இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை.


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை.
Permalink  
 


இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை.

இலங்கை கிறிஸ்தவா்களுக்கு.....

 tamil-civilians-killed-colombo-telegraph.jpg
கடந்த காலங்களில் இலங்கை மண்ணில் இடம் பெற்ற படு கொலை கள் யாவரும் அறிந்ததே. ஆயிரக் கணக்கானோருடைய இரத்தம் இந்த இலங்கை மண்ணை நனைத்துள்ளது. பூமியில் மனிதனு டைய இரத்தம் சிந்தப்படுவது சாபத்தை கொண்டு வரும் என்பது வேதாகாமத்தின் போதனை. உதாரணமாக இந்த வசனத்தை பாருங்கள் 

ஆதியாகமம்-4:11. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
12. நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

தன் சகோதரனின் இரத்தத்தை சிந்தின காயீன் சாபத்தை கட்டிக் கொண்டான். தமிழர் சிங்களவருக்கிடையில் இடம்பெற்ற சண்டையில் இலங்கை நிலத்தில் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக நிச்சயம் இலங்கையில் சாபம் இருக்கும் . இரத்தம் சிந்தப்பட்டது மட்டுமல்ல அநியாயங்கள், அக்கிரமங்கள், ஒடுக்குமுறைகள், என்பவற்றாலும் என் இலங்கை பெரும் சாபத்தை கட்டி வைத்து கொண்டிருக்கிறது.

இந்த சாபம் இலங்கை மக்களை ஒரு போதும் நிம்மதியாக வாழ விடாது. அந்த சாபத்தின் விளைவு சுற்றி வளைத்து வந்து, சாபத்திலிருந்து விடுதலை பெற்று விட்டதாக கூறிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களாகிய எம் வாழ்விலும் , எம் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். எனவே இந்த சாபத்திலிருந்து என் தாய் நாடு காக்கப்பட்டாக வேண்டும்.அதற்கு ஒரு சிறிய ஆலோசனை.

நான் ஒரு தமிழன் . சிங்களவர் தமிழருக்கு செய்த அநியாயங்களை உலகம் அறியும். அது மட்டுமல்ல தமிழர்களாகிய நாம் மட்டும் ஏதோ நல்லவர்களல்ல. தமிழர்களாகிய நாமும் சிங்களவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ அநியாயங்களை செய்திருக்கிறோம். எவ்வளவோ சிங்கள சகோதரர்களின் ரத்தத்தை சிந்தியிருக்கிறோம். உலகின் பார்வையில் சிங்களவர்கள் கொடுமைக் காரர் களாகவும், தமிழர்கள் அப்பாவிகளாகவும் தெரிந்தாலும், தேவனின் பார்வையில் நாமும் குற்றவாளிகள்.   இரட்சிக்க படாதவர்கள் இதை ஏற்றுகொள்ள மறுக்கலாம். முதலில் கிறிஸ்தவர்களாகிய நாம் இதை ஏற்க வேண்டும்.

அடுத்ததாக நாம் செய்யவேண்டிய காரியம் என்ன தெரியுமா? நீ தமிழனாக இருந்தால் உனக்கு அநியாயம் செய்த சிங்களவனை நீ மன்னிக்க வேண்டும். நீ சிங்களவனாயிருந்தால் உனக்கு அநியாயம் செய்த தமிழ் சகோதரனை நீ மன்னிக்க வேண்டும்.கடமைக்காக அல்ல, மனமார நீ மன்னிக்க வேண்டும். சிங்களவர் , தமிழர், இஸ்லா மியர் ஆகிய யாவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து நீ ஒரு கிறிஸ்தவனாக மற்ற இனத்தவரை நீ மன்னிக்க வேண்டும்.இது மிகவும் கடினமானதுதான் ,ஆனால் கட்டாயமானது.

 நீ மன்னிக்காவிட்டால் நீ எப்படி தேவனின் பிள்ளையாயிருக்க முடியும்? அவர் சிலுவையில் நம்மை மன்னித்தாரே. ஏன் மன்னிக்க வேண்டும் தெரியுமா? நீங்களும் நானும் தேவனுடைய பிள்ளைகளாயிருப்பதால் நாம் யாரை மன்னிக்கிறோமோ அவர்களை நமது அப்பா மன்னித்து விட்டு விடுவார்.

யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்,

அதனால் அவர்களிநிமித்தம் நம் மண்ணுக்கு வரும் சாபம் நீக்கப்பட்டு விடும். இந்த உண்மையை எல்லாரும் ஏற்கா விட்டாலும் , இந்த நாட்டிலுள்ள எல்லா கிரிஸ்தவர்களும் ஏற்றுக்கொண்டு தங்களுக்கு அநியாயம் செய்த மற்ற இனத்தவரை  மனமார  மன்னித்தால்  தேசம்   சாபம்  நீங்கி  குணப்பட  முடியும்.

ஆனால் இன்று ''இரட்சிக்க பட்டவன் நான் '' என்று சொல்பவர்கள் கூட சிலர் தங்களுக்கு நடந்த அநியாயத்தை மனதில்  வைத்தவர்களாய் மன்னிக்க முடியாமல் இன்னும் குரோதத்தையும், பகையையும், பழி வாங்கும் எண்ணத்தையும்  அடி மனதில் வைத்து கொண்டு தேவனை ஆராதித்து அவருக்கு காணிக்கை கொடுக்கின்றனர்.

