ஐயா எனக்கு ஒரு சிறிய விளக்கம் தேவை. அறிந்தவர்கள் கொஞ்சம் விளக்கி சொலுங்கள்.
ஜெபம் நமக்கு மிகவும் அவசியமான ஓன்று என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஜெபிப்பதன் மூலம் பெரிதான நன்மைகளை அடைய முடியும் என்பதும் பல ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முடியும் என்பதுகூட உண்மைதான் எனவேதான் ஜெபத்தைபற்றி சர்ச்களில் அதிகம் போதிக்கிறார்கள்.
தேவனின் சொரூபமான இயேசுவே நிறைய நேரங்களில் ஜெபம் செய்திருருக்கிறார் பவுலும் இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள் என்று அட்வைஸ் பண்ணியுள்ளார்.
ஐயா இங்கு எனது கேள்வி என்னவென்றால் எனது பக்கத்து வீட்டுகாகாரர் ரட்சிக்கபட வேண்டும் என்று விரும்பும் நான் அவருக்காக ஜெபித்துகொண்டே இருந்தால் அது நடந்துவிடுமா
எனது உறவுக்காரர்கள் யாரும் நரகம் ப;போக கூடாது என்று நினைக்கும் நான் "இயேசப்பா ஒருவரும் நரகத்துக்கு போய்விட கூடாது" என்று ஜெபித்துகொண்டே இருந்தால் அது நடந்துவிடுமா அல்லது தேவன் என்ன நிர்ணயித்து வைத்திருக்கிறாரோ அதுதான் நிறைவேறுமா
அப்படி தேவன் நிர்ணயித்தபடிதான் நடக்கும் என் என்றால் தேவனின் திட்டத்திலே நமது ஜெபத்தின் பங்குதான் என்ன ஐயா?
'தேவ திட்டம்' என ஏன் ஒருமையில் கூறி உள்ளீர்கள்?? தேவதிட்டங்கள் அநேகம். அவர் மனதில் இருக்கிரவைகளும் அநேகம். தேவ வழி ஒன்றி ஒன்று தான். அது இயேசு மாத்திரம் தான்.
'தேவ சித்தத்தை' தாங்கள் குறிப்பிட்டீர்கள் என்றால், மாறக்கூடிய மற்றும் மாற்றமுடியாத தேவ சித்தங்கள் நம் தேவனுக்கு உண்டு.இந்தனை 'ஒருவேளை' என வேதத்தில் அனேக இடங்களில் வருகின்ற வசனங்களிலும், தேவனின் கிருபையை முன்னிட்டு அவர் படுகிற மனஸ்தாபங்களில் இருந்தும், மாறாத கற்பனை கட்டளிகளிளிருந்தும் அறியலாம்.
ஆனால் அநாதி தீர்மானம் ஒன்றே ஒன்று தான். (தேவ சித்தம் தொடர்பான சில கட்டுரைகள் விவாதங்கள் நம் தலத்தில் உண்டு அவைகளையும் படிக்கவும்.)
ஆக, நம்முடைய உண்மை ஜெபத்தினால் பரலோகத்தின் அஸ்திபாரங்களை நிச்சயம் அசைக்க முடியும். ஆனால் அநாதி தீர்மானத்தை மாற்ற இயலாது. மாற்றமுடியாத தேவ கட்டளைகளை,தீர்க்க தரிசனங்களை , கற்பனைகளை நம்முடைய ஜெபத்தால் மாற்ற இயலாது. நம்முடைய ஜெபங்கள் தேவனுடைய சித்தினால் ஏற்படுபவையே அன்றி அவை தேவசித்ததிற்கு மாறாக நின்று பலன்களை அளிக்க இயலாது.
நானும் அநேகரின் இரட்சிப்பிற்காக ஜெபிக்கிறேன். ஆனால் ரட்சிப்பு கர்த்தருடையது என உணர்ந்தே அவ்வாறு செய்கிறேன்!!!
நம்மீது அவர் கொண்டிருக்கும் நினைவுகள் எல்லாமே தீமைக்கல்ல சமாதானத்துக்கேதுவானதுதான்
எரேமியா 29:11நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர்சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
ஆகினும் தேவனின் அந்த நன்மைகள் /ஆசீர்வாதங்கள் போன்றவற்றை சமாதானத்தோடு சுதந்தரித்துக்கொள்ள முடியாமல் நம்முடைய பாவங்களும் மீறுதல்களும் தடையாக நிற்கின்றன. அதனால் தேவன் நம்மை பல நேரங்களில் வெறுக்கவும் வழி ஏற்ப்படுகிறது.
ஏசாயா 59:2உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
எசேக்கியேல் 18:30நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லாமீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.
என்பது தேவன் நம்மை நோக்கி சொல்லும் வார்த்தைகள்.
இந்நிலையில் இயேசுவின் இரத்தத்தால் பாவங்கள் அக்கிரமங்கள் நீக்கபட்ட நாம் தேவனை நோக்கி முழு மனதோடு ஜெபிக்கும்போது மூன்று நன்மைகள் உண்டாகிறது
1. நாம் தேவனை நோக்கி ஜெபிக்கும் அந்நேரத்தில் பாவங்களை தவிர்த்து நமது மனதை ஒருமனபடுத்த முடியும் அதன் மூலம் நாம் தேவனோடு ஒப்புரவாகவும் அவர் சித்தத்துக்கு இசைந்து நடக்கவும் முடியும் .
2. எல்லா நாமத்துக்கும் மேலான இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி ஜெபிப்பதன் மூலம் தேவனின் திட்டங்கள் நிறைவேற தடைசெய்யும் சாத்தானின் தந்திரங்களை தகர்க்க முடியும்.
3. ஒருமனபட்ட ஜெபத்தின் மூலம் இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட காரியங்களை அறியவும் உணரவும் நம்மால் முடியும் அந்த விசேஷ காரியங்கள் நமது விசுவாசத்தை அசைக்க முடியாத நிலைக்கு கொண்டுசெல்லும். "விசுவாசத்தினால் எல்லாம் கூடும்"என்று வசனம் சொல்கிறதே!
எனவே தேவனின் திட்டங்கள் நமது நன்மைக்கு எதுவாக இருந்தாலும். நமக்கு ஜெபம் மிக மிக அவசியம் !
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)