இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தகப்பனின் பாவம் பிள்ளைமேல் வராதா? - முக்கிய சந்தேகம்.


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
தகப்பனின் பாவம் பிள்ளைமேல் வராதா? - முக்கிய சந்தேகம்.
Permalink  
 


ஐயா  நான் வேதத்தை வாசித்தபோது எசேக்கியேல் புத்தகத்தில் இந்த வசனத்தை வாசித்தேன்    
 
எசேக்கியேல் 18:20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லைதகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
 
தகப்பனுடைய அக்கிரமத்தை துன்மார்க்கன் சுமப்பது இல்லை என்றும் துன்மார்க்கனுடைய துன்மார்க்கம் அவன்மேல்தான் இருக்கும் என்றும் பைபிள் தெளிவாக சொல்கிறதே. 
*
அவாறு இருக்கும்போது நமது ஆதி தகப்பனான ஆதாமின் பாவத்தை எல்லா மனுஷர்களும் சுமக்கிறார்கள் என்று சொல்வது எவ்விதத்தில் சரியாகும்? 
*
அறிந்தவர்கலிடம் இருந்து  இதற்க்கு சரியான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் ஐயா 


-- Edited by JOHNJOSH on Friday 25th of January 2013 05:47:13 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//ஐயா  நான் வேதத்தை வாசித்தபோது எசேக்கியேல் புத்தகத்தில் இந்த வசனத்தை வாசித்தேன்    
 
எசேக்கியேல் 18:20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லைதகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.
 
தகப்பனுடைய அக்கிரமத்தை துன்மார்க்கன் சுமப்பது இல்லை என்றும் துன்மார்க்கனுடைய துன்மார்க்கம் அவன்மேல்தான் இருக்கும் என்றும் பைபிள் தெளிவாக சொல்கிறதே. 
*
அவாறு இருக்கும்போது நமது ஆதி தகப்பனான ஆதாமின் பாவத்தை எல்லா மனுஷர்களும் சுமக்கிறார்கள் என்று சொல்வது எவ்விதத்தில் சரியாகும்? 
*
அறிந்தவர்கலிடம் இருந்து  இதற்க்கு சரியான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் ஐயா //

 

அன்பான சகோதரரே! தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனத்திற்கு அடுத்த சில வசனங்களிலேயே தங்கள் கேள்விக்கான பதில் உள்ளது.

எசேக்கியேல் 18:27 துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.
28 அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

துன்மார்த்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்பவன் பிழைக்கவே பிழைப்பான் என இவ்வசனம் சொல்கிறது. இதன் அர்த்தமென்ன? ஆதாமின் பாவம் அவன்மீது இல்லை என்பதுதானே? ஆதாமின் பாவத்தை சுமப்பவன் எப்படி பிழைக்க முடியும்?

ஆதாமின் பாவத்தால் மனிதர்களுக்குக் கிடைத்த சாபம் “மரணம்” மட்டுமே. இந்த மரணம் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. கிறிஸ்துவின் ஈடுபலியால், ஆதாமின் பாவத்தால் வந்த மரணத்திலிருந்து எல்லோருக்கும் விடுதலை கிடைத்தது. ஆம், ஆதாமின் பாவத்தால் மரிக்கிற அனைவரும் கிறிஸ்துவின் பலியால் உயிர்த்தெழுதலைப் பெறுகின்றனர்.

1 கொரி. 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். (அப். 24:15)

இவ்வாறு உயிர்த்தெழுதலைப் பெற்றபின்னர், அவனவன் கிரியைக்குத்தக்க பலன் கொடுக்கப்படும் (ரோமர் 2:6; வெளி. 20:12; 22:12). அதுதான் துன்மார்க்கனுக்கு மரணம், நீதிமானுக்கு நித்தியஜீவன் (தானியேல் 12:2; மத்தேயு 25:46; 2 தெச. 1:10; யோவான் 5:29; வெளி. 20:15).

இந்த பலனைத்தான் எசேக்கியேல் 18-ம் அதிகாரம் கூறுகிறது. ஆதாமின் பாவத்தால் வந்த (முதலாம்) மரணத்தைக் குறித்து அவ்வதிகாரம் சொல்லவில்லை. அவனவன் பாவத்தின் காரணமாக வருகிற 2-ம் மரணத்தைக் குறித்தே அவ்வதிகாரம் கூறுகிறது.

கிறிஸ்துவின் ஈடுபலியால், ஆதாமின் பாவத்தால் வரும் மரணத்திலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்ற உண்மையின் அடிப்படையாகக் கொண்டுதான் எசேக்கியேல் 18-ம் அதிகாரம் உரைக்கப்பட்டுள்ளது.



-- Edited by anbu57 on Wednesday 30th of January 2013 12:42:34 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

anbu57 wrote:
 ஆதாமின் பாவத்தால் வந்த (முதலாம்) மரணத்தைக் குறித்து அவ்வதிகாரம் சொல்லவில்லை. அவனவன் பாவத்தின் காரணமாக வருகிற 2-ம் மரணத்தைக் குறித்தே அவ்வதிகாரம் கூறுகிறது.