மத்தேயு-5:23. ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,

24. அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

எனவே கிறிஸ்தவர்களே ,தேவனுடைய பிள்ளைகளே மன்னியுங்கள். தேசம் வாழ்க்கைப்படும்.
                                                கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.






-- Edited by t dinesh on Friday 21st of December 2012 01:42:33 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

மிகவும் மேன்மையான நல்லதொரு ஆலோசனை சகோதரரே. 

மத்தேயு 5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; 
.
என்ற ஆண்டவரின் வார்த்தையை உணர்ந்து போதிக்கபட்ட வார்த்தைகள். ஒரு உண்மையான கிறிஸ்த்தவர் உடனடியாக  செய்யவேண்டிய காரியங்களை  தங்கள் பதிவு வலியுறுத்துகிறது.நம்முடைய மனதில் எதிவினையான எண்ணங்கள் இருக்கும் வரை சாத்தனுக்கு சண்டையை மூட்டி சாகடிப்பதற்கு வழிகள் திறந்தே இருக்கிறது. எனவே கடினமாக இருந்தாலும் கசப்பான எண்ணங்களை இருதயத்தை விட்டு அகற்றி, எதிரியை முழு மனதோடு மன்னித்து அவர்களை வாழ்த்துங்கள்! 
.
அத்தோடு ஆண்டவரை நோக்கி
 .
"ஆண்டவரே இந்த பூமியில் யார் யாருக்கு எந்தெந்த எல்லை என்று நிர்ணயித்து கொடுத்தவர் நீர்! ஒருவேளை இந்த் இடங்களை நீங்கள் சிங்களர்களுக்கு என்று நிர்ணயித்து இருந்தால், இதை அவர்களே எடுத்துகொண்டு எல்லா செழிப்போடும் இங்கு நலமாக  வாழட்டும் அவர்களுக்கு இடைஞ்சலாக இங்கு நாங்கள் இருக்க விரும்பவில்லை. உமது பிள்ளைகளாகிய எங்களுக்கென்று இதைவிட ஒரு நல்ல இடத்தை ஆயந்த்தபண்ணி கொடுக்க உம்மால் முடியும்! உம்முடைய அநாதி தீர்மானத்தின்படி எங்களை நடத்தியருளும்,  ஆண்டவரே சிறுமைப்பட்டுபோன எங்கள்மேல் இரக்கமாயிரும்"  என்று அனுதினம் ஜெபிக்கலாம்.  
.
ஒடுக்கபட்டவர்களுக்கு தேவன் நிச்சயம் நியாயம் செய்வார்!
.
சங்கீதம் 146:7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்!
.
ஆனால் சிறுமைப்பாடவர்களுக்கோ நம் கர்த்தர் அதிகமதிகமான ஆறுதலாகவும் அடைக்கலமாகவும் அவர்கள் வேண்டுதலை கேட்கிறவராகவும் இருக்கிறார்! 
எனவேதான் அவரை "சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் (II கொரி 7:6)" என்று பவுல் குறிப்பிடுகிறார். 
சங்கீதம் 9:9 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
சங்கீதம் 10:17 கர்த்தாவேசிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
.
எனவே அன்பானவர்களே, நாம் கடினமனதொடு தேவனிடம் நியாயத்துக்காக வேண்டுவதைவிட "நான் சிறுமைபட்டவன் ஆண்டவரே என்னை நினைத்தருளும்" என்று நொறுக்கபட்ட இருதையத்தோடும் மிகுந்த மன வருத்தத்தோடும் கெஞ்சுவதே நமக்கு அதிக பலனை தருவதும், தேவனே நமக்கு அடைக்கலமாக ஆதரவாக இருந்து ஸ்திரப்படுத்துவதற்கு எதுவாக இருக்கும்! 

 



-- Edited by SUNDAR on Saturday 22nd of December 2012 04:02:26 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

///"ஆண்டவரே இந்த பூமியில் யார் யாருக்கு எந்தெந்த எல்லை என்று நிர்ணயித்து கொடுத்தவர் நீர்! ஒருவேளை இந்த் இடங்களை நீங்கள் சிங்களர்களுக்கு என்று நிர்ணயித்து இருந்தால், இதை அவர்களே எடுத்துகொண்டு எல்லா செழிப்போடும் இங்கு நலமாக  வாழட்டும் அவர்களுக்கு இடைஞ்சலாக இங்கு நாங்கள் இருக்க விரும்பவில்லை. உமது பிள்ளைகளாகிய எங்களுக்கென்று இதைவிட ஒரு நல்ல இடத்தை ஆயந்த்தபண்ணி கொடுக்க உம்மால் முடியும்! உம்முடைய அநாதி தீர்மானத்தின்படி எங்களை நடத்தியருளும்,  ஆண்டவரே சிறுமைப்பட்டுபோன எங்கள்மேல் இரக்கமாயிரும்"  என்று அனுதினம் ஜெபிக்கலாம்.///

நன்றி அண்ணா. அருமையான ஜெபம் 



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard