மன்னா இருக்கும் பாத்திரம் என்பது தேவனின் வார்த்தைகளை உள்ளடக்கிய பரிசுத்த வேதாகமத்தை குறிப்பதாக எடுத்துகொள்ளலாம். அத்தோடு தேவனின் வார்த்தையாக வந்த ஆண்டவராகிய இயேசுவை தனக்குள் கொண்டிருக்க வேண்டும் என்றும் எடுத்துகொள்ளலாம்.
இவ்வாறு ஒரு மனுஷன் வார்த்தையாகிய இயேசுவை தன்னுள் ஏற்றுக்கொண்டு தேவன் அருளிய வேத வசனங்களை அதிகம் தியானித்து தன்னுள் அறிந்திருந்தால் அவன் நற்குணசாலியாக மாறுவதோடு அங்கு தேவ வல்லமை அதிகம் வெளிப்படும்.
இந்த கோல் ஒரு மனுஷனுக்குள்ள ஊழிய அழைப்பை குறிக்க பயன்படுகிறது
எண் 17: 5 அப்பொழுது நான் தெரிந்து கோள்கிறவனுடைய கோல் துளிர்க்கும்!8 மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.
.
ஆரோனை தேவன் ஊழியத்துக்காக தெரிந்துகொண்டார் எனபதை மற்றவர்களுக்கு தெரிவிக்கும்போருட்டு அவனுடைய கோல் மாத்திரம் துளிர்த்திருந்தது என்பதை அறிவோம்.
இதனிமித்தம் ஒரு மனுஷன் தனக்குள்ள சரியான தேவ அழைப்பை அறிந்துகொண்டு, அதன்படி செய்வானாகில் அவர் தேவனுக்குள் பிரகாசிக்கவும் தேவனின் வல்லமையை அதிகமதிகமாக வெளிப்படுத்தவும் முடியும்!
.
எபேசியர் 4:1நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, 2. மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி 3. சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
.
3. உடன்படிக்கையின் கற்பலகை
அடுத்து விட மிக முக்கியமானது உடன்படிக்கை பெட்டியில் இருந்த பலகையில் உள்ள பத்து கற்பனைகள்!
ஒரு மனுஷன் இவ்வுலக வாழ்க்கையில் தேவனின் கற்பனைகளை கைகொண்டு நடக்கும்போது அவர் அதிகமான வல்லமையையும் மேன்மையையும் பெற முடியும் என்பதை அறியும்படிக்கு அந்த பெட்டியினுள் பத்து கற்பனைகள் அடங்கிய கற்பலகை இருந்தது.
II யோவான் 1:6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனைஇதுவே.
.
இவ்வாறு மூன்று முக்கிய பொருட்கள் இருந்த தேவனின் பெட்டியினுள் பின்னாட்களில் சாலமோன் இராஜாக்களின் காலத்தில் அந்த பெட்டியில் கற்பலகைகள் மட்டுமே இருந்ததாக வசனம் கூருகிறது.
I இரா 8:6. அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள். 9 இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
அதன் பின்னர் உடன்படிக்கை பெட்டியை பற்றிய சிறப்பு செய்தி எதுவும் இல்லை!
இவ்வாறு உடன்படிக்கை பெட்டியினுள் இருந்த மூன்று முக்கிய பொருட்கள் போன்று மூன்று முக்கிய வல்லமைகள் ஒரு புதிய ஏற்பாட்டு கால மனுஷனில் இருக்கும் போது, அங்கு தேவ மகிமை அதிகமாக வெளிப்படும்! ஒவ்வொரு வல்லமையாக குறைய குறைய அவர் மகிமை குறைந்துபோகும்!
.
(இந்த கருத்துக்கள் எனது சொந்த தியான கருத்துக்கள். மேலதிக விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடலாம்)
-- Edited by SUNDAR on Wednesday 26th of December 2012 08:15:28 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மாறாத உடன்படிக்கையை நம் தேவன் பண்ணுகிறவராகையால் பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை பெட்டிக்கும்,புதிய ஏற்பாட்டிற்கும் சம்பந்தம் உண்டு..
இதை பற்றி எழுத அனேக முறை முயன்றும் இயலவில்லை.. உடன் படிக்கை பட்டியை பற்றி எழுத யோசித்திருந்த பொது, ஏற்கனவே சகோ.சுந்தர் உடன்படிக்கை பெட்டியில் வைக்க பட்டிருந்த மூன்று பொருட்களை பற்றி தெளிவாய் கூறிவிட்டார். சரீரத்தை அவர் கூடாரம் என்று கூறுவது வேதத்தின் படி மிக சரியானதே!!
சரி, நான் தியானங்களின் பொது பெற்றவைகளின் சுருக்கத்தை பகிறுகிறேன்..
உடன்படிக்கை பெட்டியில் உள்ள மூன்று பொருட்களுக்கான வேத விளக்கம் வருமாறு,
1) துளிர்த்த கோல் - மற்ற கோள்களுக்கு மத்தியில் துளிர்த்து தேவ அழைப்பை காட்டிய படியால் - இது தேவ அழைப்பை குறிக்கிறது.