கிறிஸ்துவின் ஈடுபலியால், ஆதாமின் பாவத்தால் வரும் மரணத்திலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்ற உண்மையின் அடிப்படையாகக் கொண்டுதான் எசேக்கியேல் 18-ம் அதிகாரம் உரைக்கப்பட்டுள்ளது.


==============================================================================

ஐயா தங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

சரீர  மரணமாகிய முதல் மரணம் மற்றும் இரண்டாம் மரணமாகிய நித்திய மரணம் இரண்டையும் பிரித்து பார்க்க தெரியாததால் குலம்பிவிட்டேன்.

ஆதாமின் பாவத்தால் வருவதுதான்  சரீர  மரணம் அது எல்லோரையும் சந்திக்கும் எனவே அது எல்லோரையும் தொடரும். ஆனால் இரண்டாம் மரணம் அவனவனுடைய கிரியையின் அடிப்படையிலேயே தீர்ப்பு செய்யப்படும் அதை பற்றியே எசேக்கியேல் இதில் சொல்லுகிறார் என்பது இப்போது புரியுது.   
     

 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

உங்களுடைய பதில் இன்னுமொரு கேள்வியை எழுப்புகிறது. கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் இரண்டாம் மரணத்தை ஜெயிக்க வழியில்லையா? என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று கிறிஸ்து இரண்டாம் மரணத்தை ஜெயிப்பது குறித்து கூறவில்லையா? விசுவாசத்தினால் (இரண்டாம் மரணத்திலிருந்து) இரட்சிப்பு என்று வேதத்தில் அனேக வசனங்கள் உள்ளதே?


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//உங்களுடைய பதில் இன்னுமொரு கேள்வியை எழுப்புகிறது. கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் இரண்டாம் மரணத்தை ஜெயிக்க வழியில்லையா? என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று கிறிஸ்து இரண்டாம் மரணத்தை ஜெயிப்பது குறித்து கூறவில்லையா? விசுவாசத்தினால் (இரண்டாம் மரணத்திலிருந்து) இரட்சிப்பு என்று வேதத்தில் அனேக வசனங்கள் உள்ளதே?//

உங்கள் கேள்வியிலேயே பதிலும் உள்ளது. கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் 2-ம் மரணத்தை ஜெயிக்கமுடியும் என்பது 100-க்கு 100 சரியே.

ஆனால் கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாகும். எனவே 2-ம் மரணத்தை ஜெயிப்பதென்பது நமது கிரியையைச் சார்ந்ததே.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்பது உண்மைதான். ஆனாலும் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் இரட்சிப்பு என்ற விசுவாசம் இல்லாமலே அநேகர் நற்கிரியைகளை நடப்பிக்கிறார்களே? அவர்களும் இரட்சிக்க படுவார்களா?


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்பது உண்மைதான். ஆனாலும் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் இரட்சிப்பு என்ற விசுவாசம் இல்லாமலே அநேகர் நற்கிரியைகளை நடப்பிக்கிறார்களே? அவர்களும் இரட்சிக்க படுவார்களா?//

உங்களது கேள்விக்கு இந்த வசனபகுதி சரியான பதிலாக இருக்குமென நம்புகிறேன்.

ரோமர் 2:6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். 10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை.

12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.

13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

நீங்கள் கொடுத்துள்ள வசனங்கள் ஒருவன் எப்படி தேவனுக்கு முன்பாக நிதிமானாக எண்ணப்படுகிறான் என்பதை குறித்து விளக்குவது போல தெரியவில்லை மாறாக நியாயபிரமாணத்தை பெற்று கொண்ட யூதர்களும் , பெற்று கொள்ளாமல் மனசாட்சிப்படி வாழ்கிற புறஜாதியினரும் பாவிகளே அவர்கள் கெட்டு போவார்கள் (ரோமர் 2:12) என்ற நோக்கில் எழுதப்பட்டு உள்ளது. தொடர்ந்து எழுதும் பவுல் இதை உறுதிபடுத்துகிறார்



ரோமர் 3:9. ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.

10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;

11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

13. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

14. அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;

15. அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;

16. நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;

17. சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;

18. அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.

19. மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

20. இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.

21. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.



மேலும் அவர்  விசுவாசத்தின் மூலமாகவே நீதிமான்கள் ஆக்கபடுகிறார்கள் என்றும் எழுதுகிறார்.

22. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

24. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//நீங்கள் கொடுத்துள்ள வசனங்கள் ஒருவன் எப்படி தேவனுக்கு முன்பாக நிதிமானாக எண்ணப்படுகிறான் என்பதை குறித்து விளக்குவது போல தெரியவில்லை மாறாக நியாயபிரமாணத்தை பெற்று கொண்ட யூதர்களும் , பெற்று கொள்ளாமல் மனசாட்சிப்படி வாழ்கிற புறஜாதியினரும் பாவிகளே அவர்கள் கெட்டு போவார்கள் (ரோமர் 2:12) என்ற நோக்கில் எழுதப்பட்டு உள்ளது. தொடர்ந்து எழுதும் பவுல் இதை உறுதிபடுத்துகிறார்//

உங்கள் புரிந்துகொள்தலின்படியே வைத்துக்கொள்ளுங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard