உலகத்தின் பார்வையில் கிறிஸ்தவர்கள்
உலகத்தில் உள்ள அணைத்து மனிதர்களிடமும் கிறிஸ்தவர்கள் எப்படி பட்டவர்கள்
அவர்களை குறித்து உங்கள் விளக்கம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் கருத்து என்னவெனில்
(1 ) கிறிஸ்தவர்கள் நகை அணிய மாட்டார்கள்
(2 ) திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்
(3 ) வெள்ளை உடைகளை தான் உடுத்துவார்கள்
(4) பூ பொட்டு வைக்க மாட்டார்கள்
உலகத்தின் பார்வையில் இப்படிதான் இருக்கின்றது இன்றைய கிறிஸ்தவம்
சகோதரரே உண்மையாகவே கிறிஸ்துவை நேசிக்கின்றவர்கள் உலகத்தின் பார்வையிலும் சாட்சியிலும் எப்படி இருக்க வேண்டும் என்றால்
(1 ) நாம் அவர்களை அடித்தாலும் அவர்கள் நம்மை அடிக்க மாட்டார்கள்
(2 ) கிறிஸ்தவர்கள் விட்டுகொடுப்பதில் உயர்தவர்கள்
(3 ) யார் அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் உபசரிப்பதில் வல்லவர்கள்
(4 ) திருட மாட்டார்கள்
(5 ) பொய் பேசவே மாட்டார்கள்
(6 ) தானதர்மம் செய்வதில் நல்ல மனிதர்கள்
(7 ) வம்புக்கும் சண்டைக்கும போக மாட்டார்கள்
(8 ) மது சிகரட் போன்ற எந்த போதை பொருளையும் தொடமாட்டார்கள்
(9) நாம் அவர்களுக்கு கேடு நினைத்தாலும் அவர்கள் நமக்கு கேடு நினைக்காதவர்கள்
(10) நமக்காக தேசத்திற்காக ஜெபிப்பவர்கள்
இவைகள் தான் கிறித்தவர்களுக்கு உண்மையான நற்பெயர்கள்
ஆம் சகோதரனே வெள்ளை உடை உடுத்துவது நகைஅணியாமல் இருப்பதுஅவரர் தனிப்பட்ட விஷயம் கிருஷ்துவும் நமக்கு இவைகளை கற்று கொடுக்கவில்லை
இவைகளை செய்வதினால் கிறிஸ்துவை பெரும்பாலும் யாரும் ஏற்று கொள்ள முடியாது
ஆனால் பாருங்கள் சகோதரரே நான் முன்பே குறிப்பிட்டதுபோல
1 ) நாம் அவர்களைஅடித்தாலும் அவர்கள் நம்மைஅடிக்க மாட்டார்கள்
(2 ) கிறிஸ்தவர்கள் விட்டு கொடுப்பதில் உயர்தவர்கள்
(7 ) வம்புக்கும் சண்டைக்கு போக மாட்டார்கள்
ஆம் நண்பர்களே நாம் உலகத்தின் பார்வையில் இப்படி தான் இருக்க வேண்டும்
தேவ குமாரனும் ஒவ்வொரு மனிதனும் இப்படி இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்கின்றார்
இப்படி செய்வதினால் இப்படி நடப்பதினால் நாம் சுவிஷேசதினால் மாத்திரம் அல்ல நம் நடக்கையின் மூலமாக அநேகரை கொண்டுவர முடியும் நண்பர்களே
தேவனுடைய வார்த்தையை பெற்றுக் கொண்டுள்ள நாம் கிறிஸ்துவைபோல நடந்து வாழ்ந்து தேவனிடதிலும் உலக மனிதர்கள் மத்தியிலும் சாட்சியாக இருக்க வேண்டும்..
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)