2) கற்பலகை - உயருள்ள தேவனின் மாற்றமடையாத தேவ கட்டளை,கற்பனை
3) மன்னாவை ஏந்திய பொற்பாத்திரம் - பலி, தேவைக்கான தேவ போஷிப்பு, வானத்தில் இருந்து இறங்கின உயிருள்ள உணவின்(கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) மாதிரி..
உடன்படிக்கை பெட்டி என்பது வைக்கபட்டிருந்த இடமாக வேதம் கூறுவது ஒரு கூடாரம், அது ஒரு நிலையான வீடு அல்ல. கூடாரம் என்பது தற்காலிகமானது தானே!! இந்த கூடாரத்திற்கு ஆசாரிப்பு கூடாரம் என்று பெயர்.இது உடன்படிக்கை பெட்டி உருவாக்கப்படும் முன் சாட்சியின் கூடாரம் என அழைக்கப்பட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆலயம் கட்டப்பட்ட பின் உடன்படிக்கை பெட்டி திரைக்கு பின்னான மஹா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டது!!
யாத்திராகமம் 33:7 மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.
மோசே, தேவன் காட்டியபடி பரலோகமாதிரிக்கு ஏற்றார் போல பாளையத்திற்கு புறம்பே ஆசரிப்பு கூடாரத்தை நிறுவினார். இந்த பரலோக மாதிரிக்கு சாட்சியின் கூடாரம் என்று பெயர்.
அப்போஸ்தலர் 7:44 மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.
வெளி 15:5 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
அப்.பேதுரு இந்த மண்ணான சரிரத்தை 'கூடாரம்' என்கிறார். இந்த சரீரத்தில் கொஞ்சகாலம் பாடுகளை தரித்து பின் மகிமையை சுதந்தரிக்க அவர் கூறும் அறிவுரையும் கவனத்தில் கொள்ளத்தக்கது!!
II பேதுரு 1:13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,
II பேதுரு 1:14 இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.
இந்த உடன்படிக்கை பெட்டி இயேசு கிறிஸ்துவிற்கு அடையாளமே, பின்வரும் வசனங்கள் முழுமையாக தெளிவாக இதனை தெரிவிக்கிறது..
அவர்,
1) தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்
2) கட்டளைகளையும்,கற்பனைகளையும் பிதா போதிக்கிரபடியே பேசும் குமாரனானவர் ஜீவனுள்ள, விலையேறபெற்ற கல்லானவர்!!
3) மான்னாவை போலவே பரலோகத்தில் இருந்து வந்தவர், உயருள்ள போஜனமானவர்!!
இந்த கர்த்தராகிய இயேசுவை சுற்றி கட்டப்பட போகிற பரிசுத்த ஆசாரிய கூட்டம் நாம் தாம்!!! சாட்சியின் கூடாரத்தில் காணப்படபோகிற உயருள்ள கற்களும் நாம் தாம்!! பிதாவாகிய தேவனுக்கு இதற்காக எவ்வளவாய் நாம் ஸ்தோத்தரிக்க வேண்டும்!!
ஏசாயா 8:14 அவர் உங்களுக்குப் பரிசுத்தஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
எபிரெயர் 8:2பரிசுத்தஸ்தலத்திலும், மனுஷராலல்ல,கர்த்தரால்ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
வெளி 15:5 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
மற்றபடி கற்பலகை உடைக்கப்பட்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டது இயேசுவின் (தேவ வார்த்தையின்)சரீரம் நமக்காக சந்து சந்தாக கிழிக்கபட்டதற்க்கும், மீண்டும் உயிரடைந்ததற்க்கும் ஒப்பாக உள்ளது!! இயேசு மரிக்கும் போது திரை சீலை கிழிந்தது சாமானியன் எவனும் மஹா பரிசுத்த ஸ்தலத்தில் இயேசுவின் மூலமாய் தேவனை தேட வழியுண்டாக்கும் வகையில் உண்டானது.
யாத்திராகமம் 26:33 கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்தஸ்தலத்திற்கும் மகா பரிசுத்தஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
முன் ஆசாரியர்களே பரிசுத்த ஸ்தலத்தின் ஊழியத்தை செய்வார்கள்.ஆனால் அவர்களும் மஹா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே பிரவேசிக்க மாட்டார்கள்!! ஆனால் தாவீது முன் அறிவித்தபடி அனைவரும் பரிசுத்த ஸ்தலத்திலும்,காணும் எவ்வெளியிலும் தேவனை தேட,தேவ சமூகத்தை மறைக்கும் திரை சீலை கிழிக்கப்பட்டது!!
எபிரெயர் 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகாபரிசுத்தஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
இது நம் பிரதான ஆசாரியரான இயேசு ஒரே தரறம் தம் மரணத்தால் மஹா பரிசுத்த ஸ்தலத்தில் தம் சுத்த ரத்தம் ஏந்தி நித்திய மீட்பை ஏற்படுத்தியதால் கிட்டியது!!
சங்கீதம் 150:1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
பழைய ஏற்பாடு காலத்தில் கர்த்தரின் ஆலயத்துக்குள் கேருபீன்களின் மத்தியில் வைக்கப்பட்டிருந்த கர்த்தரின் உடன்படிக்கை பெட்டியை பற்றிய பல அறிய தகவல்களை அறியமுடிந்தது விளக்கம் தந்த சகோதரர்களுக்கு நன்றி.