கடந்த நாளில் ஒரு ஆவிக்குரிய பெண்மணியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்கள் சொல்லிய சில காரியங்களையும் அவர்கள் கேட்ட கேள்வியையும் இங்கு பதிவிடுகிறேன்.
.
"ஆண்டவராகிய இயேசுவை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற நோக்கில் முழு இரவு ஜெபத்துக்கு சென்று, விடாமல் தொடர்ந்து நீண்டநேரம் ஜெபித்தபோது மூடிய கண்களுக்கு முன்னால் என் அருகில் நம் இயேசு நிற்ப்பதை என்னால் நன்றாக பார்க்கவும் உணரவும் முடிந்தது. ஆனால் என் கண்களில் அடக்க முடியாத அளவுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது நான் மிகவும் அழுதேன்.
நம் ஆண்டவர் நமக்கு சந்தோஷத்தை கொடுக்கத்தானே மரண வேதனையை தாங்கினார் பின்னர் அவர் வந்து நிற்கும்போது சந்தோசம் அதிகம் வராமல் அதிக அழுகையும் கண்ணீரும் வர காரணம் என்ன? என்பதுதான் அவர்கள் கேள்வி.
.
என்னுடையை அனுபவத்திலும் நாம் அதிகம் பாரத்துடன் ஜெபிக்கும்போது அடக்கமுடியாத அளவுக்கு கண்ணீர் பொங்கி வருவதை அறிந்திருக்கிறேன். இவ்வாறு ஒருமனதோடு பிரார்த்தனை செய்யும்போது அதிக அழுகை வர காரணம் என்ன என்பதை அறியும் அவா எனக்கும் உள்ளது.
'
அன்பான சகோதர சகோதரிகளே சரியான விளக்கம் அறிந்திருந்தால் சொல்லுங்களேன்.
என்னுடையை அனுபவத்திலும் நாம் அதிகம் பாரத்துடன் ஜெபிக்கும்போது அடக்கமுடியாத அளவுக்கு கண்ணீர் பொங்கி வருவதை அறிந்திருக்கிறேன். இவ்வாறு ஒருமனதோடு பிரார்த்தனை செய்யும்போது அதிக அழுகை வர காரணம் என்ன என்பதை அறியும் அவா எனக்கும் உள்ளது.
ஆவியில் நிறையும்போது பல சகோதரிகள் தேம்பி தேம்பி அழுவதை நானும் பார்த்திருக்கிறேன் ஆனால் ஆவியில் நிறைந்து ஜெபிக்கும்போது அழுகை வருவதாக எதாவது வசனம் இருக்கிறதா?
ஆவியில் நிறைந்து ஜெபிக்கும்போது அழுகை வரும் என்பது குறித்த வசன ஆதாரம் எங்கு இருக்கிறது என்பதை அண்ணன் அவர்கள் தெரிவ்த்தால் அதற்க்கான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து பார்க்க உதவியாக இருக்குமே ஐயா
வசன ஆதாரம் இல்லாத அனுபவங்களை யாரும் ஏற்ப்பது கிடையாதே
எரேமியா 9:1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
இவ்வாறு அழுவது தவறல்ல.. ஆனால் மனந்திரும்ப ஒட்டாத மாய்மால அழுகை கண்ணியைவரவழைக்கும்!!!
மற்றுமல்லாது,கருத்தில் ஜெபம்பண்ணும்போது அழுதால் நாமே காரியத்தை அறிவோம்..ஆவியில் விண்ணப்பம் பண்ணும்போது அழுதால் ஆவியானவர் தான் காரியத்தை சரியாய் கூற இயலும்..
Glory to god!!!
-- Edited by JOHN12 on Tuesday 5th of March 2013 05:52:34 PM

நன்றி சகோதரர் அவர்களே,
ஆவியில் நிறைந்து ஜெபிக்கும்போது பல நேரங்களில் வாக்குக்கு அடங்காத பெருமூச்சுடன் அழுகையும் வருகிறது ஆனால் ஏன் எதற்க்காக யாருக்காக அழுகிறேன் என்பதற்கான சரியான காரணம் எனக்கு தெரியவில்லை.
ஆவியான இறைவன் ஒருவரே அக்காரணத்தை அறிவார் என்பதும் எனக்கு ஓரளவுக்கு புரிகிறது. இருந்தாலும்கூட நாமும் அக்காரணத்தை அறிந்துகொண்டால் அதற்காக ஜெபிக்க முடியுமே என்ற எண்ணத்தில் கேட்டுவைத்தேன்.